Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா…கொள்ளை… கிருமி நாசினி கொள்முதலில்- கோடிக்கணக்கில் ஊழல் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரூ2.40கோடி கமிசன்…

கொரோனா…கொள்ளை… கிருமி நாசினி கொள்முதலில்- கோடிக்கணக்கில் ஊழல் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரூ2.40கோடி கமிசன்…

கொரோனா தொற்று நோய் பரவாமல் இருக்க, கிருமி நாசினியாக 5% சோடியம்ஹைப்போகுளோரைட் (SODIUM HYPOCHLORITE) சுத்தம் செய்யும் பணிகளுக்கு (DISINFECTANTS) பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 5% SODIUM HYPOCHLORITE கிருமி நாசினியின் ஒரு லிட்டர் ரூ5 கிடைக்கிறது. பிரபலமான கம்பெனிகள் அதிகபட்சமாக ஒரு லிட்டர் ரூ7க்கு விற்பனை செய்கிறது.

 கொரோவை கட்டுப்படுத்தும் கிருமி நாசினி கொள்முதலில் பல கோடி ஊழல் நடந்துள்ளதை பார்க்கும் ஓது, கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவுவதை எப்படி தடுக்க முடியும்?

 கொரோனா  தொற்று நோய் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி 28.3.2020ல் PV HYPOCHIORITE என்ற நிறுவனத்திடமிருந்து5% SODIUM HYPOCHLORITE ஒரு லிட்டர் ரூ5.70 மற்றும் 18 ஜி.எஸ்.டியுடன் கொள்முதல் செய்ய, தீர்மானம் நிறைவேற்றியது.

 சென்னை மாநகராட்சி வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மத்திய மண்டலத்துக்கு தலா 13.44இலட்சம் லிட்டர் 40 லட்சம் லிட்டர் ரூ27.11கோடிக்கு கொள்முதல் செய்ததது.

 சென்னை மாநகராட்சி 40 இலட்சம் லிட்டர் 5% சோடியம்ஹைப்போகுளோரைட் ஒரு லிட்டர் ரூ5.70 மற்றும் ஜி.எஸ்.டி 18 சதவிகிதம் என கணக்கீட்டால் ஒரு லிட்டர் ரூ6.70 விலைக்கு தான் கொள்முதல் செய்தது. உண்மையில் சோடியம்ஹைப்போகுளோரைட்டுக்கு ஜி.எஸ்.டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை மாநகராட்சியில் 18 ஜி.எஸ்.டி என்ற பெயரில் ரூ1 கமிசனாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு சென்றுள்ளது. 40இலட்சம் லிட்டருக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு 24.3.2020 அன்று மட்டும் கமிசன் ரூ40 இலட்சம்.. இதே பாணியில் சென்னை மாநகராட்சியில் 200 இலட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கிருமி நாசினி கொள்முதலில் மட்டும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு கிடைத்த கமிசன் ரூ2.40கோடி..

    தமிழகம் முழுவதும்  5% SODIUM HYPOCHLORITE கொள்முதலில் பல கோடி ஊழல் நடந்துள்ளது.. சில உதாரணங்கள் மட்டும்…இங்கே.. ஆதாரங்களுடன்…

  1. சென்னை மாநகராட்சியில் கொள்முதல் விலை ரூ5.70 ஆனால் விலக்கு அளிக்க ஜி.எஸ்.டி பெயரில் ஒரு லிட்டருக்கு(ரூ6.70) ரூ1 என 40 இலட்சம் லிட்டருக்கு24.3.2020ல் மட்டும் ரூ40 இலட்சம் கமிசன்…மேலும் 30.6.2020 வரை 240 இலட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு லிட்டருக்கு ரூ1 என 240 இலட்சம் கொள்முதலுக்கு கமிசன் 2.40கோடி சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு கமிசனாக கிடைத்துள்ளது.
  2. சுகாதாரத்துறையின் அரசாணை எண்.391/24.3.2020ல் ஒரு லிட்டர் விலை ரூ40 என இரண்டு இலட்சம் லிட்டர் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டருக்கு அதிக விலை ரூ33 என என்றால் இரண்டு இலட்சம் லிட்டருக்கு ரூ66 இலட்சம் ஊழல்…
  3. அரசாணை எண்.210/ வருவாய்த்துறை தேதி 27.4.2020 பேரூராட்சிகளில் ஒரு லிட்டர் ரூ6க்கு கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் ரூ6/-(உண்மையான விலை ரூ5மட்டுமே) என ஒரு நாளைக்கு 52,800 லிட்டர் என. 40 நாட்களுக்கு(3.5.2020வரை) ரூ1.36கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3.5.2020 முதல் 30.6.2020 வரை இந்த அரசாணையின் படி  20லட்சம் லிட்டர்  525 பேரூராட்சிகளில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.  ஒரு லிட்டருக்கு ரூ1 என கமிசன் பெற்றப்பட்டுள்ளது.

பல பேரூராட்சிகளில் கிருமி நாசினி கொள்முதல் செய்யாமல், கொள்முதல் செய்ததாக போலியாக 10 இலட்சம் லிட்டர் வரை பில் போடப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் ரூ6 என்று வைத்துக்கொண்டால் போலி மதிப்பு ரூ 60 இலட்சம்…

இப்படி கிருமி நாசினி  5% SODIUM HYPOCHLORITE கொள்முதலில் நகராட்சிகள், பேரூராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மட்டும் 15கோடி லிட்டர் கொள்முதல் செய்யபப்ட்டுள்ளது. சராசரி ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் என கணக்கீட்டால்  ரூ15கோடி ஊழல் நடந்ததுள்ளது.

அனைத்துத்துறைகளிலும் கிருமி நாசின் விவரங்களை பார்க்கும் போது, பல கோடி ஊழல் நடந்ததுள்ளது உறுதியாகிறது..

 இப்படி கிருமி நாசினி கொள்முதலில் ஊழல் நடந்தால் எப்படி கொரோனாவை முழுமையாக ஒழிக்க முடியும். அதனால் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் தமிழகத்தில் பரவி வருகிறது.

 இதே பாணியில் SURGICAL SPIRIT கொள்முதலில் பல கோடி ஊழலநடந்துள்ளது.. அதை நாளை விரிவாக பார்ப்போம்..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…தமிழகம் தனிநபர் கழிப்பறைகளில் கோடிக்கணக்கில் ஊழல்- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு…

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட தனி நபர் கழிப்பறைகளில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில்  மெகா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *