Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா –கொலை.. ஜெயராஜ்-பென்னீக்ஸ் கொலை- சிபிசிஐடி விசாரணை நியாயமாக நடக்குமா?

கொரோனா –கொலை.. ஜெயராஜ்-பென்னீக்ஸ் கொலை- சிபிசிஐடி விசாரணை நியாயமாக நடக்குமா?

  சாத்தான்குளத்தில் காவல் நிலைய அதிகாரிகளில் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பலியான  ஜெயராஜ், பென்னீக்ஸ்  தொடர்பான வழக்கை, சிபிஐ விசாரணை தொடங்கு வரை திருநெல்வேலி சிபிசிஐடி டி.எஸ்.பி அணில்குமார் விசாரிப்பார் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை என்று அறிவித்துள்ளது.

 திருநெல்வேலி சிபிசிஐடி டி.எஸ்.பி அணில்குமார் பற்றி பல சர்ச்சைகள் எழுந்துள்ளது.

உயர் நீதிமன்ற ஆணையை சற்றும் மதிக்காத அதிகாரி சிபிசிஐடி டி.எஸ்.பி அணில்குமார்,  2018ம் ஆண்டு அதாவது 4-3-2018 ல்  தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பெரியசாமியை  தட்டார்மடம் காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம் கொலைவெறியுடன் தாக்கி உயிருக்கு போராடிய வழக்கறிஞருடன் செல்பி எடுத்த எஸ்.ஐ  சுந்தரத்தின் மீதான வழக்கு  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் கவணத்திற்கு சென்று தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படி வழக்கை விசாரித்து 6 வாரத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல்  செய்ய  சிபிசிஐடி தென்மண்டல ஐஜி இடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி விசாரணை செய்து  ஆறு வாரத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளபோதும், விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட அதிகாரியான  சிபிசிஐடி DSP அணில்குமார் இன்றுவரை உயர்நீதிமன்ற ஆணையை மதித்து இறுதி அறிக்கையை இரண்டு வருடங்களாகியும் தாக்கல் செய்ய வில்லை இவர்களிடம் நீதியை எப்படி எதிர்பார்க்கமுடியும். மாநிலத்திலேயே முதன்மை புலனாய்வுப் பிரிவாக இயங்கும் சிபிசிஐடி காவல்துறையியான  சிபிசிஐடி அதிகாரிக்கு சுயமாக சிந்தித்து செயல்படக்கூடிய திறன் இருக்க வேண்டும் அதுவும் இல்லை. நீதிமன்ற உத்தரவை மதித்து நடக்கக்கூடிய திறன் இருக்க வேண்டும் அதுவும்  இல்லை. இதனால் இந்த வழக்கு நீதிமன்ற உத்தரவுபடி ஆறு வாரத்திற்குள் இறுதி அறிக்கை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் நீதிமன்ற அவமதிப்பு அறிவிப்பு அனுப்பினார். அறிவிப்பை பெற்றுக்கொண்ட சிபிசிஐடி அறிவுஜீவிகள் இந்த வழக்கை mediation  centre க்கு அனுப்பிவைத்தார்கள் பின்னர் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரிடம் விளக்கம்  கேட்கப்பட்டு மேற்படி வழக்கின் கோப்புகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. சிபிசிஐடி காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கை ஒழுங்காக விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்திருந்தால் நீதிமன்றத்தின் மீது சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கும் ,  அவரைச் சார்ந்த காவல் துறை அதிகாரிகளுக்கும் நீதிமன்றத்தின் மீது பயம் ஏற்ப்பட்டிருக்கும். சிபிசிஐடி காவல் துறையே நேர்மையாக செயல்படாத காரணத்தினால் இந்த அதிகாரிகள்  நீதிமன்றத்தால் ஒரு காவல் உதவி ஆய்வாளரை என்ன செய்யமுடியும் என்ற ஆணவத்தில் தொடர்ந்து  இப்படிப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதான் தூத்துக்குடி மாவட்ட சிபிசிஐடி காவல் துறையின் லட்சணம்.

    தற்போது சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீசால் தந்தை மகன் கொலை செய்யப்பட்ட வழக்கையும் அதே சிபிசிஐடி டி.எஸ்.பி அணில்குமாரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது கவலையளிக்கிறது.  உயர் நீதிமன்றத்தின்  ஆணையை மதிக்காத  சிபிசிஐடி டி.எஸ்.பி அணில்குமார் எப்படி நியாயமான விசாரணை நடத்துவார் என்ற கேள்வி எழுந்துள்ளது..

  நியாயமான கேள்விகள்தான்.. சிபிஐ விசாரணையை விரைவில் தொடங்கவிட்டால், சாத்தான்குளம் கொலை வழக்கும் கேள்விக்குறியாகிவிடும்..

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி- நுங்கம்பாக்கம் மண்டலம்.. பிரகாஷ் ஐ.ஏ.எஸ் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா?- சமூக இடைவெளி எங்கே?- அப்பாவிகளுக்கு மட்டும் உபதேசமா?-

சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவு இருக்கிறதா.. இவர்களை வைத்து சென்னை மாநகராட்சி எப்படி செயல்படுகிறது என்ற கேள்விகள்.. சந்தேகங்கள் எழுந்துள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *