Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா..நகராட்சி நிர்வாகம்- சட்டத்துக்கு புறம்பாக செயற் பொறியாளர் பதவி உயர்வு.. நகராட்சிகளில் சரவணன் போட்டோ…

கொரோனா..நகராட்சி நிர்வாகம்- சட்டத்துக்கு புறம்பாக செயற் பொறியாளர் பதவி உயர்வு.. நகராட்சிகளில் சரவணன் போட்டோ…

    கொரோனா நோய் மின்னல் வேகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் பரவிவருகிறது. ஆனால் கொரோனா பரவலைப்பற்றி கவலைபடாமல், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதாக போடப்பட்ட போலி பில் மூலம் கொள்ளையடித்த பணத்தில் நகராட்சி நிர்வாகத்துறை ஆணையரகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் பணியாற்றும் உதவி செயற்பொறியாளர் பதவியிலிருந்து செயற்பொறியாளர் பதவி உயர்வு தகுதி பட்டியலில்(சீனியார்ட்டி பேனல்) இடம் பெற ஏலமே நடந்தது. செயற்பொறியாளர் தகுதி பெற சீனியார்ட்டி பட்டியலில் இடம் பெற ரூ10 இலட்சம்  ஏலம் கேட்டார்கள்.. தகுதி இல்லாதவர்கள் பலர் ஏலத்தில் கலந்து கொண்டதால், விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக சீனியார்ட்டி பேனலில் இடம் பெற்றார்கள்.

 செயற்பொறியாளர் பதவி உயர்வுக்கான  தகுதி பட்டியல்(சீனியார்ட்டி பேனல்) அரசாணை எண்.212/22.6.2020 வெளியானது.

  அரசாணை எண்.212ல் தகுதி பட்டியலில்(சீனியார்ட்டி பேனல்) பெயர் இடம் பெறாதவர்கள் 30 நாட்களுக்கள் எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என்று 22.06.2020 கூறப்பட்டுள்ளது. 30 நாட்கள் என்பது 21.07.2020 என்று அர்த்தம்.

ஆனால் சட்டத்துக்கு புறம்பாக, 29.06.2020ல் ஆர்.ஒ.சி எண்.16846/2019/F-1ல் செயற்பொறியாளர் பதவி உயர்வு கொடுத்து பட்டியல் வெளியிடப்பட்டது. நகராட்சி நிர்வாக ஆணையரகத்தை பொறுத்தமட்டில் பணம் மட்டுமே பிரதானம் என்று அரசாணை 212ஐ காலில் போட்டு மிதித்து, பதவி உயர்வு பட்டியல் இதோ…

  1. முருகேசன் – திருப்பூர் மண்டல துணை இயக்குநர்
  2. சேருமாகணி – தூத்துக்குடி மாநகராட்சி
  3. கருப்பையா-  பேரூராட்சி இயக்குநரகத்தில் அயல்பணி
  4. செல்வராஜ் – பேரூராட்சி இயக்குநரகத்தில் அயல்பணி
  5. இளங்கோவன் – திருநெல்வேலி மண்டல துணை இயக்குநர்
  6. ஜெகதீஸ்வரி – பேரூராட்சி இயக்குநரகத்தில் அயல்பணி
  7. மகேந்திரன் – பேரூராட்சி இயக்குநரகத்தில் அயல்பணி
  8. ராஜேந்திரன் – உதகமண்டலம் நகராட்சி
  9. திருமதி கருப்பத்தாள் – மதுரை மாநகராட்சி
  10. திருமதி பாக்யலட்சுமி – நகராட்சி நிர்வாக ஆணையரகம
  11. கருப்பையா ராஜா தாம்பரம் நகராட்சி – மண்டல பொறியாளர் செங்கல்பட்டு மண்டலம்.

ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாதவர்களுக்குதான் பதவி உயர்வு கொடுக்கப்படும். ஆனால் ஊழல் சிக்கி விசாரணையில் உள்ள கருப்பைராஜா தாம்பரம் நகராட்சி பொறியாளர் மற்றும் பொறுப்பு ஆணையருக்கு செயற்பொறியாளர் பதவி உயர்வு கொடுக்கப்பட்டு, அதுவும் செங்கல்பட்டு மண்டல பொறியாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது சட்டத்துக்கு புறம்பானது.

 கருப்பையாராஜா மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் இரண்டு புகார்கள் மீது விசாரணை நடந்து வருகிறது.

  தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவகத்தில் கருப்பையா ராஜா மீது பல புகார்கள் நிலுவையில் உள்ளது.  195/2019 மற்றும் 003/ந/2020 ஆகிய இரண்டு புகார்கள் மீது விசாரணை முடிந்து, இறுதி தீர்ப்பு வெளியாகும் நிலையில் உள்ளது.

 இப்படி ஊழலில் சிக்கிய கருப்பையா ராஜாவுக்கு எப்படி செயற்பொறியாளர் பதவி உயர்வு கொடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 மக்கள்செய்திமையம்  சட்டத்துக்கு புறம்பாக செயற்பொறியாளர் பதவி உயர்வு கொடுக்கப்பட்டது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

 இனி நகராட்சிக்கு..நகராட்சி மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படத்துக்கு பதிலாக, நிழல் அமைச்சர் கம் உதவியாளர் சரவணன் போட்டோ மாட்ட சிறப்பு அரசாணை வெளியிட நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது..

சரவணன், வருமான வரித்துறையில் வழக்கு நிலுவையில் இருப்பதை மறந்துவிட்டாரா?

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி- நுங்கம்பாக்கம் மண்டலம்.. பிரகாஷ் ஐ.ஏ.எஸ் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா?- சமூக இடைவெளி எங்கே?- அப்பாவிகளுக்கு மட்டும் உபதேசமா?-

சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவு இருக்கிறதா.. இவர்களை வைத்து சென்னை மாநகராட்சி எப்படி செயல்படுகிறது என்ற கேள்விகள்.. சந்தேகங்கள் எழுந்துள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *