Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா – ரூ3,55,595… எஸ்.ஆர்.எம் மருத்துவமனையா – கொள்ளைக்கார மருத்துவமனையா… பி.பி.இ கிட்டுக்கு ரூ2,40,000/-

கொரோனா – ரூ3,55,595… எஸ்.ஆர்.எம் மருத்துவமனையா – கொள்ளைக்கார மருத்துவமனையா… பி.பி.இ கிட்டுக்கு ரூ2,40,000/-

 கொரோனாவுக்காக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களிடம் விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக பல லட்சம் வசூல் செய்யப்படுகிறது. இந்த தனியார் மருத்துவமனைகளின் வசூல் வேட்டையை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

  பெரம்பலூர் மக்களவைத் தொகுதி திமுக எம்.பி பாரிவேந்தர் பச்சமுத்துவின் காட்டங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்ற நமது நண்பரின் பில்…

  1. Professional charges – Rs 2000X16days = Rs 32,000
  2. Investigation Charges- enclosed – Rs3190
  3. Pharmacy charges – Rs 405/-
  4. Isolation Room rent –Rs 5000X16=Rs80,000
  5. PPE Kit ward – Rs 2000X120 KIT =Rs 2,40,000

Total amount – Rs 3,55,595/-

பாரிவேந்தர் பச்சமுத்துவின் காட்டாங்குளத்தூர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்கு மருந்து, மாத்திரை கொடுக்கவில்லை. மருந்து, மாத்திரைகளின் செலவு ரூ405மட்டுமே. ஆனால் நோயாளி தங்கியிருந்த வார்டுக்கு  ஒரு நாளைக்கு ரூ5000 என வாடகை ரூரூ80,000…

அதைவிட கேவலம், கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்தவர்கள் 120 பி.பி.இ கிட் பயன்படுத்தினார்களாம்.  ஒரு பி.பி.இ கிட்டின் விலை ரூ2000 என 120 கிட்டுக்கு ரூ2,40,000/- இதை விட கேவலம் இந்தியாவில் எங்கும் கிடையாது…

  தனியார் மருத்துவமனைகளில் இப்படிதான் வசூல் செய்யப்படுகிறது. பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வயிற்று போக்கு என்று சிகிச்சை பெற சென்றேன். டாக்டர் கட்டணம் ரூ200/-, டாக்டர்கள் அணியும் பி.பி.இ கிட், நர்சுஸ்கள் அணியும் கையுறை, மாஸ்க் இவற்றிக்கு ரூ450/- ஊசி மருந்து ரூ40/- மாத்திரை ரூ75/- என ரூ765 வசூலித்தார்கள்.

  வயிற்று போக்கு கொடுக்கப்பட்ட மாத்திரை, ஊசியின் மதிப்பு ரூ115மட்டுமே…

 கொரோனா கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் ஊரடங்கு  உத்தரவு அமுல் செய்யப்பட்டது முதல் தனியார் மருத்துவமனைகளில் அப்பாவி மக்களிடம் கொள்ளையடிக்கப்படுகிறது..

 தனியார் மருத்துவமனைகளில் அடிக்கும் கொள்ளையைப்பற்றி முழுமையாக  தெரிந்தும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்யும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் தமிழகத்தில் அதிகாரமையத்தில் வலம் வருவது வேதனியாக இருக்கிறது ..

 காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கொரோனா பில்லை அம்பலப்படுத்திவிட்டோம் ..இனி நடவடிக்கை எடுக்க போவது யார்?

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… விழுப்புரம் முகக் கவசம் கொள்முதலில் ஊழல்..

உள்ளாட்சி அமைப்புகளில் கிருமி நாசினி, முக கவசம், பளிச்சிங் பவுடர் கொள்முதலில் அத்துமீறிய ஊழல் நடந்து வருகிறது.  விழுப்புரம் நகராட்சியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *