Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா..நகராட்சி நிர்வாகம் செயற் பொறியாளர் பதவி உயர்வு.. வாங்க..சார்..வாங்க… ரூ10 இலட்சம்.. ஒரு தரம்..இரண்டு தரம்..மூன்று தரம்…

கொரோனா..நகராட்சி நிர்வாகம் செயற் பொறியாளர் பதவி உயர்வு.. வாங்க..சார்..வாங்க… ரூ10 இலட்சம்.. ஒரு தரம்..இரண்டு தரம்..மூன்று தரம்…

கொரோனா நோய் மின்னல் வேகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் பரவிவருகிறது. ஆனால் கொரோனா பரவலைப்பற்றி கவலைபடாமல், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதாக போடப்பட்ட போலி பில் மூலம் கொள்ளையடித்த பணத்தில் நகராட்சி நிர்வாகத்துறை ஆணையரகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் பணியாற்றும் உதவி செயற்பொறியாளர் பதவியிலிருந்து செயற்பொறியாளர் பதவி உயர்வுக்கு ரூ10 இலட்சம் வரை இலஞ்சம் கொடுத்து, பதவி உயர்வு தகுதி  பட்டியலில்(சீனியார்ட்டி பேனல்) இடம் பெற்றுள்ளார்கள்..

  செயற்பொறியாளர் பதவி உயர்வு தகுதி பட்டியலில்(சீனியார்ட்டி பேனல்) இடம் பெற ஏலமே நடந்தது. தகுதி இல்லாதவர்கள் பலர் ஏலத்தில் கலந்து கொண்டதால், விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக சீனியார்ட்டி பேனலில் இடம் பெற்றுள்ளது வேடிக்கையாக உள்ளது.

 செயற்பொறியாளர் பதவி உயர்வுக்கான  தகுதி பட்டியல்(சீனியார்ட்டி பேனல்) அரசாணை எண்.212/22.6.2020 வெளியானது.

 செயற்பொறியாளர் பதவி உயர்வு பெற்றவர்கள், நகராட்சிகளில் ஆணையர் பொறுப்பிலும் பணியாற்றலாம்.. தற்போது தாம்பரம் நகராட்சியில்  உதவி செயற்பொறியாளரே பொறுப்பு ஆணையராக பணியாற்றுவது தனி கதை…இதே போல் சில நகராட்சிகளிலும் ஆணையர் பொறுப்பை கூடுதலாக விலை கொடுத்து வாங்கியுள்ளார்கள்..

செயற்பொறியாளர் பதவி உயர்வு தகுதி பட்டியலில்(சீனியார்ட்டி பேனல்)13 பேர் இடம் பெற்றுள்ளார்கள்.  அதில் முதலில் ஐந்து பேர்  மட்டுமே முருகேசன் பொள்ளாச்சி, கிருஷ்ணகுமார்- (ஒய்வு பெற்றுவிட்டார்), சேருமக்கனி அருப்புக்கோட்டை,  கருப்பையா பேரூராட்சி இயக்குநரகம் அயல்பணி, செல்வராஜ் அயல்பணி பேரூராட்சி இயக்குநரகம்  பதவி உயர்வுக்கு தகுதி பெற்றவர்கள். கிருஷ்ணகுமார் ஒய்வு பெற்றுவிட்டதால், மயிலாடுதுறை இளங்கோ பதவி உயர்வுக்கு தகுதியானவர்..

  பட்டியலில் மற்ற ஏழு பேரும் செயற் பொறியாளர் பதவி உயர்வுக்கு தகுதி பட்டியலில்(சீனியார்ட்டி பேனலில்) இடம் பெற  தகுதி இல்லாதவர்கள். ஆவடி நகராட்சியில் பொறியாளராக பணியாற்றிய சீனிவாசன், நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சிலர் பதவி உயர்வுக்கு இலஞ்சம் கொடுக்காத  காரணத்தால், இலஞ்சம் கொடுத்த ஏழு பேர் தகுதி பட்டியலில்(சீனியார்ட்டி பேனலில்) இடம் பெற்றுவிட்டார்கள்..

  செயற்பொறியாளர் பதவி உயர்வு தகுதி  பட்டியலின் பேரில், பதவி உயர்வு கொடுக்கப்பட்டவுடன், உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு பெற இப்போது முன் பணம் கொடுத்து டோக்கன் பெறும், அடுத்த வசூல் தொடங்கிவிட்டது. திருவேற்காடு நகராட்சி பொறியாளர் ஆனந்தமானவர் உதவி செயற் பொறியாளர் பதவி உயர்வுக்கு  முதல்  டோக்கனை பெற்றுவிட்டு மகிழ்ச்சியில் உள்ளார்.

 செயற்பொறியாளர் பதவி உயர்வு தகுதி பட்டியலில்(சீனியார்ட்டி பேனல்) இடம் பெற்றவர்கள், அதற்குரிய இலஞ்சத்தை கொடுத்துவிட்டு, பதவி உயர்வு தகுதி பட்டியலை விலைக்கு வாங்கியவர்கள் (சீனியார்ட்டி பேனலில்) இடம் பெற்றவர்கள்  சரவணன் பவன் ஹோட்டலில் காபி குடித்தார்கள்.. என்ன இருந்தால் சரவணபவன் டிகிரி காபி டேஸ்ட்.. டேஸ்ட்தான் என்று சரவணனை வாழ்த்தினார்கள்..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…தமிழகம் தனிநபர் கழிப்பறைகளில் கோடிக்கணக்கில் ஊழல்- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு…

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட தனி நபர் கழிப்பறைகளில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில்  மெகா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *