Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா… டூபாக்கூர் நிறுவனத்தில்- மாஸ்க் கொள்முதல் செய்த “ FECKLESS” பிரகாஷ் ஐ.ஏ.எஸ்… ரூ59 இலட்சம் கமிசன்…

கொரோனா… டூபாக்கூர் நிறுவனத்தில்- மாஸ்க் கொள்முதல் செய்த “ FECKLESS” பிரகாஷ் ஐ.ஏ.எஸ்… ரூ59 இலட்சம் கமிசன்…

சென்னை மாநகராட்சியில் 14 இலட்சம்  3 ply மாஸ்க், 5 சதவிகிதம் ஜி.எஸ்.டியுடன் ரூ9.71விலைக்கு டில்லியை சேர்ந்த   டூபாக்கூர் டில்லி  GREENVAC SOLUTION  நிறுவனத்திடம் கொள்முதல் செய்ய, 28.3.2020ல் சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டில்லி  GREENVAC SOLUTION  நிறுவனம், மாஸ்க் தயாரிக்கவே இல்லை. Greenvac works with facility owners, Developers, Architects, Consultants, Governments or stake holders to create a SMART, Green, Healthy & Clean environment through efficient solutions it offers.

 Greenvac Solutions Pvt Ltd help you to manage the organic waste in an ecofriendly, economical & efficient manner.

 இந்த டூபாக்கூர் நிறுவனத்தின் பின்னணியில் தலைமைப் பொறியாளராக பதவி உயர்வு பெற்று, அதிகாரமையத்தில் வலம் வரும் அதிகாரி இருக்கிறார். டூபாக்கூர் டில்லி  GREENVAC SOLUTION  நிறுவனத்தின் பெயரில் 14இலட்சம் மாஸ்க் சப்ளை செய்ய ஆர்டர் பெற்று, தமிழ்நாட்டில் அடிமாட்டு விலைக்கு ரூ5க்கு மாஸ்க் தயாரித்து, சென்னை மாநகராட்சிக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளது.

 சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் அரசாணை எண்.391/24.3.2020யில் 3 ply mask விலை ரூ7 என நிர்ணயம் செய்து ஐந்து மாஸ்க் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

 அரசாணை எண்.391ன்படி ஒரு மாஸ்க் ரூ7 என்பதை கணக்கீட்டால் சென்னை மாநகராட்சி ஒரு மாஸ்க் கொள்முதல் விலை ரூ9.25(ஜி.எஸ்.டி இல்லாமல்). ஒரு மாஸ்க் கொள்முதல் ஊழல் ரூ.2.25 என கணக்கீட்டால் 14 இலட்சம் மாஸ்க்கில் நடந்த ஊழல் அதாவது கமிசன் ரூ31.50 இலட்சம்..

 உண்மையில் 14 இலட்சம்  3 ply மாஸ்க் அடிமாட்டு விலைக்கு திருப்பூரில் உள்ள நிறுவனத்தில் ஒரு மாஸ்க் ரூ5க்கு கொள்முதல் செய்யப்பட்டு, GREENVAC SOLUTION  நிறுவனத்தின் பெயரில் போலி பில் கொடுக்கப்பட்டுள்ளது.

  ஒரு மாஸ்க் ரூ5 என்று கணக்கீட்டால், 14 இலட்சம் மாஸ்க்கின் கொள்முதல் ம் விலை ரூ70இலட்சம். ஆனால் ஜி.எஸ்.டி இல்லாமல் ரூ.1.29கோடி(ஜி.எஸ்.டி இல்லாமல்)பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. 14 இலட்சம் மாஸ்க் கொள்முதலில் ரூ59 இலட்சம் கமிசன் பெறப்பட்டுள்ளது.

 ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், அதிகாரமையத்தில் ஆட்டம் போடும் தலைமைப் பொறியாளர் நந்தகுமாரும் 14 இலட்சம் மாஸ்க் கொள்முதலில் நடந்த கொள்ளை ரூ59இலட்சம்…

  கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், கமிசன் அடிக்கும் அதிகாரிகளை வைத்துக்கொண்டு, சென்னையில் கொரோனாவை எப்படி கட்டுப்படுத்த முடியும்..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…தமிழகம் தனிநபர் கழிப்பறைகளில் கோடிக்கணக்கில் ஊழல்- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு…

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட தனி நபர் கழிப்பறைகளில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில்  மெகா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *