Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா…மின்னல் வேகத்தில்- 13.48கோடி மாஸ்க் கொள்முதலில் ஊழலா?- கமிசன் 50பைசாவா… 60பைசாவா…

கொரோனா…மின்னல் வேகத்தில்- 13.48கோடி மாஸ்க் கொள்முதலில் ஊழலா?- கமிசன் 50பைசாவா… 60பைசாவா…

 தமிழ்நாட்டில் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. வருவாய் நிர்வாக ஆணையராக ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் இருந்த போது, 2.08கோடி ரேசன் கார்டுகளில் 6.74கோடி பேருக்கு தலா இரண்டு மாஸ்க் கொடுக்க முடிவு செய்து, ரூ28 கோடி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியானது.

 மாஸ்க் கொள்முதலுக்கு, டெண்டர் டிரான்பரன்சி சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், தினத்தந்தி நாளில் பூதக்கண்ணாடி வைத்து தேடும் அளவுக்கு விளம்பரம் கொடுக்கப்பட்டது.

 டென்டரில் உள்ள விதிமுறைகள்,  திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு மாஸ்க் டெண்டரை கொடுப்பதுக்கு ஏற்றபடி அமைக்கப்பட்டு இருந்தது.

 தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அமைப்பின் டெண்டரின் படி டெண்டர் விண்ணப்பங்களை 22.6.2020 ம்தேதி 3மணிக்குள் சமர்பித்திருக்க வேண்டும். 22.06.2020 மதியம் 3.30மணிக்கு டெண்டர் ஒப்பன் செய்யப்பட வேண்டும்.

 இந் நிலையில் வருவாய் நில நிர்வாக ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டு, பணிந்திரரெட்டி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டு, பணியில் சேர்ந்தார்.

 13.48கோடி மாஸ்க் டெண்டரில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளது. அதனால் டெண்டர் முடிந்து நான்கு நாட்களாகியும், 13.48கோடி மாஸ்க் கொள்முதல் டெண்டர் யார் கொடுக்கப்பட்டது, என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது என்ற விவரங்களை, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் அலுவலகம் வெளியிட மறுக்கிறது.

 மாஸ்க் கொள்முதல் குழுவின்  இயக்குநராக இருக்கும் ஜெகந்நாதன் ஐ.ஏ.எஸ், ஆணையர் பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ் இருவர்  குழு மாஸ்க் கொள்முதலில் மெகா கட்ட பஞ்சாய்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறது.

 தமிழகம் முழுவதும் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று பரவிக்கொண்டு இருக்கு போது, ரேசன் கார்டுகளில் விலை இல்லாத மாஸ்க் கொடுக்கும் டெண்டரில் முறைகேடு நடந்துள்ளது வேதனையாக இருக்கிறது.

 13.48 கோடி மாஸ்க் கொள்முதலில் கமிசன் 50பைசாவா/60பைசாவா  என்பதில்தான் சிக்கல் நீடிக்கிறது. கமிசன் 50 பைசாவா/60 பைசாவா முடிவாகிவிட்டால், மாஸ்க் டெண்டர் கொள்முதல் இறுதி செய்யப்பட்டுவிடும்..ஆனால் அமைச்சர் உதயக்குமார் மாஸ்க் ஒன்றுக்கு ரூ1 கமிசன் கேட்டார் என்று நேர்மையான அதிகாரிகள் புலம்புகிறார்கள்.

கொரோனா கொள்முதல் கொள்ளையில் அமைச்சர்களைவிட அதிகாரிகள்தான் இலஞ்ச பண மழையில் குளிக்கிறார்கள்..

  இந்த நிலையில் கொரோனாவிலும் கொள்ளையடிக்கும் அதிகாரிகள் இருக்கும் வரை கொரோனா மின்னல் வேகத்தில் பரவுவதை தடுக்க முடியாது..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…தமிழகம் தனிநபர் கழிப்பறைகளில் கோடிக்கணக்கில் ஊழல்- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு…

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட தனி நபர் கழிப்பறைகளில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில்  மெகா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *