Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா.. அதிமுக ஊழல் அரசுடன்+ மோடி அரசு ஊழல் கூட்டணி… சுதாதேவி ஐ.ஏ.எஸ் அயல்பணி நீட்டிப்பு…

கொரோனா.. அதிமுக ஊழல் அரசுடன்+ மோடி அரசு ஊழல் கூட்டணி… சுதாதேவி ஐ.ஏ.எஸ் அயல்பணி நீட்டிப்பு…

தமிழகத்தில் அதிமுக ஊழல் அரசுடன், மத்தியில் ஆட்சியில் இருக்கும் மோடி தலைமையிலான பாஜக அரசு ஊழலில் கூட்டணி அமைத்துவிட்டது.

 தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்க்கு மூன்று மாதம் பணி நீட்டிப்பு கொடுத்த, பாஜக அரசு, வருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் சுதாதேவி ஐ.ஏ.எஸ்க்கு 06.07.2020 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு அயல் பணி நீட்டிபு கொடுத்துள்ளது.

இமாச்சல பிரதேச ஐ.ஏ.எஸ் அதிகாரியான சுதாதேவி ஐ.ஏ.எஸ், 29.6.2017ல் தமிழக அரசின் அயல்பணிக்கு மாற்றப்பட்டார். தமிழக அரசு பணியில் சேர்ந்த சில மாதங்களில் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் சிபாரிசில், தமிழ்நாடு நுகர்பொருள்வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக மாறுதல் செய்யப்பட்டார்.

 சுதாதேவி ஐ.ஏ.எஸ், நுகர்பொருள்வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டது முதல் இன்று வரை விதிமுறைகளை, சட்டத்துக்கு புறம்பாக ரூ2000கோடிக்கு கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமிக்கு டெண்டர் கொடுத்துள்ளார்.

 இந் நிலையில் 2018 ஜூலை மாதம் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் வீடு, அலுவலகங்களில் இந்தியா முழுவதும் 70 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. வருமான வரித்துறை சோதனைக்கு பின் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி சுமார் ரூ1250கோடிக்கு வரி ஏய்ப்பு செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.குமாரசாமியின் ஒப்புதல் வாக்குமூலத்தின் பேரில் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது..

  கிறிஸ்டி புட்ஸ் தொடர்பான வருமான வரி சோதனையின் போது,சுதாதேவி ஐ.ஏ.எஸ் வீட்டில்  நடத்தப்பட்ட வருமான வரித்துறை  ரெய்டில் கணக்கில் வராத ரூ4கோடியும், பல லட்சம் மதிப்புள்ள அமெரிக்கா டாலரும் கைப்பற்றப்பட்டது.

  மக்கள்செய்திமையம், சுதாதேவி ஐ.ஏ.எஸ் வருமான வரித்துறை ரெய்டில் சிக்கியது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளருக்கும், இமாச்சல பிரதேச தலைமைச் செயலாளருக்கும் கடிதம் அனுப்பியது.

 இமாச்சல பிரதேச தலைமைச் செயலாளர் 24.7.2018ல் சுதாதேவி ஐ.ஏ.எஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்தார்.

 ஆனால் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் பின்னணி இருந்த காரணத்தால்,  சுதாதேவி ஐ.ஏ.எஸ் மீது நடவடிக்கைஎடுக்கவிலை.  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பணியில் இன்று வரை தொடருகிறார்.

 மக்கள்செய்திமையம் 02.3.2020ல் சுதாதேவி ஐ.ஏ.எஸ் அயல்பணி நீட்டிக்க கூடாது என்று மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது.

 ஆனால் சுதாதேவி ஐ.ஏ.எஸ் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் பின்னணியில் இருப்பதால், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ் பரிந்துரையின்படி 6.7.2020 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு அயல் பணி நீட்டிப்பு, மத்தியில் ஆளும் பொறுப்பில் இருக்கும் பாஜக அரசு கொடுத்துள்ளது.

 தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக ஊழல் அரசுடன், மத்தியில் ஆளும் பொறுப்பில் இருக்கும்  பாஜக அரசு ஊழல் கூட்டணி அமைத்துவிட்டது என்பது உறுதியாகி உள்ளது.

 சுதாதேவி ஐ.ஏ.எஸ் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி, அமைச்சர் காமராஜ் கூட்டணியின் ஊழல்கள் உணவுத்துறையில் தமிழக அரசில் தொடரும்..

 வாழ்க.. அதிமுக அரசின் ஊழல்கள்… வளர்க அதிமுக ஊழல் அரசுடன் கூட்டணி அமைத்து இருக்கும் பாஜக அரசு…

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…தமிழகம் தனிநபர் கழிப்பறைகளில் கோடிக்கணக்கில் ஊழல்- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு…

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட தனி நபர் கழிப்பறைகளில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில்  மெகா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *