Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா… மதுரவாயல் காவல்துறை ஆதரவுடன்- டாஸ்மாக் கடை…

கொரோனா… மதுரவாயல் காவல்துறை ஆதரவுடன்- டாஸ்மாக் கடை…

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அய்யா ஏ.கே.விஸ்வநாதன், சென்னை காவல்துறையில் எல்லையில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்று கூறியுள்ளார். ஆனால் சென்னை காவல்துறையில் எல்லையில் மதுரவாயல் காவல்துறை அதிகாரிகள் ஆதரவுடன், ஆலப்பாக்கம் டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள வாயிலில் பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மதுபானங்கள் எம்.ஆர்.பி விலையை விட ரூ50 அதிகம் வைத்து, 24மணி நேரமும் விற்பனை நடைபெறுகிறது.

 25.6.2020 மதியம் மூன்று மணிக்கு ஆலப்பாக்கம் டாஸ்மாக் கடைக்கு கைலி கட்டிக்கொண்டு சென்ற போது, கூட்டம், கூட்டமாக மது வாங்கிக்கொண்டு இருந்தார்கள். சிறிது நேரம் கழித்து, நாம் டாஸ்மாக் விற்பனை மையத்தை  புகைப்படம் எடுத்துக்கொண்டு  விற்பனை விலையை விட ரூ40 அதிகம் கொடுத்து, ஒரு குவார்ட்டர் விலைக்கு வாங்கினோம்…டாஸ்மாக் கடையிலிருந்து வெளியே வந்தவுடன் ஒருவர் அய்யா, குவார்ட்டருக்கு ரூ30 போதவில்லை ரூ10 கொடுங்க என்று 60 வயதானவர் கெஞ்சினார், அவரிடம் குவார்ட்டரை கொடுத்தவுடன், கையில் இருக்கும் பணம் ரூ74ஐ கொடுத்தார், நாம் பணம் வேண்டாம் என்றவுடன்  நம்மை மனதார வாழ்த்தினார்..இதே போல் ஆலப்பாக்கம் மட்டுமல்ல, பூந்தமல்லி உள்ளிட்ட பல இடங்களில் 24மணி நேரமும் டாஸ்மாக் கடை நடக்கிறது.

 டாஸ்மாக் ஊழியர் நம்மிடம்  24மணி நேரம் விற்பனை சார்..போலீசார் பயமெல்லாம் கிடையாது.. செல்போனில் பேசிவிட்டு வாங்க சார் என்று அன்புடன் செல்போன் எண்ணை கொடுத்தார்…

 இந்த இலட்சணத்தில் தான் சென்னை மாநகர காவல்துறை செயல்படுகிறது…இந்த போட்டோ வெளியிட்டதற்காக, குண்டர் சட்டத்தில், பொய் வழக்கில் நாம் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

 ஏனென்றால் பத்திரிகையாளர்கள்ஆதாவு பெற்றவர் சென்னை  மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஐ.ஏ.எஸ்….

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…தமிழகம் தனிநபர் கழிப்பறைகளில் கோடிக்கணக்கில் ஊழல்- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு…

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட தனி நபர் கழிப்பறைகளில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில்  மெகா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *