Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா… சென்னை மாநகராட்சி… 46 நாட்களில் போலி பில் ரூ39.52கோடி- பிரகாஷ் ஐ.ஏ.எஸ் “DEAD BEAT”…

கொரோனா… சென்னை மாநகராட்சி… 46 நாட்களில் போலி பில் ரூ39.52கோடி- பிரகாஷ் ஐ.ஏ.எஸ் “DEAD BEAT”…

  கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 20.3.2020 முதல் 03.05.2020 வரை 46 நாட்களுக்கு செலவு செய்யப்பட்ட தொகை ரூ39.52கோடி. உண்மையில் சென்னை மாநகராட்சி 46நாட்களுக்கு ரூ39.52கோடி செலவு செய்திருந்தால், கொரோனா தொற்று சென்னையிலிருந்து ஒடிபோய் கடலில் மூழ்கியிருக்கும்.

    சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்று கட்டுப்படுத்த செலவு என்ற பெயரில் அதிகாரிகள் போலி பில் போட்டு கொள்ளையடித்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    20.3.2020 முதல் 3.5.2020 வரை போடப்பட்ட போலி பில்..

  1. Bleaching Powder  -ரூ4,43,67,000(ரூ4.43கோடி)
  2. Triple layer mask – ரூ3,45,97,500(ரூ3.45கோடி)
  3. Sodium Hypochiorite –ரூ2,71,19,232(ரூ2.71கோடி)
  4. Yellow bag(மஞ்சள்  பை)  -ரூ37,20,000(ரூ37.20 இலட்சம்)
  5. Cotton Mask- ரூ1,15,50,000(ரூ1.15கோடி)
  6. Hydrated Lime powder – 45,00,000(ரூ45இலட்சம்)
  7. FOOD உணவு – ரூ18,04,59,000(ரூ18.04கோடி)

ஆக மொத்தம் ரூ30,63,12,732(ரூ30.63கோடி)

போலி பில் என்று எப்படி என்ற சந்தேக கேள்வியை கொள்ளையடித்த அதிகாரிகள் கேட்கலாம்..

  1. 20 இலட்சம்  Triple layer mask  கொள்முதல் விலை ரூ3,45,97,500 என்றால் ஒரு மாஸ்க் விலை ரூ17.30…

 சுகாதாரம் மற்றுக் குடும்ப நலத்துறை அரசாணை எண்.391/24.3.2020ன்படி Triple layer mask  விலை ரூ7 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி கொள்முதல் செய்த விலை ரூ17.30/- ஒரு மாஸ்க் அடிக்கப்பட்ட கொள்ளை ரூ10.30 என்றால் 20 இலட்சம் மாஸ்க்கு அடித்த கொள்ளை ரூ 2கோடியை தாண்டும்.

  • பளிச்சிங் பவுடர்  1000டன் ரூ4,43,67,000க்கு(ரூ4.43கோடி) கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அப்படியென்றால்  ஒரு டன் ரூ44,367/- அதாவது ஒரு கிலோ ரூ.44.36பைசா..வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசாணை எண்.210/27.4.2020ல் நிர்ணயிக்கப்பட்ட விலை  ஒரு கிலோ 40/- ஆனால் சென்னை மாநகராட்சி கொள்முதல் விலை ரூ44.36 பையா. ஒரு கிலோவுக்கு ரூ4.36என்றால் 1000 டன்னுக்கு கணக்கு போட்டு பாருங்கள்..ரூ44.36இலட்சம் கொள்ளை…

மாநகராட்சி துப்பரவு பணியாளர்களுக்கு உணவுக்காக செலவு செய்யப்பட்ட தொகை…

   20.3.2020 முதல் 6.5.2020 வரை 15 நாட்களுக்கு ரூ3,03,20,000(ரூ3.03கோடி) மற்றும் 15.04.2020 முதல் 3.5.2020 வரை வரை இரண்டு வேளை உணவுக்கு செலவு செய்யப்பட்ட தொகை ரூ5,77,57,000/-(ரூ5.57கோடி)…

 சென்னை மாநகராட்சியில் 46 நாட்களில் ரூ39.52கோடி போலி பில் போடப்பட்டுள்ளது.

 இதில் என்ன வேடிக்கை என்றால் 15மண்டலத்தில் 10 மண்டலங்களில் மாநகராட்சி ஊழியர்கள், துப்பரவு பணியாளர்களுக்கு அசோக் லைலேண்டு நிறுவனம் உள்ளிட்ட  பெரிய தொழிற்சாலைகள்தான் உணவு சப்ளை செய்கிறது..

 சென்னை மாநகராட்சி சப்ளை செய்யும் உணவு குப்பைத் தொட்டிக்குதான் போகிறது…

  சென்னை மாநகராட்சி ஆணையராக பிரகாஷ் ஐ.ஏ.எஸ், தலைமைப் பொறியாளராக நந்தகுமார் இருக்கும் வரை சென்னை மாநகராட்சியில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது..

 சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் போது, சென்னையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24.6.2020 மட்டும் 1654பேர்…சென்னையில் 45814பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்..

  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் ஊழல் மன்னர் என்பதை விட பிரகாஷ் ஐ.ஏ.எஸ் “DEAD BEAT” என்பதில் சந்தேகம் இல்லை..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…தமிழகம் தனிநபர் கழிப்பறைகளில் கோடிக்கணக்கில் ஊழல்- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு…

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட தனி நபர் கழிப்பறைகளில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில்  மெகா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *