Breaking News
Home / பிற செய்திகள் / ரவுடிகளின் பிடியில் சென்னை மாநகர காவல்துறை…

ரவுடிகளின் பிடியில் சென்னை மாநகர காவல்துறை…

சென்னை மாநகர காவல்துறை ரவுடிகள்  பிடியில் சிக்கி தவிக்கிறது. 18.6.2020ம் தேதி பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் காவல் நிலையங்களின் எல்லைகளில் கொரோனா வைரஸ் போன்று கேக்குகள் ஆர்டர் கொடுத்து, பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்கள்.

 பட்டாக்கத்தியில் வெட்டி கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகளை, சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகள் தேடிக்கொண்டு இருக்கிறார்களாம்..

 ஆனால் மூத்த பத்திரிகையாளர் மீது அவர் குடும்பத்தினர் மீது பொய் வழக்கு போடுவதில் கவனம் செலுத்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு, கொரோனா வைரஸ் போல் கேக் தயார் செய்து, பட்டாக்கத்தியால் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகளை கைது செய்யா முடியாமல் வலை வீசி தேடிக்கொண்டு இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் நலமுடன்  பணிக்கு திரும்பிய காவல்துறை அதிகாரிகளை, காவல் நிலையங்களில் டன் கணக்கில் பூ தூவி வரவேற்பு அளிப்பதை தவிர்த்துவிட்டு , பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் ரவுடிகளை கைது செய்ய முயற்சி செய்யலாமே?

 ரவுடிகளிடம் மாமூல் வாங்குக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழும் காவல்துறை அதிகாரிகள், அதிகாரமையத்தில் வலம் வரை சென்னை மாநகர காவல்துறை ரவுடிகள் பிடியில்தான் இருக்கும்..

 அப்பாவி மக்களும்,  நேர்மையாக,  அதிகாரிகளின் ஊழலை  வெளிச்சத்துக்கு கொண்டு வரும் பத்திரிகையாளர்கள் மட்டுமே சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை..

 ரவுடிகளின் பிடியிலிருந்து சென்னை மாநகர காவல்துறையை மாண்புமிகு முதல்வர் டாக்டர் எடப்பாடி பழனிச்சாமி சொல்வது போல் ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது…

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…தமிழகம் தனிநபர் கழிப்பறைகளில் கோடிக்கணக்கில் ஊழல்- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு…

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட தனி நபர் கழிப்பறைகளில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில்  மெகா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *