Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா…திருவள்ளூர் மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ் + அரசு ஸ்ரீவர்ஷன் கொரோனா ஊழல் கூத்து… டி.டி மருத்துவக் கல்லூரியில் சிறப்பு வார்டா? …..

கொரோனா…திருவள்ளூர் மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ் + அரசு ஸ்ரீவர்ஷன் கொரோனா ஊழல் கூத்து… டி.டி மருத்துவக் கல்லூரியில் சிறப்பு வார்டா? …..

     திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,826ஐ எட்டியது.  கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை உண்மை.

 திருவள்ளூர் மருத்துக் கல்லூரி மருத்துவமனையின் தீன் அரசு ஸ்ரீவர்ஷன், அரசு விருந்தினர் மாளிகையில் குளு, குளு அறையில் உட்கார்ந்துக்கொண்டு நிர்வாகத்தை நடத்தி வருகிறது.

  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் 26 நர்சுகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 டாக்டர்கள், நர்சுகள், சுகாதார ஊழியர்களுக்கு அரசு தங்கும் செலவு மற்றும் உணவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தப்படவில்லை குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  நர்சுகளை ஒரு அறையில் 10 பேரை தங்க வேண்டும் என்று மிரட்டியதால், வேறு வழியில்லாமல் தங்கியதால், யாரோ ஒருவர் மூலம் கொரோனா தொற்று 26 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  சிபிஐயில் வழக்கு, ரூ500 கோடி கடன் என்று பல வழக்குகளில் சிக்கியுள்ள டி.டி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை இடத்தை  மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ், தீன் அரசு ஸ்ரீவர்ஷன், டி.எம்.எஸ், டி.பி.எஸ் உள்ளிட்டவர்கள் ஆய்வு செய்தார்கள்.

 பல ஆண்டுகளாக மூடி கிடக்கும் டி.டி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிடத்தை தூசி தட்டி, கொரோனா சிறப்பு வார்டாக 3000 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டு அமைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. 1400 படுக்கைகள் கொண்ட கட்டில் தான் இருக்கிறது. 1600 படுக்கைகள் கொண்ட கட்டில் வாங்க, அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 பல ஆண்டுகளாக, பல வழக்குகளில் சிக்கி கிடக்கும் டி.டி. மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க வேண்டிய அவசியம் என்ன… வேறு இடமா இல்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

 டி.டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இடத்தை, சுகாதாரத்துறைக்கு வாங்கு கொடுக்க மெகா பேரம் நடந்து வருகிறது. இந்த பேரத்தில் பின்னணியில் மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ் இருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 திருவள்ளூரில் கொரோனாவால் மணி, சேட்டு இருவருமே பலியானார்கள் என்று இறப்பு சான்றிதழில் தெளிவாக உள்ளது.

 திருமழிசை காய்கறி மார்க்கெட் மூலம் கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை கட்டுப்பட்டுத்த முயற்சிகள் எடுக்காமல்,   பல வழக்குகளில் சிக்கி, பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள  டி.டி. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைப்பதில் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ், மருத்துவக்கல்லூரி தீன் அரசு ஸ்ரீவர்ஷன்  இருவம் முயற்சி செய்வதன் பின்னணி என்ன என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 ஆவடி மாநகராட்சியில்  ஆணையர் ரவிச்சந்திரன் லீவு போட்டுவிட்டு ஒடிவிட்டார். கமிசனர் பணி காலியாக உள்ளது. திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட வானகரத்தில் பள்ளிக்கு கட்டிட அனுமதி கொடுக்காமல், பள்ளி கட்டிடங்களை கட்டிவருகிறது. பள்ளி நிர்வாகம் திருவேற்காடு நகராட்சி நிர்வாகத்தின் நகரமைப்பு அதிகாரிக்கு ரூ21 இலட்சம் கமிசன் கொடுத்துவிட்டதாக வெளிப்படையாக கூறுகிறது.

   இப்படி கொரோனாவை விட திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா ஊழல் கொடிக்கட்டி பறக்கிறது. ஆனால் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ் என்ன செய்கிறார் என்பது புரியாத புதிராக உள்ளது..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…தமிழகம் தனிநபர் கழிப்பறைகளில் கோடிக்கணக்கில் ஊழல்- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு…

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட தனி நபர் கழிப்பறைகளில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில்  மெகா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *