Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா… சென்னை- அரசு மருத்துவமனைகளில் ரூ 3கோடி- கொள்ளையோ..கொள்ளை.. வாகனம் வாடகை 250கிமீ ரூ5000/-

கொரோனா… சென்னை- அரசு மருத்துவமனைகளில் ரூ 3கோடி- கொள்ளையோ..கொள்ளை.. வாகனம் வாடகை 250கிமீ ரூ5000/-

   சென்னையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதார ஊழியர்களை மருத்துமனைக்கு அழைத்துவர, திரும்ப வீட்டுக்கு அனுப்ப, கார் வாடகை என்ற பெயரில் ரூ3கோடி கொள்ளையோ..கொள்ளை..

 கார் வாடகை என்ற பெயரில் PRR TRAVELS and NATIONAL TRAVELS பெயரில் ரூ3கோடிக்கு பில் போடப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 250கிமீ சென்று வர வாடகை ரூ5000/-என நிர்ணயம் செய்யப்பட்டு   பணம் காசோலை மூலம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

  1. OMENDURAR  MEDICAL HOSPPIRAL – 18.05.2020 31.05.2020 வரை – ரூ1,40,000
  2. RAJIV GANDHI HISPITAL – 18.05.2020  -31.05.2020 வரை  –ரூ1,40,000/-
  3. KASTURIBA  HOSPITAL -18.05.2020 -31.05.2020 வரை ரூ70,000/-
  4. MENTAL HEALTH HOSPITAL – 18.05.2020 -31.05.2020 வரை ரூ70,000/-

 இதை தவிர…

  1. Stanley medical college -4.5.2020 மட்டும் –ரூ50,000/-
  2. Kilpak medical college -14.4.2020 – 1.6.2020வரை –ரூ6.80 இலட்சம்.
  3. Royapettai hospital -14.4.2020 -1.6.2020 வரை –ரூ3இலட்சம்
  4. Institute of Obstetrics and gynaecology -14.4.2020 -18.05.2020வரை-ரூ2.65இலட்சம்
  5. Institute of Child health -14.4.2020 – 1.6.2020 வரை ரூ8.85இலட்சம்
  6. Institute mental health -14.4.2020 -1.6.2020 வரை – ரூ4.45இலட்சம்
  7. Institute of opthalmolgy-4.5.2020 -1.6.2020 வரை –ரூ75,000

ஆக மொத்தம் ரூ27.15 இலட்சம் வாகன வாடகை பில் போடப்பட்டுள்ளது.

      சில ஆதாரங்கள்…

PRR Travlels –  ஒமாந்தூர் பல நோக்கு மருத்துமனை காசோலை ரூ60,000/ + ரூ2,30,000+ரூ60,000 ஆக மொத்தம் ரூ3,50,000/(8.6..2020)

National Travels- Institute mental health 01.06.2020- ரூ2இலட்சம்…

 இப்படி டிராவல்ஸ் வாகனம் மூலம் டாக்டர்களை, மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாக 14.4.2020 முதல் 1.6.2020 வரை சுமார் ரூ3கோடிக்கு போல் பில் போடப்பட்டுள்ளது.

 ஆனால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துமனையில் பணியாற்றும்  டாக்டர்களுக்கு தங்கும் விடுதி செலவு மற்றும் உணவுக்காக தினமும் ரூ2,500/-, நர்ஸ்களுக்கு தினமும் ரூ1500/-, சுகாதார ஊழியர்களுக்கு தினமும் ரூ1000 என ரூ41கோடிக்கு போலி பில் முறைகேடு அரங்கேறிவிட்டது.

 டாக்டர்கள், நர்ஸ்களுக்கு தங்கும் விடுதி செலவு மற்றும் உணவு செலவுக்கு தினமும் ஒதுக்கீடு செய்யும் போது, டாக்டர்கள், நர்ஸ்களை வீட்டிலிருந்து அழைத்து வர வாடகை வாகனம் செலவு ரூ3கோடி சென்னையில் மட்டும் செலவு செய்யப்பட்டதாக போலி பில் போடப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் போடப்பட்ட போலி பில் விவரங்கள் தெரியவில்லை..

 கொரோனா பெயரில் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்படுவதை பார்க்கும் போது, அமைச்சர் விஜயபாஸ்கரும், மருத்துவக்கல்லூரி தீன் மற்றும் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர்கள் மனசாட்சியை விலைக்கு விற்றுவிட்டார்களா என்ற கேள்விதான் எழுந்துள்ளது.

 சென்னையில் மட்டும் வாகனங்களுக்கு  வாடகை என்ற பெயரில் ரூ3கோடி கொள்ளையோ…கொள்ளை தொடர்பாக மக்கள்செய்திமையம் ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் புகார் கொடுத்துள்ளது..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…தமிழகம் தனிநபர் கழிப்பறைகளில் கோடிக்கணக்கில் ஊழல்- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு…

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட தனி நபர் கழிப்பறைகளில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில்  மெகா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *