Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா… ரூ5.49 + 0.90 பைசா மாத்திரைகள்.. கொரோனாவை கட்டுப்படுத்துமா? அலசல் ரிப்போர்ட்…

கொரோனா… ரூ5.49 + 0.90 பைசா மாத்திரைகள்.. கொரோனாவை கட்டுப்படுத்துமா? அலசல் ரிப்போர்ட்…

 சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டுமல்ல அனைத்து மாவட்டங்களில் கொத்து, கொத்தாக கொத்தாக கொரோனா தொற்று பரவி வருகிறது. கொரோனா தொற்று சமூக பரவிலாக மாறி வருகிறது..

 மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வேளச்சேரி குருநானக் கல்லூரியில் சிறப்பு கொரோனா வார்டை பார்வையிட்டுவிட்டு வெளியே வந்தவர்  mulitivitamin NFI and ZING SULFATE மாத்திரைகளை சாப்பிட்டாலே போது கொரோனா தொற்று போய்விடும் என்று ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், பிரகாஷ் ஐ.ஏ.எஸ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்குகிறார்கள்..

 உண்மையில் mulitivitamin NFI and ZING SULFATE மாத்திரைகளை சாப்பிட்டால் கொரோனா தொற்று போய்விடுமா என்பது மக்களின் கேள்வி…

  1.  MULTIVITAMIN tab N.F.I இந்த மாத்திரை தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் KNISS ABORATORIES PVT LTD போரூர் –குன்றுத்தூர் மெயின் ரோடு, கிருகம்பாக்கத்தில் 10மாத்திரைகள் கொண்ட அட்டை ரூ54.91க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. 10 மாத்திரை கொண்ட அட்டை ரூ54.91என்றால் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கமிசன், லாபம், முதலீட்டிற்கான வட்டி, விளம்பரம் இதையெல்லாம் கணக்கீட்டால் 10மாத்திரை கொண்ட அட்டையின்  உண்மை விலை ரூ35தான். ஒரு மாத்திரை விலை ரூ3.50பைசாதான்..
  2. ZINC SULFATE  இந்த மாத்திரை RIKENBIK PHARMA சிட்கோ தொழிற்பேட்டை, அம்பத்தூரில் 10 மாத்திரைகள் கொண்ட அட்டை ரூ9/-க்கு தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் கொள்முதல் செய்யப்படுகிறது. 10மாத்திரைகள் கொண்ட அட்டை ரூ9/- என்றால் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கமிசன், லாபம், முதலீட்டிற்கான வட்டி, விளம்பரம் இதையெல்லாம் கணக்கீட்டல் 10 மாத்திரைகள் கொண்ட அட்டையின் உண்மை விலை ரூ6.50 முதல் ரூ7தான். ஒரு மாத்திரையின் விலை 65 பைசா அல்லது 70 பைசாதான்..

இப்படி மலிவு விலையில் தமிழ்நாடு மருத்துவசேவைக் கழகம் கொள்முதல் செய்யும் mulitivitamin NFI and ZING SULFATE மாத்திரைகளை கொரோனா தொற்று நோயாளிகளுக்கு கொரோனாவிலிருந்து விடுப்பட்டுவிடுவார்கள். கொரோனா தொற்று நோய் வராமல் இருக்கவும் சாப்பிட்டால் கொரோனா தொற்று தாக்காது என்பதை எப்படி நம்புவது என்று தெரியவில்லை.

 mulitivitamin NFI and ZING SULFATE இந்த இரண்டு மாத்திரைகளும் உண்மையில் தரமாக உற்பத்தி செய்யப்பட்டு இருந்து, தினமும் ஒவ்வொரு வேளை சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சுண்டு(5சதவிகிதம்) அதிகமாகும்.

 இந்த இரண்டு மாத்திரைகளையும் பார்த்தாலே கொரோனா தொற்று தமிழ்நாட்டைவிட்டு ஒடிவிடும் என்ற போலி நம்பிக்கை உண்டாக்கி, இலட்சக்கணக்கில் கொள்முதல் செய்து தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் கொரோனா சிறப்பு வார்டு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொடுப்பது தான் வேதனையாக இருக்கிறது.

  இந்த இரண்டு மாத்திரைகளும் கடந்த 20 நாட்களாக மக்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

 உண்மையில் mulitivitamin NFI and ZING SULFATE இரண்டு மாத்திரைகளுக்கு கொரோனாவை விரட்டும் வீரியம் இருந்தால், தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவாது.

 கொரோனா தொற்று சமூக பரவலாக மாறி வருகிறது. கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது மில்லியன் கேள்வியாக உள்ளது..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…தமிழகம் தனிநபர் கழிப்பறைகளில் கோடிக்கணக்கில் ஊழல்- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு…

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட தனி நபர் கழிப்பறைகளில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில்  மெகா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *