Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா… ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்… தமிழக அரசின் துக்ளக் நிர்வாகம்? சண்முகம் ஐ.ஏ.எஸ்“PHONY” – பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ் “DEADBEAT”…

கொரோனா… ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்… தமிழக அரசின் துக்ளக் நிர்வாகம்? சண்முகம் ஐ.ஏ.எஸ்“PHONY” – பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ் “DEADBEAT”…

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ், 7.6.2020ம்(எண்.1605) தேதியும், 19.6.2020ம்(எண்.1715) தேதி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாறுதல் அரசாணையின்  பார்க்கும் போது, துக்ளக் நிர்வாகம்தான் நினைவுக்கு வருகிறது.

  தமிழக அரசின் நிர்வாகமே முடங்கி போய்விட்ட நிலை ஏற்பட்டுவிட்டதா மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் புலம்புகிறார்கள்.

   தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் சேர்மன் விக்ரம்கபூர் ஐ.ஏ.எஸ்யை  சுற்றுலா, கலாச்சாரத்துறை செயலாளராக மாறுதல் செய்துவிட்டு, தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் சேர்மன் பதவியை கூடுதல் பொறுப்பாக (அரசாணை எண்.1605)சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் பிரதீப்யாதவ் ஐ.ஏ.எஸ்யை நியமித்தார்.

 பிரதீப் ஐ.ஏ.எஸ், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கும் போது, ஐ.பி.எஸ் அதிகாரியுடன் கூட்டணி அமைத்து, கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு கிராமத்தையே விற்றுவிட்டார்கள் .பிரதீப்யாதவ் தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் சேர்மன் பொறுப்பை கூடுதலாக கவனிக்க, எதிர்ப்பு ஏற்பட்டதால், கூடுதல் பொறுப்பு பணியை ஏற்கவில்லை. ஆனால் அரசாணையில் கூடுதல் பொறுப்பை ஏற்றதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

 12 நாட்கள் கழித்து, 19.6.2020(அரசாணை எண்.1715) தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் சேர்மனாக, நில நிர்வாக ஆணையர் பங்கஜ்குமார்பன்சால் ஐ.ஏ.எஸ்யை  மாறுதல் செய்தார். பங்கஜ்குமார்பன்சால் ஐ.ஏ.எஸ், நில நிர்வாக ஆணையராகவும் தொடர்ந்து பணியாற்றுவாராம்..

   அது எப்படி இரண்டு தமிழ்நாடு அளவிலான பதவிகளை பங்கஜ்குமார்பன்சால் ஐ.ஏ.எஸ் கவனிப்பார் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

  வருவாய் நிர்வாக ஆணையராகவும், கொரோனா தொற்று சிறப்பு அதிகாரியாகவும் 24மணி நேரமும் வலம் வந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், சுகாதாரத்துறைத்துறை செயலாளராக மாறுதல் செய்யப்பட்டார். கொரோனா நேரத்தில், சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மாறுதல் செய்யப்பட்டது சரியான முடிவு.

 வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ் மாறுதல் செய்யப்பட்டு  பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுவிட்டார். நில நிர்வாக  ஆணையர் பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை செயலாளர் பணியையும் கூடுதலாக கவனிப்பார் என்று அரசாணையில் உள்ளது.

  கொரோனா தொற்று ஊரடங்கு அமுல் இந்த நேரத்தில் பொது மக்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்களுடன் தொடபுக்கொண்டு பேசக்கூடிய ஐ.ஏ.எஸ் அதிகாரிதான் வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பில் இருக்க வேண்டும்.

 பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ், குளு, குளு அறையை விட்டு வெளியே வரமாட்டார். ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தவிர மற்ற அதிகாரிகளை சந்திக்கமாட்டார். பொது மக்கள், பத்திரிகையாளர்கள் சந்திக்க முடியாது.

 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வழங்கல்துறை செயலாளராக நான்கு ஆண்டுகள், பணியாற்றி நகராட்சி நிர்வாகத்தை ஊழல் நிர்வாகமாக மாற்றிய பெருமை மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை சீரழித்தவர் பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ்..

 வருவாய் நிர்வாக ஆணையரகத்தின் சிபாரிசு செய்தால் கொரோனாவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 18.48கோடி மாஸ்க் கொள்முதல் டெண்டர் நடைபெற உள்ளது. இப்படி கொரோனாவை கட்டுப்படுத்தும் பொறுப்பான பணிக்கு பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ் தகுதியானவர் இல்லை. இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை நிர்வாகத்தை சீரழித்துக்கொண்டு இருந்த பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ், வருவாய் நிர்வாக ஆணையரகத்தின் நிர்வாகம் இனி சீரழிவதை நாம் தினமும் பார்க்க போகிறோம்..

ரசாணை எண்.1605 மற்றும் அரசாணைஎண்.1715 இரண்டு அரசாணைகளை பார்க்கும் போது, தமிழக அரசின் நிர்வாகம், துக்ளக் நிர்வாகம் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ் “DEADBEAT”.. சண்முகம் ஐ.ஏ.எஸ் “PHONY” என்பதுதான் உண்மை..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…தமிழகம் தனிநபர் கழிப்பறைகளில் கோடிக்கணக்கில் ஊழல்- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு…

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட தனி நபர் கழிப்பறைகளில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில்  மெகா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *