Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா… அண்ட புளுகு..ஆகாச புளுகு- பிரகாஷ் ஐ.ஏ.எஸ்- குப்பைக் தொட்டியில் உணவு பொட்டலங்கள்..

கொரோனா… அண்ட புளுகு..ஆகாச புளுகு- பிரகாஷ் ஐ.ஏ.எஸ்- குப்பைக் தொட்டியில் உணவு பொட்டலங்கள்..

சென்னையில்  உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்பட்டு இரண்டாவது நாளில் சென்னையில் மட்டும் 1254 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்க்கு நிர்வாகம் என்றால் என்னவென்று தெரியாது.

 சமூக ஆர்வலர்கள் பெயரில் மண்டலம் -5 இராயபுரம், மண்டலம் -1 திருவொற்றியூர், மண்டலம் -4 தண்டையார் பேட்டை,  மண்டலம் -6 திரு.வி.க நகர் மற்றும் அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள   மண்டலத்துக்கு ரூ500 சம்பளத்துக்கு  ஒவ்வொரு மண்டலத்துக்கு 300 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

 சமூக ஆர்வலர்களிடம் தெர்மா மீட்டரை கொடுத்து, நெத்திக்கு முன் வைத்து பார்த்து, காய்ச்சல் நிலைமையை துண்டு சீட்டில் எழுத உத்தரவிட்டுள்ளார் பிரகாஷ் ஐ.ஏ.எஸ். சமூக ஆர்வலர் ஒருவருக்கு தெர்மா மீட்டரை பயன்படுத்த பயிற்சி கொடுக்கவில்லை . ஏனோதானோ என்று வீடு, வீடாக ஏறி தெர்மா மீட்டர் மூலம் காய்ச்சல் ஆய்வு செய்யும், ரூ500 சமுக ஆர்வலர்கள்.  காய்ச்சல் கணக்கு கொரோனா கணக்கு போல் ஏனோதானோ என்று உள்ளது.

 திரு.வி.க நகரில் என நண்பர் வீட்டுக்கு வந்த சமூக ஆர்வலர் சார்…எனக்கு தெர்மா மீட்டர் பயன்படுத்த தெரியாது… உங்க வீட்டில் காய்ச்சல் இல்லையே சார் என்று கேட்டுவிட்டு குறித்துக்கொண்டு சென்றார்..சமூக ஆர்வலர்கள் காய்ச்சல் கணக்கு இதுதான்…

 கொரோனாவை கட்டுப்படுத்தும் சுகாதாரப்பணியாளர்களுக்கு கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களில் கொடுக்கப்படும் உணவு பொட்டலங்கள் தரமில்லாமல், கெட்டு போய் இருப்பதால் குப்பைக் கூடையில் போட்டுவிடுகிறார்கள்.

 பசித்த வயிற்றுக்கு தரமல்லாத உணவு பொட்டலங்கள் வழங்கிய மண்டலம் -5, உதவி வருவாய் ஆய்வாளர்கள் திருப்பால், பாலச்சந்தர் வழங்கிய உணவு பொட்டலங்கள் குப்பைக்கூடையில் கிடக்கிறது.

 இதே நிலைதான் பெரும்பாலான மண்டலங்களில் சுகாதாரப்பணியாளர்களுக்கு கொடுக்கும் உணவுகள் தரமில்லாமல், கெட்டு போய் குப்பைக் கூடையில் போடப்படுகிறது. பிறகு அப்படி சுகாதாரப்பணியாளர் பட்டினியுடன்  எப்படி கொரோனாவை கட்டுப்படுத்த பணியாற்றுவார்கள்..

 சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் வாயை திறந்தாலே பொய்யான தகவலைதான் அளிக்கிறார்.

 அண்ட புளுகு… ஆகாச புளுகு பிரகாஷ் ஐ.ஏ.எஸ் அளிக்கும் புள்ளி விவரங்களை உண்மை என்று நினைத்து கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தால் 2021ம் ஆண்டு பிறந்துவிடும்..

சென்னை குருநானக் கல்லூரியில் கொரோனா சிறப்பு வார்டை திறந்துவைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மல்டி வைட்டமீன், ஜிங் சல்பேட் மாத்திரை பார்த்து மகிழ்ச்சியில் பேட்டிக் கொடுத்தார். அந்த மாத்திரைகள் சாப்பிடுவதால் கொரோனாவை தடுக்க முடியாது. இந்த மாத்திரைகள் மிக குறைந்த விலையில் தரமில்லாமல் கொள்முதல் செய்யப்பட்டது என்பது உண்மை…(மக்கள்செய்திமையம் ஆதாரங்களை வெளியிட தயாராக உள்ளது)

 சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்யை மாறுதல் செய்துவிட்டு, தலைமைப் பொறியாளர் நந்தகுமாரை சஸ்பெண்ட் செய்தால்தான் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்..

 அண்ட புளுகு.. ஆகாச புளுகு பிரகாஷ் ஐ.ஏ.எஸ் சென்னை மாநகராட்சி ஆணையராக இருக்கும் வரை சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது..

 சென்னையை  கொரோனாவிலிருந்து மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொல்வது போல், ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்…

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…தமிழகம் தனிநபர் கழிப்பறைகளில் கோடிக்கணக்கில் ஊழல்- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு…

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட தனி நபர் கழிப்பறைகளில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில்  மெகா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *