Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா.. கோடிகளில் கொள்ளை.. மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ்யின்- ரூ10.71கோடிக்கான கடிதம்…

கொரோனா.. கோடிகளில் கொள்ளை.. மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ்யின்- ரூ10.71கோடிக்கான கடிதம்…

கொரோனா என்ற பெயரை கேட்டாலே கோடிகளில் கொள்ளையடிக்கப்படுவதற்கான ஆதாரங்கள் குவிகிறது.  திருவேற்காடு நகராட்சியில் ஆள் நடமாட்டமே இல்லாத பகுதிகளில் குப்பை கொட்டாமல் இருக்க, பச்சை கலரில், இத்து போன துணி போன்ற வேகமாக காற்று அடித்தலே கிழிந்து போகும் வளை அமைக்கப்பட்டதற்கு போடப்பட்ட பில்லின் மதிப்பு  ரூ35இலட்சமாம்.. அம்மாடியோவ்..

 திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பெயரில் கோடிக்கணக்கில் கொள்ளை போவது, அம்பலமாகி உள்ளது. நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் தான் திருவள்ளூர் மாவட்டத்துக்கு கொரோனா சிறப்பு அதிகாரியாம். பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் பெயரை சொல்லி வசூல் நடப்பதுதான் திருவள்ளூர் மாவட்டத்தில் நடக்கும் ஊழல் கூத்து..

 திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ் 16.6.2020ல் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்க்கு(கடிதஎண்.7936/2020/II) எழுதிய கடிதத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1001 ஐ தாண்டிவிட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த ரூ7.37 கோடிக்கான திட்டத்துக்கு அனுமதி அளிக்கும்படி கூறியுள்ளார்.

  திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரிரவிக்குமார் ஐ.ஏ.எஸ்யின் கடிதத்தின் தொடர்ச்சியை பாருங்கள்…அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்தால் மக்கள்செய்திமையம் பொறுப்பல்ல…

 DD medical college, GRT CBSE school, ACS medical college, Prathyusha engg.college, Dr Ambedkar law college hostel, Vel tech engg.college Avadi, Temple cottage tiruttani ஆகிய இடங்களில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

 Permanent item..

Steel cot –Rs4484, Bed Rs 2696, Cotton pillow –Rs 240  என ரூ.3.04கோடிக்கும்…

 One Time Expenditure(per person&disposable after use…

  1. Cotton bed cover –ரூ400
  2. Disposal cover-ரூ200
  3. Bucket with mug-ரூ350
  4. Blanket – ரூ300

ரூ1250 என கணக்கீட்டு ரூ63.75 இலட்சம்..

Recurring Expenditure(per day/per person 10 days)

  1. Food charges – ரூ250/-
  2. Hand sanitizer and Mask- ரூ30
  3. Cleaning – ரூ50
  4. Institutional charges- ரூ20

என ஒரு நாளைக்கு ரூ350 என  கணக்கீட்டு ரூ1.78கோடி

 இப்படி கொரோனா கொள்ளை கணக்கு போட்டு ரூ5.46 கோடி, ரூ10.71கோடி என வருவாய் நிர்வாக ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

 இந்த கொரோனா கோடிக்கணக்கில் போடப்படும் பில்களை பார்க்கும் போது, நமக்கு அதிர்ச்சிதான் ஏற்படுகிறது.

 பூந்தமல்லி நகராட்சியில் கொரோனா தடுப்புக்காக தெளிக்கப்படும் இருமி நாசினியால் எறும்பு கூட சாகாது.. ஆவடி மாநகராட்சியில் கொரோனா பெயரில் மெகா ஊழல் கூத்து தினமும் அரங்கேறுகிறது.

  கொரோனா சிறப்பு அதிகாரி பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் ஆய்வு கூட்டம் என்ற பெயரில் நடத்தும் கூத்தை ஒரங்கட்டிவிட்டு, மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பாரா… அதிகாரிகள் கொடுக்கும் புள்ளி விவரத்தை வைத்துக்கொண்டு, கொரோனா கூத்து நடத்துவாரா என்று தெரியவில்லை..

 சென்னையை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்திலும் கொரோனா பெயரில் கோடிக்கணக்கில் கொள்ளை நடந்து வருகிறது..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…தமிழகம் தனிநபர் கழிப்பறைகளில் கோடிக்கணக்கில் ஊழல்- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு…

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட தனி நபர் கழிப்பறைகளில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில்  மெகா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *