Breaking News
Home / பிற செய்திகள் / காவிரி டெல்டா- நீர் வழி பாதைகள்- ரூ53.46கோடியில் தூர்வாரியாச்சு… கோப்புகளில் அப்படிதான் உள்ளது.. வேடிக்கை –வேதனையான அரசாணை..

காவிரி டெல்டா- நீர் வழி பாதைகள்- ரூ53.46கோடியில் தூர்வாரியாச்சு… கோப்புகளில் அப்படிதான் உள்ளது.. வேடிக்கை –வேதனையான அரசாணை..

காவிரி டெல்டா பாசன வாய்க்கால்கள் மற்றும் அதிலிருந்து பிரியும் கிளை வாய்க்கால்கள், வடிகால்கள் மற்றும் ஏரிகளின் வழங்கு வாய்க்கால்கள் ஆகியவைகளில் மண் திட்டுகள், முட்புதர்கள் நிறைந்துள்ளதால் பாசனத்திற்கு தடையின்றி நீர் வழங்குவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகின்றன. ஆகவே பாசனக் காலங்களில் தண்ணீர் சீராக வழங்க ஏதுவாக அதனால் 2018-19ஆம் ஆண்டு விலைவிகிதப்படி தயாரிக்கப்பட்ட 314 தூர்வாரும் பணிகளுக்கு ரூ62.06கோடி ஒதுக்கீடு செய்து, அப்ரூவல் வழங்க, திருச்சி மண்டல  தலைமைப் பொறியாளர் செந்தில்குமார், 22.1.2019ல் முதன்மை தலைமைப் பொறியாளருக்கு கடிதம்(கடித எண்.வபி/முதபொ/வஅ.1/கோ36/2019) அனுப்புகிறார்.

 திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் 22.1.19ல் எழுதிய கடிதம், மெதுவாக, மெதுவாக நகர்ந்து 18.7.2019ல் அரசாணையாக(எண்.205) வெளியாகிறது. ஏழு மாதங்கள் கழித்து அரசாணையா என்று கேள்வி கேட்டு முதலமைச்சரை டென்சனாக்கிவிடாதீர்கள்..

 18.7.2019ல் வெளியான அரசாணையின் படி நிதியாக மண்டலங்களுக்கு செல்ல, சில நாட்களாகி இருக்கும். அதாவது 28.7.2019 வரை கோப்புகள்  சென்னைக்கும், திருச்சிக்கு நகர்ந்துக்கொண்டு இருக்கும்.

2018-19 விலைவிகிதப்படிதான் ரூ62.06கோடி .இதில் காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டைபகுதிகளுக்கு ரூ53.46கோடி. அரசாணை தாமதமாக வந்த காரணத்தால், 2019-20 விலைவிகிதப்படி என்ற பார்த்தால், நிதி ஒதுக்கீட்டின் மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்று அதிகாரிகள் முணு,முணுத்தார்கள். 20 சதவிகிதம் அதாவது ரூ12கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டு என்று கோப்புகள் ஒரு பக்கம் நகர்ந்தது.

 வழக்கம் போல், அக்டோபர், நவம்பர், டிசம்பரில் பருவ மழையும் பெய்தது. 2020 பிப்ரவரியிலிருந்து கொரோனா தொற்றால் முடங்கி போனது தமிழக அரசின் நிர்வாகம்..

    கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்பட்டுள்ளது.

       தற்போது பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதாரத்துறையின் கோப்புகளில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ரூ53.46கோடிக்கு தூர் வாரியாச்சு என்று  பதிவு செய்யப்பட்டுள்ளது. போலியான எம்.புத்தகங்களில் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் மாவட்டம் வாரியாக இரவு, பகலாக எழுதி பதிவு செய்தார்கள்..

 காவிரி டெல்டா மாவட்டங்களில் ரூ53.46 கோடிக்கு தூர்வாரியாச்சு என்று கோப்புகளில் தெளிவாக உள்ளது. ஆனால் நேரில் பார்த்தால் முட்புதர்களால், நீர் வழி பாசன வாய்க்கால்கள் முடங்கி போய் கிடக்கிறது.

 இந்த நிலையில் ஜூன்12ம் தேதி காவிரி டெல்டாவுக்கு மேட்டூர் அணையிலிருந்து மலர் தூவி தண்ணீர் திறக்க போகிறார்களாம்…

 காவிரி டெல்டா பகுதியில் கடைமடை பகுதி வரை நீர்வழி பாசன வாய்க்கால்களை தூர்வார போலி பில் போடுவதற்கு என்றே நேந்துவிட்டாச்சா…

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…தமிழகம் தனிநபர் கழிப்பறைகளில் கோடிக்கணக்கில் ஊழல்- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு…

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட தனி நபர் கழிப்பறைகளில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில்  மெகா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *