Breaking News
Home / பிற செய்திகள் / சென்னையில்.. கொரோனாவை கட்டுப்படுத்தமுடியவில்லை ஏன்? ரூ100கோடிக்கு போலி பில்லா? கொண்டிதோப்பு சுகாதார நிலையம் மூடப்படுமா?..

சென்னையில்.. கொரோனாவை கட்டுப்படுத்தமுடியவில்லை ஏன்? ரூ100கோடிக்கு போலி பில்லா? கொண்டிதோப்பு சுகாதார நிலையம் மூடப்படுமா?..

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்தும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட  ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் பம்பரமாக சுழன்று பணியாற்றுகிறார். ஆனாலும் கொரோனா நாளுக்கு நாள் வேகமாக பரவிக்கொண்டுதான் இருக்கிறது.  கொரோனா தொற்று  24.5.2020 அன்று மட்டும் 587 பேருக்கு பரவியுள்ளது. சென்னை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  10,576..

 கொரோனா தொற்று பரவுவதற்கு என்ன காரணம் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்து, பிளிச்சிங் பவுடர்( ரூ40), சுண்ணாம்புதூள்(ரூ9), லைசால்(லிட்டர் ரூ200), சோடியம்ஹைபோகுளோரைடு(ரூ6) என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த விலைக்கு தரமான பொருட்களை கொள்முதல் செய்யாமல், தரமில்லாமல் இந்த  பொருட்கள் அதிகவிலை கொடுத்த கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மெக்கானிக் ஸ்பிரையர் விலை ரூ5500/- ஆனால் ரூ8500க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. Vechcle mounted Sprayers with necessaries விலை ரூ9500/- ஆனால் ரூ12,000க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று நேர்மையான அதிகாரிகள் புலம்புகிறார்கள்.  அதாவது 20.3.2020யில் 200 பேட்டரியில் செயல்படும் ஸ்பிரையர் உள்ளிட்ட பவர் ஸ்பிரையர்கள்(வாகனங்கள் மூலம்) 400க்கு மேல் அதிகவிலை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

   இந்த முறைகேடான கொள்முதல் தொடர்பான கோப்புகளில் சில அதிகாரிகள் கையெழுத்து போட மறுத்துவிட்டார்கள். அதனால் கொள்முதலில் சிக்கல் நீடிக்கிறது.

  மேலும் Awareness &IEC activities, Other infrastructure works containment areas(barricade, Temporary shed), Additional Manpower expenses engaged for corno activities  என்ற பெயரில் ரூ100கோடிக்கு போலி பில் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 மேலும் இராயபுரம் மண்டலம்-5, கோட்டம் 53 கொண்டிதோப்பில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் சிலருக்கு கொரோனா தொற்று நோய் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனாலும் கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்யாமலேயே கொண்டி தோப்பு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் தொடர்ந்து செயல்படுகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் கொரோனா தொற்று பரவுகிறது. ஆனால் கொண்டிதோப்புஆரம்ப சுகாதார நிலையத்தை மூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

 சென்னை மாநகராட்சியில் கொரோனா பெயரில் கோடிக்கணக்கில் மெகா ஊழல் நடந்து உள்ளது. மக்கள்செய்திமையம் ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் புகார் அளித்துள்ளது.

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…தமிழகம் தனிநபர் கழிப்பறைகளில் கோடிக்கணக்கில் ஊழல்- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு…

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட தனி நபர் கழிப்பறைகளில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில்  மெகா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *