Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனாவிலும்… 518 பேரூராட்சிகளில்-ரூ338கோடிக்கு சாலைப்பணிக்கான டெண்டர்.. ஊரடங்கு ஊழலா?

கொரோனாவிலும்… 518 பேரூராட்சிகளில்-ரூ338கோடிக்கு சாலைப்பணிக்கான டெண்டர்.. ஊரடங்கு ஊழலா?

கொரோனா ஊரடங்கு உத்தரவு 31.5.2020 வரை அமுலில் இருக்கும் போது, 518 பேரூராட்சிகளில் 745 சாலை பணிகளுக்கான ரூ338.15கோடிக்கான டெண்டர் விட முடிவு செய்திருப்பது நியாயமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 பேரூராட்சி நிர்வாகம் 20.5.2020ல் ஆர்.சி எண்.1829/2019/E2 518 பேரூராட்சிகளுக்கும் சாலை டெண்டருக்கான நிதி ஒதுக்கீடு செய்து, கடிதம் அனுப்பி உள்ளது.

 அந்த கடிதத்தில் ரூ338 கோடிக்கான டெண்டர் 29.05.2020 நாளிதழ்களில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

 ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா என்று முடிவெடுக்காத நிலையில், சிக்கன நடவடிக்கையை நிதித்துறை செயல்படுத்தி இருக்கையில் டெண்டர்  தொடர்பாக நாளிதழ்களில்  விளம்பரம் வெளியிடப்படும் என்று பேரூராட்சி நிர்வாகம் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதை பார்க்கும் போது, தற்போதே டெண்டர் முடிவு செய்யப்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 பல பேரூராட்சிகளில் அதிகாரமையத்தில் வலம் வரும் அதிகாரிகளுக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்கள் சாலைப்பணிகளை, டெண்டர் முடிவு செய்யாமலேயே தொடங்கிவிட்டார்கள்.

  தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் இருவரும் 518 பேரூராட்சிகளில் ரூ338கோடிக்கான 745 சாலை டெண்டர் பணிகளை நிறுத்தி உத்தரவிட வேண்டும்

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…தமிழகம் தனிநபர் கழிப்பறைகளில் கோடிக்கணக்கில் ஊழல்- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு…

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட தனி நபர் கழிப்பறைகளில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில்  மெகா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *