
சென்னை மாநகராட்சியில் மெக்கானிக்கல் பொறியாளர் படிப்பு படித்துவிட்டு, தலைமைப் பொறியாளராக பணியாற்றிய புகழேந்தி 30.6.2016ல் ஒய்வு பெற வேண்டிய நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு கொடுக்கப்பட்டது. மீண்டும் 1.7.2018 முதல் 30.6.2020 வரை இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு கொடுக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் புகழேந்தி, 20.12.19ல் நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் தலைமைப் பொறியாளராக மாறுதல் செய்யப்பட்டார். சென்னை மாநகராட்சியில் பணி நீட்டிப்பில் இருக்கும் தலைமைப் பொறியாளர், நகராட்சி நிர்வாக ஆணையரகத்துக்கு எப்படி மாறுதல் செய்ய முடியும் என்று கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் தலைமைப் பொறியாளராக இருந்த என்.நடராசன், சென்னை மாநகராட்சிக்கு மாற்றப்பட்டார். ஆனால் நடராசன் பணியில் சேர்ந்துவிட்டு, நீண்ட விடுப்பில் உள்ளார்.
தலைமைப் பொறியாளர் புகழேந்திக்கு, நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் ஒராண்டு பணி நீட்டிப்புக்கு 1.7.2020 முதல் 30.6.2021 வரை கோப்பு அதிவேகமாக நகர்ந்து, செயலாளர் ஹர்மந்தர் சிங் ஐ.ஏ.எஸ் அலுவலகத்தில் உள்ளது. 5ம் ஆண்டு பணி நீட்டிப்பு கொடுப்பது சட்ட விரோதம் இல்லையா?
நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் செயல்படும் 125 நகராட்சிகளிலும் அதிகபட்சமாக ரூ40 இலட்சம் மதிப்புள்ள(செயற் பொறியாளர்) சிவில் பணிகளுக்கு மேல் அப்ரூவல் கொடுக்க முடியாது. தலைமைப் பொறியாளர் ரூ40 இலட்சத்துக்கு மேல் எவ்வளவு கோடிக்கான திட்டமாக இருந்தாலும் அப்ரூவல் கொடுக்க வேண்டும். அப்பதான் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியும்.
நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் தலைமைப் பொறியாளராக சென்னை மாநகராட்சியிலிருந்து மாறுதல் பெற்றும் பணியாற்றும் புகழேந்தி, மெக்கானிக்கல் பொறியாளர் படிப்பு படித்தவர். மெக்கானிக்கல் பொறியாளர் படித்த தலைமைப் பொறியாளர் புகழேந்தி எப்படி சிவில் பணிக்கான திட்டங்களில் கையெழுத்து போட முடியும்?
சிவில் பொறியியல் படிப்பில் அ…ஆ..வே தெரியாத, மெக்கானிக்கல் பொறியாளர் படிப்பு படித்த தலைமைப் பொறியாளர் புகழேந்தி, 26.12.19ம் தேதியிலிருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள அப்ரூவல் கொடுத்த திட்டங்களின் கதி..அதோ…கதி தானா?
மக்கள்செய்திமையம், நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் தலைமைப் பொறியாளராக பணியில் சேர்ந்த(26.12.19) முதல் பல கோடி மதிப்புள்ள சிவில் பணிக்கான திட்டங்களுக்கு அப்ரூவல் கொடுத்த, அனைத்து கோப்புகளையும், அனுபவம் வாய்ந்த சிவில் பொறியாளர்கள் தலைமையிலான குழு அமைத்து, மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ஹர்மந்தர்சிங் ஐ.ஏ.எஸ்க்கு கடிதம் அனுப்பி உள்ளது.
நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் புகழேந்திக்கு, 5வது ஆண்டு பணி நீட்டிப்புக்கான கோப்பு பரிசீலனை செய்வதே சட்டத்துக்கு புறம்பானது.
தமிழ்நாட்டில் பணநாயகம்.. ஜனநாயகமாக மாறி செயல்பட்டால் என்ன செய்வது? வாக்களித்த அப்பாவி மக்கள் தான் 2021ல் பதில் சொல்ல வேண்டும்…