
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலும், டாக்டர்கள் மாறுதல் பெயரில் வழக்கம் போல் கல்லா கட்ட தொடங்கிவிட்டார்.
கொரோனாவால் நிதித்துறையிலிருந்து சிக்கன நடவடிக்கைகளை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுகாதாரத்துறையில் டிரான்ஸ்பர் சத்தமில்லாமல் நடந்து வருகிறது.
- மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் டாக்டர் குருநாதன், 08.5.2020ல் வெளியிட்டுள்ள கடிதத்தில் (Ref.No.18441/E1/1/2020-2) Assistant surgeon/senior Assistant Surgeon/Civil surgeon இந்த டாக்டர்கள் டிரான்ஸ்பர் வேண்டுமானாலும் 15.5.2020 இ-மெயிலில் டிரான்ஸ்பர் விண்ணப்பத்தை அனுப்புங்கள் என்று கூறியுள்ளார்.
டிரான்ஸ்பர் கேட்கும் டாக்டர்களிடம் வசூல் நடக்கிறது, ஒரு சில நாட்களில் அமைச்சர் ஒப்புதலும் டிரான்ஸ்பர் மேளா அரங்கேற்றப்படும்.
- இயக்குநர் டாக்டர் குருநாதன் 12.5.2020ல் வெளியிட்டுள்ள கடிதத்தில் (Ref.No.18441/E1/1/2020) புதியதாக தொடங்க இருக்கும் 10 மருத்துவ கல்லூரிகளுக்கு மாறுதல் பெற விரும்பும் டாக்டர்கள் DME and DMS க்கு மெயில் அனுப்புகள் என்று கூறியுள்ளார்.
- சுகாதாரத்துறை செயலாளர் திருமதி பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ் 13.5.2020ல் வெளியிட்டுள்ள கடிதத்தில் Letter No.11987/EAP/EAP 11-2/2020-2ல் மருத்துவம் மற்றும் ஊரகப்பணிகள் இயக்குநரகத்தில் 334 பதவிகளை 1.4.2020 முதல் 30.6.2020 வரை நீட்டித்து கடிதம் அனுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும், கொரோனாவால் தமிழ்நாடே தவித்துக்கொண்டு இருந்தாலும், கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலும், சுகாதாரத்துறையில் டிரான்ஸ்பர் மேளா என்ற பெயரில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூட்டணி கல்லா கட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்…

ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் தொடர்பாக மக்கள்செய்திமையம், ஆதாரங்களுடன் சிபிஐக்கு அனுப்பிய புகார் மீது சிபிஐ விசாரணையை தொடங்கிவிட்டது. ஆனாலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வசூல் மேளாவில் கொடிக்கட்டி பறக்கிறார்…