Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா…. சுகாதாரத்துறையில் ஊரடங்கு ஊழல்… அரசு ஆணை 161 & 391ல் ஊழலுக்கான ஆதாரம்…

கொரோனா…. சுகாதாரத்துறையில் ஊரடங்கு ஊழல்… அரசு ஆணை 161 & 391ல் ஊழலுக்கான ஆதாரம்…

   கொரோனா பெயரில்  ஊரடங்கு ஊழல் செய்ய, சுகாதாரத்துறையை நேந்துவிட்டாச்சு என்பதற்கு சுகாதாரத்துறையின் அரசாணை எண்.161/27.3.2020 மற்றும் அரசாணை எண்.391/24.3.2020 ஆதாரங்களாக உள்ளது.

  1.  அரசாணை எண்.391/24.3.2020ல் பார்வையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநரகம் கடித எண்.4736/IDSP/2020 தேதி 14.02.2020. சீனாவில் கொரோனா பரவ தொடங்கிவிட்டதால், பாதுகாப்பு சாதனங்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது. ஆனால் சுகாதாரத்துறையில்  மாஸ்க், பி.பி.இ கிட், கிருமி நாசினி உள்ளிட்டகொரோனா பாதுகாப்பு சாதனங்கள் கொள்முதல் செய்ய ரூ110.40 கோடி ஒதுக்கீடு செய்து, 40 நாட்கள் கழித்து  24.3.2020ல் அரசாணை வெளியிடப்படுகிறது.

அதைவிட வேடிக்கை என்னவென்றால் கொரோனா  ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்பட்டப் பிறகு வெளியான அரசாணை எண்.391ல் கிங் இன்ஸ்டியூட் ஆய்வகத்தை மேம்படுத்த ரூ12.38 கோடி, தாம்பரம் சானிடோரியத்தில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க  ரூ30கோடி, மதுரை, கோவை, தஞ்சாவூரில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க ரூ90கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 இந்த ரூ102.38கோடிக்கு வெள்ளை அறிக்கை வெளியிட அமைச்சர் விஜயபாஸ்கர் தயாரா?

  • அரசாணை எண்.161/27.3.2020ல் பார்வையில் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் உமாநாத் ஐ.ஏ.எஸ் சுகாதாரத்துறைக்கு 6.3.2020ல் அனுப்பிய கடிதத்தில் டெண்டர் இல்லாமல் ரூ2.26 கோடிக்கு  கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக கொள்முதல் செய்யப்படும் அனைத்து மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், மாத்திரைகள்,கிட்ஸ்கள்  அனைத்துக்கும் டெண்டர் டிரான்பரன்சி சட்டத்திலிருந்து வெளிப்படையான கொள்முதலுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

  ஆனால் டெண்டர் டிரான்பரன்சியிலிருந்து விலக்கு அளித்து, 27.3.2020ல் தான் அரசாணை வெளியாகிறது.

  • அரசாணை எண்.391/24.3.2020ல் பி.பி.இ கிட் ரூ290க்கு 50,000 கொள்முதல் செய்ய ரூ1.45கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் என்ன ஊரடங்கு ஊழல் என்றால் பி.பி.கி கிட் ரூ800- ரூ850க்கு திருப்பூரில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசாணையில் பி.பி.இ கிட் விலை ரூ290 என்று உள்ளது.

சுகாதாரத்துறையின் அரசாணை எண்.161/27.3.2020 மற்றும்  அரசாணை எண்.391/ 24.3.2020 மூலம் கோடிக்கணக்கில் ஊரடங்கு ஊழல் நடந்துள்ளது.

 இப்படி கொரோனா நோய் கட்டுப்படுத்துவதில் ,மனசாட்சியே இல்லாமல் சுகாதாரத்துறையின் அதிகாரமையத்தில் உள்ள அமைச்சரும், அதிகாரிகளும் கூட்டணி அமைத்து நடத்திய ஊரடங்கு ஊழல் வெளிச்சமாகி உள்ளது..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…தமிழகம் தனிநபர் கழிப்பறைகளில் கோடிக்கணக்கில் ஊழல்- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு…

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட தனி நபர் கழிப்பறைகளில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில்  மெகா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *