Breaking News
Home / பிற செய்திகள் / அதிமுக… சட்டமன்றத் தேர்தல் வியூகம்- சுனில் பணிகளை தொடங்கினார்.. பிரசாந்த் கிஷோர் VS சுனில்…

அதிமுக… சட்டமன்றத் தேர்தல் வியூகம்- சுனில் பணிகளை தொடங்கினார்.. பிரசாந்த் கிஷோர் VS சுனில்…

திமுக மற்றும் திமுக கூட்டணி பாராளுமன்றத் தேர்தல் வெற்றி பெற பணியாற்றி வந்த சுனில், திமுக பக்கம் இருந்து விலகினார்.

 திமுக சட்டமன்றத் தேர்தல் வெற்றி வியூகம் அமைக்க பிரசாந்த்கிஷோரை நியமித்துள்ளது. இதனால் சுனில், திமுக பக்கம் இருந்து விலகினார்.  திமுக  பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற அனைத்து பணிகளை மேற்க்கொண்டதால், திமுக கிராமங்கள் முதல் மாநகராட்சி வரை எந்த நிலையில் உள்ளது, திமுக தொண்டர்களின் மன நிலை, மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள்  உள்ளிட்ட அனைத்து புள்ளி விவரங்கள் சுனிலிடம் உள்ளது.

 அதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தரப்பிலிருந்து சுனிலிடம் சில நாட்களாக பேச்சு வார்த்தை நடத்தினார்கள். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சுனில் அதிமுகவுக்காக சட்டமன்றத் தேர்தல் வியூகம் அமைத்து, வெற்றி பெற வைக்கும் பணியை மேற்கொள்ள  ஒத்துக்கொண்டார். சில நாட்களாக பணிகளையும் தொடங்கிவிட்டார்.

 அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிமுக ஆதரவு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தினமும் சுனிலின் தொடர்பில் உள்ளார்கள்..

  திமுகவுக்கு பிரசாந்த் கிஷோரும், அதிமுகவுக்கு சுனில் 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வியூகம் அமைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

 சுனில் அதிமுக ஆட்சிக்கு எதிரான மன நிலையை மாற்றுவதுப்பற்றியும், அதிமுக அரசின் ஊழல்கள், நிர்வாக சீர்கேடுகள் மக்கள் மத்தியில் வெளிச்சத்துக்கு வருவதை தடுக்கவும், முதல் கட்ட பணிகளை தொடங்கி உள்ளார்..

 திமுக தாப்பிலும் பிரசாந்த்கிஷோர் மூலம் சட்டமன்றத் தேர்தலுக்கான அதிரடியாக வியூகங்களை அமைத்து வருகிறது.

  பிரசாந்த் கிஷோர்  VS சுனில் இருவரின் சட்டமன்றத் தேர்தல் வியூகங்கள் எப்படி மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுகிறது என்று பொறுந்திருந்து பார்ப்போம்…

Comments

comments

About mani bharathi

Check Also

வாக்குபதிவு இயந்திரத்துக்கு பதிலாக- வாக்கு சீட்டு முறையை செயல்படுத்த- மக்கள்செய்திமையம் கையெழுத்து இயக்கம்…

MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PVT LTD வாக்கு பதிவு இயந்திரத்துக்கு பதில் வாக்கு பதிவு சீட்டு முறையை செயல்படுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *