Breaking News
Home / பிற செய்திகள் / சென்னை மாநகராட்சி… நிவாரண மையங்களில் அடிக்கடி விருந்து.. சென்னையில் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமா?

சென்னை மாநகராட்சி… நிவாரண மையங்களில் அடிக்கடி விருந்து.. சென்னையில் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமா?

சென்னை மாநகராட்சி மண்டலம் -5ல் உள்ள நிவாரண மையத்தில்(வடக்கு –பேசின் பாலம்) பிறந்த நாள் விருந்து, திருமண நாள் விருந்து என்று கொரோனா நேரத்திலும் தினமும் விருந்து நடந்துக்கொண்டு இருக்கிறது.

சென்னை மாநகராட்சியின் மண்டலம் -5, உதவி வருவாய் அலுவலர்கள் பாலச்சந்தர், திருப்பால், மற்றும் ஆறுமுகம் மூவரும் 6.5.2020 முதல்  கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள். சிகிச்சை முடிந்து திரும்பியவர்கள் வீட்டில் 14 நாட்கள்  தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டியவர்கள் நிவாரண மையத்தில் வந்து உட்கார்ந்துக்கொண்டு கொரோனாவை பரப்பி வருகிறார்கள் என்பதுதான்.

   நிவாரணம் மையம் கொரோனா ஆய்வு மையமாக செயல்படாமல் கொரோனாவை சமூக பரவலாக பரப்பு மையமாக செயல்பட்டு வருவதுதான் வேதனையாக இருக்கிறது.

 சில நாட்களுக்கு முன்பு, மண்டலம்-5 நிவாரண மையத்தில் திருமண நாள் கொண்டாட்டம்  முகக் கவசம் எதுவும் அணியாமல்  நடந்தது.

 18.5.2020 அன்று உதவி வருவாய் அலுவலர் பாலச்சந்தருக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்தை, மண்டலம் -5 , நிவாரண மையத்தில்  நடத்த முடிவு செய்தார்கள். விருந்துக்கு வேண்டிய மாளிகை பொருட்கள், காய்கறிகள் எல்லாம் வந்து இறங்கியது, ஆனால் விருந்துக்கான சிறப்பு உணவுகள் சமைக்கப்பட்டு, வெளியில் பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது.

ஆனால் பாலசந்தர் பிறந்த நாளுக்கு மண்டலம் -5ல் உள்ள நிவாரணம் மையத்தில் 18.5.2020 மதியம் இரண்டு மணிக்கு முக்கிய விஜபிகள் 30 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் -65 விருந்து நடைபெற்றது.

 சென்னை மாநகராட்சியின் மண்டலம் -5ல் நிவாரண மையத்தில் பணியாற்றியவர்களுக்கு கொரோனா நோய் தாக்கப்பட்டவுடன், நிவாரண மையத்தை மூடவில்லை ஏன்?

  நிவாரணம் மையம் மூலம் கொரோனா பரவும் போது, பிறகு எப்படி சென்னை  இராயபுரம், திருவொற்றியூரில் பகுதியில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும்.

 பல நிவாரண மையங்கள் மூலமாக சென்னையில் கொரோனா பரவி வருகிறது என்பதுதான் உண்மை.

 இது தெரியாமல்  சென்னை மாநகராட்சி கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்  ஐ.ஏ.எஸ் சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனாவை கட்டுப்படுத்த இரவு பகலாக  செயல்படுவது வேடிக்கையாக உள்ளது.

 முதலில் கொரோனா அதிகம் உள்ள பகுதிகளில் நிவாரண மையங்களை மூடுங்கள், கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரும்.

   சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் எதையும் கண்டுகொள்ளாமல், துக்ளக் தர்பார் நிர்வாகத்தை நடத்தி வருகிறார்.

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…நகராட்சி நிர்வாகம்… மும்மூர்த்திகளின் ஊழல் கூத்து… இருவர் ரப்பர் ஸ்டாம்பா?…

நகராட்சி நிர்வாக ஆணையரகம் ஊழலில் மூழ்கிவிட்டது. நகராட்சி நிர்வாகத்துறை ஊழலில் காணாமல் போய்விட்டது. நகராட்சிநிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், கூடுதல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *