Breaking News
Home / பிற செய்திகள் / சென்னை மாநகராட்சி… தலைமைப் பொறியாளர் நடராசன் எங்கே?- கொரோனாவிலும் பணிக்கு வரவில்லை ஏன்?- துக்ளக் தர்பார் நிர்வாகமா?

சென்னை மாநகராட்சி… தலைமைப் பொறியாளர் நடராசன் எங்கே?- கொரோனாவிலும் பணிக்கு வரவில்லை ஏன்?- துக்ளக் தர்பார் நிர்வாகமா?

தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் தலைமைப் பொறியாளராக அதிகாரமையத்தில் வலம் வந்த என்.நடராசன்,  பெரு நகர சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளராக 20.12.19(அரசாணை எண்.503)ல் மாறுதல் செய்யப்பட்டார்.

 சென்னை மாநகராட்சியில் தலைமைப் பொறியாளராக பணியாற்றிய புகழேந்தி, நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளராக மாறுதல் செய்யப்பட்டு பணியில் சேர்ந்துவிட்டார்.

 ஆனால் சென்னை மாநகராட்சிக்கு மாறுதல் செய்யப்பட்ட என்.நடராசன், பணியில் சேர்ந்துவிட்டு நீண்ட விடுப்பில்  சென்றுவிட்டார். என்.நடராசன், தாழ்த்தப்பட்டவர்கள் நல ஆணையத்தில் தான் மாறுதல் செய்யப்பட்டது தொடர்பாக அனுப்பிய புகார் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது.

 இதை தொடர்ந்து தலைமைப் பொறியாளர் என்.நடராசன், பணிக்கு வராமல் நீண்ட நாள் விடுப்பில்தான் உள்ளார்.

 கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்பட்டவுடன் சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளர்(தரக்கட்டுப்பாடு) என்.நடராசனின் நீண்ட விடுப்பை  ரத்து செய்து, பணிக்கு வரவழைத்திருக்க வேண்டும். ஆனால் என்.நடராசனை பணிக்கு அழைக்க, ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் எந்த முயற்சியும் செய்யவில்லை..ஏன்..ஏன்….

  நகராட்சி நிர்வாக ஆணையராக பிரகாஷ் ஐ.ஏ.எஸ் பணியாற்றிய போது, ஆல் இன் ஆல் தலைமைப் பொறியாளராக என்.நடராசன்தான். அதனால் பழைய விசுவாசத்தால், நீண்ட விடுப்பை ரத்து செய்து அழைக்கவில்லையோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது..

 கொரோனாவால், சென்னை மாநகராட்சியில் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர்  நீண்ட விடுப்பில் இருப்பது சட்டத்துக்கு புறம்பானது. யார் நடவடிக்கை எடுப்பது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

 கொரோனாவுக்காக மண்டலத்துக்கு 50பேர் என்று சுமார் 750 பேர் தற்காலிகமாக ரூ15,000 சம்பளத்துக்கு நியமிக்கப்பட்டார்கள். ஆனால் இரண்டு மாதமாக 750 பேருக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை. இதனால் வளசரவாக்கம் மண்டலத்தில் தற்காலிக பணியாளர்கள் ஆர்ப்பட்டமே நடத்தினார்கள்..

 சென்னை மாநகராட்சியை நிர்வாகம் முடங்கிவிட்டது என்பதைவிட துக்ளக் தர்பார் நிர்வாகம் நடக்கிறது என்பதுதான் உண்மை..

Comments

comments

About mani bharathi

Check Also

தமிழக அரசின்… வருவாய்த்துறை & சுகாதாரத்துறை கொரோனா நிதி ஒதுக்கீடுகளில் தொடரும் மர்மம்… காவல்துறைக்கு ரூ6கோடி எதற்கு?…

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறையிலும் கொரோனா தொடர்பான நிதி ஒதுக்கீடு அரசாணைகளில் மர்மம் தொடருகிறது. பல …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *