
தமிழக அரசின் நிதித்துறையிலிருந்து Letter No.74/JS(MA)/FINANCE(Salaries)/2020 dated 1.4.2020 கடித எண், கடிதத்தில் Tamilnadu Transparency in Tender rules 2000 an the provisions of section 9&10 லிருந்து கீழ்க்கண்டவைகளுக்கு விலக்கு அளித்துள்ளது.

- அத்தியவாசிய பொருட்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து கொள்முதல் செய்ய…
- மாஸ்க், கையுறை, பி.பி.இ கிட் கொள்முதல் செய்ய..
- கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரம் கொள்முதல் செய்ய
- கிருமி நாசினி மருந்துகள் கொள்முதல் செய்ய
- கொரோனா உதவி மையங்கள் பராமரிப்பு
- கொரோனா உதவி செய்யும் மையங்கள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு சப்ளை செய்ய, மளிகை பொருட்கள், அத்தியவாசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கொள்முதல் செய்ய..
- கொரோனா நோயாளிகளுக்கு அமைக்கப்படும் சிறப்பு வார்டுகளில் அடிப்படை சுகாதாரப்பணிகளை மேற்க்கொள்ள சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பணிகள் செய்வது தொடர்பாக
இந்த கடிதத்தின் 3ம் பக்கத்தில் Yours faithfully, for ADDITIONAL CHIEF SECRETARY TO GOVERNMENT இரண்டுக்கும் இடையே இ.அசோக்குமார் என்று தமிழில் எழுதப்பட்டுள்ளது. for ADDITIONAL CHIEF SECRETARY TO GOVERNMENT அருகில் அப்ருவல் மினி கையெழுத்து இருக்கும் அதுவும் இல்லை.
அதனால் இந்த நிதித்துறையின் கடிதம் உண்மைதானா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள் பதில் அளிக்க வேண்டும்.