Breaking News
Home / பிற செய்திகள் / தமிழக அரசின்.. நகராட்சி நிர்வாகம் தலைமைப் பொறியாளர்- இரண்டு முறை பணி நீட்டிப்பு பெற்ற- புகழேந்திக்கு மீண்டும் பணி நீட்டிப்பா?…

தமிழக அரசின்.. நகராட்சி நிர்வாகம் தலைமைப் பொறியாளர்- இரண்டு முறை பணி நீட்டிப்பு பெற்ற- புகழேந்திக்கு மீண்டும் பணி நீட்டிப்பா?…

சென்னை மாநகராட்சியில் தலைமைப் பொறியாளராக  பணியாற்றிய புகழேந்தி, 2016ல் ஜூன் மாதம் ஒய்வு பெறும் நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு கொடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில்  உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரமையத்தில் இருப்பவர்களுடன் நெருக்கமானார்.

 உள்ளாட்சி அமைப்புகளில்  அதிகாரமையத்தில் இருப்பவர்களுக்கு ஆல் இன் ஆல் பணியை திறமையாக செய்தார். அதனால் 2018 ஜூன் மீண்டும் இரண்டு வருடம் நீட்டிப்பு கொடுக்கப்பட்டது.

 இந் நிலையில் சென்னை மாநகராட்சியில் பலருக்கு தலைமை பொறியாளர் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. தலைமைப் பொறியாளர் பதவி பெற்ற ஒருவருக்கும், புகழேந்திக்கு இடையே கமிசன் வாங்கி கொடுப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் புகழேந்தி, நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளராக 20.12.19ல்(அரசாணை எண்.503) மாற்றப்பட்டார். நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் தலைமைப் பொறியாளராக பணியாற்றும் நடராசன் சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

 தலைமைப் பொறியாளர்கள்  புகழேந்தி, நடராசன் இருவரும் தங்கள் பணி மாறுதலை ரத்து செய்ய முயற்சி செய்தார்கள். ஆனால் ரத்து செய்ய முடியாத காரணத்தால் அவரவர் மாறுதல் செய்யப்பட்ட இடங்களில் பணியில் சேர்ந்தார்கள்.

 சென்னை மாநகராட்சியில் பணி நீட்டிப்பு பெற்ற தலைமைப் பொறியாளர் புகழேந்தியை, நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தின் தலைமைப் பொறியாளராக நியமிக்கவே முடியாது. ஆனால் நகராட்சி விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக மாறுதல் செய்யப்பட்டு பணியில் தொடர்ந்தார்..

 இதைவிட வேடிக்கை என்னவென்றால் தலைமைப் பொறியாளர்  புகழேந்தி சிவில் பொறியாளரே இல்லை. மெக்கானிக்கல் பொறியாளர். மெக்கானிக்கல் பொறியாளர், தலைமைப் பொறியாளராக நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் பணியாற்ற தகுதியே இல்லை.

நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலத்தின் தலைமைப் பொறியாளர் புகழேந்திக்கு வானாளவிய அதிகாரத்தை  பயன்படுத்தி, மெக்கானிக்கல் பொறியாளராக இருந்தும் கோடிக்கணக்கான மதிப்பு சிவில் பணிகள், சிவில் டெண்டர் தொடர்பான கோப்புகளுக்கு அனுமதி கொடுத்து வருவது பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. நீதிமன்றம் சென்றால் மெக்கானிக்கல் பொறியாளர் புகழேந்தி கையெழுத்து போட்ட பல  கோடி மதிப்புள்ள சிவில் டெண்டருக்கான திட்டங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்புகள் அதிகம்..

 வழக்கம் போல் நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலத்திலும்  உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரமையத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கமானவராக செயல்பட்டு, இங்கும் ஆல் இன் ஆல் பெயர் பெற்றார்..

  தலைமைப் பொறியாளர் பதவி உயர்வுக்கு காத்திருக்கும் பொறியாளர்கள், புகழேந்திக்கு  பணி நீட்டிப்பு கொடுக்க கூடாது என்று டன் கணக்கில் புகார்களை ஆதாரங்களுடன் அனுப்பிவிட்டு காத்திருக்கிறார்கள்..

 ஆனால்  ஜூன் 2020ல் ஒய்வு பெற வேண்டிய தலைமைப் பொறியாளர் புகழேந்திக்கு  ஒராண்டுக்கு பணி நீட்டிப்பு கொடுக்கும் கோப்பு வேகமாக நகருகிறது…அம்மாடியோவ்…

Comments

comments

About mani bharathi

Check Also

தமிழக அரசின்… வருவாய்த்துறை & சுகாதாரத்துறை கொரோனா நிதி ஒதுக்கீடுகளில் தொடரும் மர்மம்… காவல்துறைக்கு ரூ6கோடி எதற்கு?…

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறையிலும் கொரோனா தொடர்பான நிதி ஒதுக்கீடு அரசாணைகளில் மர்மம் தொடருகிறது. பல …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *