Breaking News
Home / பிற செய்திகள் / தமிழக அரசு – அதிரடி.. டெண்டர் டிரான்பரன்சி சட்டத்திலிருந்து – அத்தியவாசிய பொருட்களுக்கு விலக்கு..

தமிழக அரசு – அதிரடி.. டெண்டர் டிரான்பரன்சி சட்டத்திலிருந்து – அத்தியவாசிய பொருட்களுக்கு விலக்கு..

கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசின் நிதித்துறை – Letter No.74/JS(MA)/Finance(salaries)/2020 dated 1.4.2020ல் அனைத்து துறைகளுக்கும் அனுப்பிய உள்ள கடிதத்தில் Tamilnadu Transparency in Tender rules 2000 an the provisions of section ( &10 லிருந்து கீழ்க்கண்டவைகளுக்கு விலக்கு அளித்துள்ளது.

  1. அத்தியவாசிய பொருட்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து கொள்முதல் செய்ய…
  2. மாஸ்க், கையுறை, பி.பி.இ கிட் கொள்முதல் செய்ய..
  3. கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரம் கொள்முதல் செய்ய
  4. கிருமி நாசினி மருந்துகள் கொள்முதல் செய்ய
  5. கொரோனா உதவி மையங்கள் பராமரிப்பு
  6. கொரோனா உதவி செய்யும் மையங்கள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு சப்ளை செய்ய, மளிகை பொருட்கள், அத்தியவாசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கொள்முதல் செய்ய..
  7. கொரோனா நோயாளிகளுக்கு அமைக்கப்படும் சிறப்பு வார்டுகளில் அடிப்படை சுகாதாரப்பணிகளை மேற்க்கொள்ள  சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பணிகள் செய்வது தொடர்பாக

இந்த ஏழு வகையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதால், கொரோனாவுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என்பது உறுதியாகிறது.

நிதித்துறையின்  கடித்தை பயன்படுத்தி, 528 பேரூராட்சிகளுக்கும் ஏற்கனவே ரூ17.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் மேலும் ரூ20கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ37.84கோடியும், 528 பேரூராட்சிகளிலும் வழக்கம் போல் போலி பில் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் தெளிக்கப்படும் கிருமி நாசினி தரமில்லை, நீர்த்து போய் தண்ணீர் மட்டுமே உள்ளது, அத்தியவாசிய பொருட்களும் தரமில்லை என்று குற்றச்சாட்டுகள் தமிழகம் முழுவதும் எழுந்துள்ளது.

  இதற்கு காரணம் அத்தியவாசிய பொருட்கள், கிருமி நாசினி, மாளிகை பொருட்கள் குறைந்த விலைக்கு தரமில்லாத பொருட்களை கொள்முதல் செய்துள்ளார்கள். ஆனால் கோப்புகளில்  தரமான பொருட்களை கொள்முதல் செய்ததாக உள்ளது.

 கொரோனாவை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல துறைகளில்  கொள்முதலில் என்ன முறைகேடு நடந்தாலும் சரி,  அப்பாவி மக்களுக்கு கொரோனா பரவாமல் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

   கொரோனாவிலிருந்து தமிழக மக்களை காப்பாற்றுங்கள்  என்பதையே அதிகாரிகளுக்கு மக்கள்செய்திமையத்தின் பணிவான வேண்டுகோளாக முன் வைக்கிறது..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…நகராட்சி நிர்வாகம்… மும்மூர்த்திகளின் ஊழல் கூத்து… இருவர் ரப்பர் ஸ்டாம்பா?…

நகராட்சி நிர்வாக ஆணையரகம் ஊழலில் மூழ்கிவிட்டது. நகராட்சி நிர்வாகத்துறை ஊழலில் காணாமல் போய்விட்டது. நகராட்சிநிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், கூடுதல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *