Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா… விலை இல்லா பொருட்கள் மதிப்பு ரூ100/- பாமாயில் கொள்முதலில் முறைகேடா?- KUMAR AGRO TECH PVT LTD மீது புகார்..

கொரோனா… விலை இல்லா பொருட்கள் மதிப்பு ரூ100/- பாமாயில் கொள்முதலில் முறைகேடா?- KUMAR AGRO TECH PVT LTD மீது புகார்..

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு  உத்தரவு அமுலில் இருப்பதால், ரேசன் கடைகளில் ஏப்ரல், மே  ஆகிய இரண்டு மாதங்களில் விலை இல்லாமல் ஒரு லிட்டர் பாமாயில், ஒரு கிலோ துவரம்பருப்பு, 1.5கிலோ சர்க்கரை மற்றும் 20 கிலோ அரிசி கொடுக்கப்பட்டு வருகிறது.

 20கிலோ அரிசி விலை இல்லாமல் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பாமாயில் விலை ரூ25, ஒரு கிலோ துவரம்பருப்பு விலை ரூ30, 1.50 கிலோ சர்க்கரை விலை அதிகபட்சமாக ரூ45. ஆக மொத்த ரேசன் கார்டுகளுக்கு விலை இல்லாமல் கொடுக்கப்படும் பொருட்களின் விலை ரூ100/-தான்.. ஏதோ…நூற்றுக்கணக்கான மதிப்புள்ள விலை இல்லா பொருட்கள் கொடுப்பதாக தமிழக அரசு கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

 கொரோனாவுக்காக  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் KUMAR AGRO TECH  PVT LTD என்ற நிறுவனம் தான் பாமாயில் கொள்முதல் செய்து கொடுக்கிறது(SUN RIGHT-CLEVER).

 KUMAR AGRO TECH  PVT LTD நிறுவனம் பிரைவேட் லிமிட் நிறுவனமாக ஆகஸ்டு 2019ல் தான் பதிவு செய்யப்படுகிறது. பாமாயில் கொள்முதலில் அனுபவம் இல்லாத நிறுவனத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்வதாக சர்ச்சை எழுந்துள்ளது.

 KUMAR AGRO TECH  PVT LTD நிறுவனம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 2.1.19ல் மட்டும் என்ன சப்ளை செய்தது என்று தெரியவில்லை. ஆனால் அந்த நிறுவனத்துக்கு காசோலை எண்.124502 மூலம் ரூ14.15 இலட்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

 பாமாயில் 26.7.2019 நடந்த டெண்டரில் ஒரு லிட்டர் பாமாயில் ரூ78.95 என்ற விலையில்தான்  156 லட்சம் ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட் கொள்முதல் செய்யப்பட்டது.

 கொரோனாவுக்காக ரேசன் கடைகளில் விலை இல்லாமல் கொடுக்கப்படும் ஒரு லிட்டர் பாமாயில் KUMAR AGRO TECH  PVT LTD நிறுவனம் மூலம் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக, ஏற்கனவே பாமாயில் சப்ளை செய்த நிறுவனங்கள் புகார் அனுப்பி உள்ளது.  ஒரு லிட்டர் ரூ79.60க்கு கொள்முதல் செய்யப்பட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரு லிட்டருக்கு 65 பைசா கூடுதல் விலை கொடுத்து பாமாயில் KUMAR AGRO TECH  PVT LTD நிறுவனத்திடம் கொள்முதல் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

 ரூ79.60க்கு கொள்முதல் செய்யப்பட்டு இருந்தால், ஒரு லிட்டர் பாக்கெட்டுக்கு 65பைசா என்று கணக்கீட்டால் தமிழ்நாடு நுகர்பொருள்வாணிபக் கழகத்துக்கு 156 லட்சம் லிட்டருக்கு  ஒவ்வொரு கொள்முதலுக்கு ரூஒரு கோடிக்கு மேல் கூடுதல்  செலவாகும்.  ஒரு கோடி கூடுதல் செலவு என்பது நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கு கமிசனா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 ஏப்ரல், மே மாதங்களில் ரேசன் கடைகளில் விலை இல்லாமல் விநியோகம் செய்யப்பட்ட பாமாயில் KUMAR AGRO TECH  PVT LTD நிறுவனத்திடம்  கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பாக தமிழக அரசு  விரிவான அறிக்கை வெளியிடுமா?

Comments

comments

About mani bharathi

Check Also

தமிழக அரசின்… வருவாய்த்துறை & சுகாதாரத்துறை கொரோனா நிதி ஒதுக்கீடுகளில் தொடரும் மர்மம்… காவல்துறைக்கு ரூ6கோடி எதற்கு?…

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறையிலும் கொரோனா தொடர்பான நிதி ஒதுக்கீடு அரசாணைகளில் மர்மம் தொடருகிறது. பல …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *