Breaking News
Home / பிற செய்திகள் / சுகாதாரத்துறையில் துக்ளக் தர்பார்… சுகாதார ஆய்வாளர் பணி.. Gentle Man நிறுவனம் மூலம் விற்பனை.. கொரோனா சிறப்பு சலுகை நீட்டிப்பு…

சுகாதாரத்துறையில் துக்ளக் தர்பார்… சுகாதார ஆய்வாளர் பணி.. Gentle Man நிறுவனம் மூலம் விற்பனை.. கொரோனா சிறப்பு சலுகை நீட்டிப்பு…

தமிழக அரசின் சுகாதாரத்துறையின்  மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகத்தில் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சுகாதார ஆய்வாளர் பணி GENTLE MAN FACILTY MANAGEMENT PVT LTD நிறுவனம் மூலம் OUTSOURCING  மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

  மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநராக டாக்டர் குருநாதன் நியமிக்கப்பட்ட பிறகு சுகாதார ஆய்வாளர் பணியின் விற்பனை வேகமாக நடைபெறுகிறது.

 சுகாதார ஆய்வாளர் பணிக்கு சம்பளம் ரூ20,000/- ஆனால் இலஞ்சம் ரூ3 முதல் ரூ5 இலட்சம். கொரோனா சிறப்பு சலுகையாக ரூ2 இலட்சத்துக்கு சுகாதார  ஆய்வாளர் பணி 2.5.2020 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பரமக்குடி பிரசாத்துக்கு GENTLE MAN கொடுத்த பணி ஆணையில் பரமக்குடி துணை இயக்குநர் கையெழுத்து போட்டு அப்ரூவல் செய்துள்ளார். பிரசாத் பணியில் சேர்ந்துவிட்டார்..

Dr Gurunathan director

 கொரோனாவுக்காக சிறப்பு சலுகை 17.5.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது..வாங்க..சார்..வாங்க…

  1. GENTLE MAN FACILTY MANAGEMENT PVT LTD
  2. BIGBOSS FACILTY MANAGEMENT PVT LTD
  3. SPICEKING MANAGEMENT PVT LTD 

ஆகிய மூன்று நிறுவனங்களும் 571/2, முதல் மாடி, அண்ணாசாலை, டி.எம்.எஸ் அலுவலகம் எதிரில், தேனாம்பேட்டை, சென்னை-18 செயல்படுகிறது. நம்ம டி.எம்.எஸ் அலுவலகம் எதிரில்தான்.. அப்பதான் இலஞ்ச பணம் உடனுக்கு உடன் அதிகாரிகளுக்கு போய் சேரும்..

 இந்த மூன்று நிறுவனங்களின் இயக்குநர்கள் இரத்னசாமி அருள்ஜோதி மற்றும் இரத்னசாமி அருள்கண்ணன்.

 Gentle Man  நிறுவனம் மூலம் அளிக்கப்படும், சுகாதார ஆய்வாளர் பணிக்கான ஆணையை அப்படியே ஏற்றுக்கொண்டு, உடனடியாக பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு முழுவதும் வாய்மொழி உத்தரவு.

  Gentle Man நிறுவனம்  மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரிடம் டாக்டர் குருநாதனிடம் சுகாதார ஆய்வாளர் பணிக்கு அளித்த, உத்தரவின் நகலை கொடுத்துவிடுமாம்..

 சுகாதாரத்துறையில்  அமைச்சர் விஜயபாஸ்கர் ஆசியுடன், இயக்குநர் டாக்டர் குருநாதன் பின்னணியில் சுகாதார ஆய்வாளர் பணி OUTSOURCING  என்ற பெயரில் Gentle Man நிறுவனம் விற்பனை செய்வது பார்க்கும் போது, சுகாதாரத்துறையில் துக்ளக் தர்பார் நடப்பதை உறுதி செய்கிறது.

 மக்கள்செய்திமையம் GENTLE MAN FACILTY MANAGEMENT PVT LTD நிறுவனம் மூலம் சுகாதார ஆய்வாளர் பணி விற்பனை செய்யப்படுவதை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு ஆதாரங்களுடன்(ஆடியோ) புகார் அனுப்பி உள்ளது.

 சுகாதாரத்துறையில் மட்டுமல்ல் துக்ளக் தர்பார்.. தமிழக அரசின் நிர்வாகம் முழுவதும் துக்ளக் தர்பார்தான்…

Comments

comments

About mani bharathi

Check Also

தமிழக அரசின்… வருவாய்த்துறை & சுகாதாரத்துறை கொரோனா நிதி ஒதுக்கீடுகளில் தொடரும் மர்மம்… காவல்துறைக்கு ரூ6கோடி எதற்கு?…

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறையிலும் கொரோனா தொடர்பான நிதி ஒதுக்கீடு அரசாணைகளில் மர்மம் தொடருகிறது. பல …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *