Breaking News
Home / பிற செய்திகள் / தூத்துக்குடி.. சண்முகநாதன் எம்.எல்.ஏ – ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகி சந்திப்பு- கைமாறிய சூட்கேஸ் எத்தனை?- ஒரங்கட்டப்பட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ…

தூத்துக்குடி.. சண்முகநாதன் எம்.எல்.ஏ – ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகி சந்திப்பு- கைமாறிய சூட்கேஸ் எத்தனை?- ஒரங்கட்டப்பட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ…

தூத்துக்குடி மாவட்ட எட்டயபுரம் ரோட்டில் உள்ள  மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ கம் மாவட்ட செயலாளர் சண்முகநாதனுடன்,  மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை நிர்வாகி சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்துள்ளது. பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

  8.5.2020ம் தேதி காலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் தலைமையில்  மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ ஏழைகளுக்கு கொரோனா நிவாரணம் பொருட்கள் வழங்கினார்.

 நிவாரணப் பொருட்கள் வழங்கிய பிறகு மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் அலுவலகத்தில் காத்திருந்த மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை நிர்வாகியுடன், சண்முகநாதன் எம்.எல்.ஏ சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது. இந்த சந்திப்பின் போது, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க, அதிமுகவில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம், அதிமுகவினரைஅமைதியாக இருக்க சொல்லுங்க  என்று  சண்முகநாதன் எம்.எல்.ஏவிடம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகி கேட்டுக்கொண்டார். பிறகு ஸ்டெர்லைட் நிர்வாகி தரப்பிலிருந்து சூட்கேஸ்கள் கைமாறியுள்ளது.

  சண்முகநாதன் எம்.எல்.ஏ ஆனந்த, அதிர்ச்சியடைந்தார். தலைவர் சுதாகரிடம், சண்முகநாதன் சிரித்துக்கொண்டே மக்கள் எப்படி போனால் நமக்கு என்ன.. ஸ்டெர்லைட் ஆலை திறக்கட்டும். நம்ம நாலு டெண்டர் எடுக்கலாமே என்று முணுமுணுத்தார்..

 மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சார்பில் நிவாரண பொருட்கள் கொடுக்கும் விழாவுக்கு செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அழைக்கப்படவில்லை.  இன்னும் சொல்லப்போனால், நிவாரணம் வழங்கு நிகழ்ச்சி இருப்பதே அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு தெரியாது.

  மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், சண்முகநாதன் எம்.எல்.ஏ ஆதரவாளர் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சண்முகநாதனிடம் சூட்கேஸ் கொடுப்பதால், அமைச்சர் கடம்பூர் ராஜூ அழைக்கவில்லை என்று கடம்பூர் ராஜூ ஆதரவாளர்கள் சண்முகநாதனுக்கு எதிராக திரும்பியுள்ளார்.

 ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தால் தூத்துக்குடி மாவட்ட அதிமுகவில் கோஷ்டி எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இந்த விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட அதிமுகவில் யாருடைய பதவிகள் எல்லாம் பறி போகபோகிறதோ என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 தூத்துக்குடியில் விரைவில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.

    பணம் பத்தும் செய்யும்….பாவம் துப்பாக்கி சூட்டில் பலியான, கை, கால்களை இழந்தவர்களை நினைத்தால் நமக்கு ரத்த கண்ணீர் வருகிறது.. அதிமுகவினருக்கு வரவில்லையே?

Comments

comments

About mani bharathi

Check Also

தமிழக அரசின்… வருவாய்த்துறை & சுகாதாரத்துறை கொரோனா நிதி ஒதுக்கீடுகளில் தொடரும் மர்மம்… காவல்துறைக்கு ரூ6கோடி எதற்கு?…

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறையிலும் கொரோனா தொடர்பான நிதி ஒதுக்கீடு அரசாணைகளில் மர்மம் தொடருகிறது. பல …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *