Breaking News
Home / பிற செய்திகள் / ஒ.பன்னீர்செல்வம் மகன் ஜெயாபிரதீப்புக்கு- மக்கள்செய்திமையம் சவால்…

ஒ.பன்னீர்செல்வம் மகன் ஜெயாபிரதீப்புக்கு- மக்கள்செய்திமையம் சவால்…

 ஒ.பன்னீர்செல்வம் மகன் ஜெயாபிரதீப், திமுகவின் நாளிதழில் முரசொலிக்கு சவால் விட்டு விடியோ வெளியிட்டார். உண்மையில் ஜெயாபிரதீப், மக்கள்செய்திமையத்திற்கு சவால் விட்டு இருக்க வேண்டும். இதோ..மக்கள்செய்திமையம் சவால்..பதில் சொல்ல தயாரா?

 மக்கள்செய்திமையம் வெளியிட்ட செய்தியை மேற்க்கோள் காட்டிதான் செய்தி முரசொலியில் வெளியானது. ஒ.பி.எஸ் குடும்பம் அவினாசியில் ரூ200கோடி முதலீடு் என்பதுதான் செய்தி.

  தர்மயுத்தம் புகழ் அதிமுக அரசின் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மகன்கள் ஜெயபிரதீப், ரவீந்திரநாத்குமார் மற்றும் கவிதா பானு முவரின்  VIJAYANTH DEVELPERS PVT PTD நிறுவனம் திருப்பூர் மாவட்டம் அவினாசி சட்டமன்றத் தொகுதியில் திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட ராக்கிபாளையம் கிராமத்தில் 446/1,44/2,447/1,447/2, 448,449,451,462/2,462/3, 463/1,463/2, 464,465,465/1,465/2 ஆகிய சர்வே எண்களில் உள்ள 9.02 ஏக்கரில் வீட்டுமனை அப்ரூவல் பெறப்பட்டு விற்பனை செய்யப்படு வருகிறது.

 ஒ.பி.எஸ் மகன் ஜெயாபிரதீப்புக்கு மக்கள்செய்திமையம் சவால்..

 சவால்-1. ராக்கிபாளையம் கிராமம் சர்வே எண்.446,446.448,449,463,464,465 உள்ளிட்ட சர்வே எண்கள் உள்ள விவசாயி நிலங்களின் உரிமையாளரான விவசாயிகள்  ராக்கிபாளையம் கிராம கூட்டுறவு விவசாய கடன் சங்கத்தில் கடன் வாங்கி, கடன் கட்ட முடியாமல் சங்கம் எழுதி வாங்கிய நிலங்கள். முத்துசாமி ஒரு ஏக்கர் நிலத்துக்கு ரூ5000 கடன் வாங்கி, கட்ட முடியாமல் சங்கம் 1059/78ல் எழுதி வாங்கி கொண்ட நிலம். இந்த நிலங்கள் பலர் கைமாறி, அடிமாட்டு விலைக்கு நீங்கள் வாங்கி உள்ளீர்கள்..

 சவால் -2. சர்வே எண்.446/1,446/2ம் 447/1, 465/1,465/2, 447/2,462/3 ஆகிய சர்வே எண்களில் விவசாய பூமி, வண்டி தடம். விவசாயி நிலம். இதில் 1.25 ஏக்கர் 2005ல் வீட்டுமனை மாற்றப்பட்டும்,  ரத்து செய்யப்பட்டுள்ளது.

 சவால் -3 காளியம்மாள், கீதா, காளிதாஸ் மூவரும் வாங்கிய கடனுக்காக Induslind bank ltd எழுதிய வாங்கிய நிலம்.

சவால் -4. சர்வே எண்.451,452 ஜி.விஜயலட்சுமியிடமிருந்துய் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எழுதி வாங்கிக்கொண்டது. 25.2.2019ல் VIJAYANTH DEVELPERS PVT PTD ஜெயா பிரதீப், விஜயலட்சுமி மூலம் ஸ்டேட் பேங்கி ஆப் இந்தியா எழுதி வாங்கிய நிலங்களை, கடனை செலுத்தி, திருப்பி எழுதி வாங்கி அந்த நிலத்தை(சர்வே எண்.446/1- 1.12ஏக்கர்) விஜயலட்சுமியிடமிருந்து வாங்கியுள்ளார்.  இதில் என்ன வேடிக்கை என்றால் 1.12ஏக்கர் நிலத்தின் மார்கெட் மதிப்பு மார்ச் 2019ல் ரூ4.19 இலட்சம். ஆனால் VIJAYANTH DEVELPERS PVT PTD ஜெயா பிரதீப், வாங்கிய விலை ரூ45/18 இலட்சம்( மார்க்கெட் விலையை கூட்டி, வீட்டுமனை விலை  அதிக விலைக்கு விற்க செய்த பிளான்)

 சவால் -5. மார்ச் 5 2019ல் வாங்கிய விவசாய நிலங்களை  விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக ,அதிகாரத்தை துஷ்பிரோயம் செய்து, வீட்டுமனைகளாக மாற்றப்பட்டுள்ளது. 24.10.19ல் தமிழ்நாடு அரசு மேதகு ஆளுநர் அவர்கள் பெயரில் GIFT DEED  பதிவு செய்து கொடுக்கும் போது வீட்டுமனைகளாக மாற்றப்பட்டுள்ளது.

 சவால் -6- 14.2.2020 பதிவு எண்.2134/2020ல் VIJAYANTH DEVELPERS PVT PTD ஜெயா பிரதீப் 1058.75 சதுர அடி வீட்டுமனையை கவிதாவுக்கு பதிவு செய்து கொடுக்கும் போது சந்தை விலை ரூ5.29 இலட்சம்தான். ஆனால் சந்தை விலையை உயர்த்த ரூ14.92 இலட்சத்துக்கு பதிவு செய்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

 இப்படி சந்தை விலை உயர்த்தி, பல முறைகேடுகளை செய்து, முதல் கட்டமாக வீட்டுமனைகளை விற்பனை செய்து வருகிறது VIJAYANTH DEVELPERS PVT PTD  நிறுவனம்..

 இப்படி திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட ராக்கிபாளையம் கிராமத்தில் 9.02 ஏக்கரில் முதல் கட்டமாக வீட்டுமனை விற்பனை பெயரில், ஊழல் கூத்தை VIJAYANTH DEVELPERS PVT PTD நடத்தி வருகிறது..

 VIJAYANTH DEVELPERS PVT PTD  ஜெயாபிரதீப், மக்கள்செய்திமையத்தின் சவால்களுக்கு பதில் சொல்லதயாரா?

Comments

comments

About mani bharathi

Check Also

தமிழக அரசின்… வருவாய்த்துறை & சுகாதாரத்துறை கொரோனா நிதி ஒதுக்கீடுகளில் தொடரும் மர்மம்… காவல்துறைக்கு ரூ6கோடி எதற்கு?…

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறையிலும் கொரோனா தொடர்பான நிதி ஒதுக்கீடு அரசாணைகளில் மர்மம் தொடருகிறது. பல …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *