Breaking News
Home / பிற செய்திகள் / தமிழகத்தில் துக்ளக் தர்பார்.. திவாலா… ரூ10இலட்சம் கோடி கடனா? ஒய்வு வயது 58 to 59…

தமிழகத்தில் துக்ளக் தர்பார்.. திவாலா… ரூ10இலட்சம் கோடி கடனா? ஒய்வு வயது 58 to 59…

முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதா 7.3.2002ல் அதாவது 18ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணி, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு எழுதிய கடிதத்தில் நிர்வாக திறமையற்றவர் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

 I was distressed to learn that tamilnadu is lagging behind other states in securingcentral assistance.

  I was disturbed to lears that of late in the case of many centrally sponsored and central schemes funds released by the government of india are not being fully utlised due to poor planning and  tardy implementation..

 முதல்வராக இருந்த ஜெயலலிதா கடிதத்தை பார்க்கும் போது, 18 ஆண்டுகளுக்கு முன்பே அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் நிர்வாக திறமையற்றவர்.. அமைச்சர் பதவிக்கு தகுதியில்லாதவர் என்று கூறியுள்ளார்.  ஜெயலலிதாவின்  கடுமையான விமர்சனத்துக்குள்ளான அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்தான் இன்று துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சர். அதனால் தமிழக அரசு வளர்ச்சி அடையாமல்,  திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.

       அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும்பவர்கள், சொசைட்டிகளில் பணியாற்றுபவர்கள் என்று தமிழக அரசின் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கு ஒய்வு பெறும் வயது 58லிருந்து 59ஆக நீட்டித்து அரசாணை 7.5.2020ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், தமிழ்நாடு மின்சாரவாரியம், தமிழ்நாடு நுகர்பொருள்வாணிபக் கழகம், தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட அனைத்து தமிழக அரசு நிறுவனங்களின் கடன் ரூ10 இலட்சம் கோடியை எட்டியுள்ளது. தமிழ்நாடு மின்சாரவாரிய கடன் மட்டும் ரூ1.50இலட்சம் கோடி..

 30.3.2020 தேதியிலிருந்து 28.4.2020 வரை பங்கு வடிவிலான பிணையப்பத்திரங்கள் மூலம்  தமிழக அரசு வாங்கிய கடன் ரூ6,560கோடி…

 அடுத்த சில மாதங்களில் தலைமைச் செயலகத்தில் மட்டும் 1000 ஊழியர்கள் & அதிகாரிகள் மற்றும் அனைத்துத்துறைகளையும் சேர்த்தால் சுமார் 10,000 பேர் ஒய்வு பெறுகிறார்கள். அதே போல் ஆசிரியர்களும் ஒய்வு பெறுகிறார்கள்.

 ஒய்வு பெறும் 10,000 ஊழியர்களுக்கு ஒவ்வொருக்கும்  குறைந்த பட்சம் ரூ40 இலட்சம் முதல் ஒரு கோடி வரை ஒய்வூதிய செட்டில்மெண்ட் செய்ய வேண்டும். உதாரணமாக கூடுதல் இயக்குநர் ஒருவர் ஒய்வு பெற்றால் அவருக்கு செட்டில் மெண்ட் தொகை ரூ80 லட்சத்தை தாண்டும்.

 அடுத்த சில மாதங்களில்  10,000 அரசு ஊழியர்கள்  ஒய்வு பெறுவதால் அரசுக்கு குறைந்த பட்சம் ரூ6000கோடி தேவைப்படும்.   அரசு போக்குவரத்து  ஊழியர்களுக்கு  கொடுக்க வேண்டிய ஒய்வூதிய பலன் நிலுவை ரூ910கோடி..ஆக மொத்தம் ரூ7000கோடிக்கு மேல் நிதி வேண்டும்.

   நிதி நெருக்கடியில் சிக்கி, தமிழக அரசு தடுமாறுவதால், வேறு வழியில்லாமல்,  2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்பதால், வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்கும் கட்சி நிதி நெருக்கடியில் சிக்கி தடுமாறட்டும் என்ற எண்ணத்தில் அதிமுக அரசு ஒய்வு பெறும் வயதை 58லிருந்து 59ஆக உயர்த்தியுள்ளது என்பதுதான் உண்மை.

  ஜெயலலிதா 7.3.2002 எழுதிய கடிதத்தை முழுமையாக படித்து பாருங்கள்.. ஒ.பன்னீர்செல்வம் அமைச்சர் பதவிக்கு தகுதியில்லாதவர் என்பது உறுதியாகும்..

Comments

comments

About mani bharathi

Check Also

தமிழக அரசின்… வருவாய்த்துறை & சுகாதாரத்துறை கொரோனா நிதி ஒதுக்கீடுகளில் தொடரும் மர்மம்… காவல்துறைக்கு ரூ6கோடி எதற்கு?…

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறையிலும் கொரோனா தொடர்பான நிதி ஒதுக்கீடு அரசாணைகளில் மர்மம் தொடருகிறது. பல …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *