Breaking News
Home / பிற செய்திகள் / தமிழகத்தில் துக்ளக் தர்பார்… விவசாயிகள் பெயரில் – விலை இல்லாமல்… மாபியாக்கள் பிடியில் நீர் நிலைகள்..

தமிழகத்தில் துக்ளக் தர்பார்… விவசாயிகள் பெயரில் – விலை இல்லாமல்… மாபியாக்கள் பிடியில் நீர் நிலைகள்..

தமிழகம் முழுவதும் களிமண், வண்டல் மண், சவுடு, சரளை மண் ஆகிய கனிமங்களை புதுக்கோட்டை ராமச்சந்திரனும், திண்டுக்கல் ரத்னமும் ஒவ்வொரு மாவட்டத்திலும் புரோக்கர்களை நியமித்து எடுத்து வந்தார்கள். இதனால் அரசுக்கு மிக குறைந்த அளவு ரூ100கோடி மட்டுமே கனிமங்கள் மூலம் வருமானம் வந்தது. கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் முடங்கி போனது.  PPS constructionயிடம் செம்பரம்பாக்கம் ஏரி மண் எடுக்க 8 ஆண்டுகளுக்கு ரூ191.27கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆதரவாளர் நெப்போலியன்(TN67BD9669), அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆதரவாளர் கோவில்பட்டி சுந்தரராஜன்(TN69AX8002) இரண்டு லாரிகளும் மணல் கடத்தும் போது, சாத்தூர் காவல்துறையினரிடம் சிக்கியது. லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 விவசாயிகள் பெயரில், விலை இல்லாமல் நீர் நிலைகள் மணல் மாபியாக்கள் கனிமங்களை கொள்ளையடிக்க, அதிமுக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

   தமிழக அரசின் செய்தி வெளியீடு எண்.316- 6.5.2020ல்  கொரோனா ஊரடங்கிலிருந்து விவசாயி பணிகளுக்கு ஏற்கனவே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு தேவையான களிமண், வண்டல் மண், சவுடு, சரளை மண்ணை விலையில்லாமல் தங்கள் கிராமத்திலோ அல்லது அருகாமை கிராமத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் நீர் நிலைகளில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று எடுத்துக்கொள்ளலாம். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை படிக்கும் போது, நீர் நிலைகளில் உள்ள கனிமங்களை விவசாயிகள்  பெயரில் விலை இல்லாமல் மணல் மாபியா கும்பல் கொள்ளையடிக்க, தமிழக அரசின் பொதுப்பணித்துறை அனுமதி கொடுத்துவிட்டது  வெளிப்படையாகவே தெரிகிறது.

நீர் நிலைகளில் உள்ள  களிமண், வண்டல் மண், சவுடு, சரளை மண் உள்ளிட்ட கனிமங்களை விவசாயிகள் எடுத்து என்ன செய்வார்கள். விவசாய நிலத்தில் சரளை மண், சவுடு மண்ணை கொட்டி விவசாயம் செய்ய முடியுமா?

   மண்பாண்டம் செய்பவர்கள் தேவை களி மண் மட்டுமே, அதுவும் மாட்டு வண்டியில் போதும்..

   சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் விலை இல்லாமல் ஆளும்கட்சியான அதிமுக ஆதரவு கனிம மாபியா கும்பல் விவசாயிகள் பெயரில் வண்டல் மண், சவுடு மண், சரளை மண், களிமண் டிப்பர் லாரிகளில் கடத்தி விற்பனை செய்ய சித்ரா பெளர்ணமி நாளில் அனுமதி கொடுத்துவிட்டது அதிமுக அரசு..

 விவசாயிகள் பெயரில் விலை இல்லாமல் கனிமங்களை கொள்ளையால் தமிழக அரசுக்கு சுமார் கோடிக்கணக்கில்  இழப்பு ஏற்படும்..

 எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயுத்தமாவதால், சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுகவினர் செலவு செய்து, வாக்குகளை விலைக்கு வாங்க, விலை இல்லாமல் விவசாயிகள் பெயரில் நீர் நிலைகளில் உள்ள கனிமங்கள் மொட்டையடிக்கப்படுகிறது…

   துக்ளக் தர்பாரில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்?

Comments

comments

About mani bharathi

Check Also

தமிழக அரசின்… வருவாய்த்துறை & சுகாதாரத்துறை கொரோனா நிதி ஒதுக்கீடுகளில் தொடரும் மர்மம்… காவல்துறைக்கு ரூ6கோடி எதற்கு?…

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறையிலும் கொரோனா தொடர்பான நிதி ஒதுக்கீடு அரசாணைகளில் மர்மம் தொடருகிறது. பல …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *