Breaking News
Home / பிற செய்திகள் / சென்னை GRT நகைக் கடை திறக்க அனுமதி கொடுத்தது யார்.. முடங்கி போன சென்னை மாநகராட்சி நிர்வாகம்..

சென்னை GRT நகைக் கடை திறக்க அனுமதி கொடுத்தது யார்.. முடங்கி போன சென்னை மாநகராட்சி நிர்வாகம்..

சென்னை நகரம் முழுவதும் கொரோனா நோயால் சிக்கி தவிக்கிறது. ஜவுளிகடைகள், நகைக் கடைகள் திறக்க பெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் அனுமதி அளிக்கவில்லை. பிறகு எப்படி GRT நகைக் கடை மட்டும் திறக்கப்பட்டது?

 ஜவுளி கடைகளும், நகை கடைகளும் ஏசி இல்லாமல் கடைகளை திறந்து வியாபாரம் செய்ய விரும்புவதாக கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால் 6.5.2020 வரை அனுமதி அளிக்கவில்லை.  சென்னை தி.நகரில் உள்ள GRT நகைக் கடை காலையில் ஏசி இல்லை என்று சின்ன வெள்ளைத்தாளில் எழுதி ஒட்டி திறந்துவிட்டார்கள்..

  நாம் மோதிரம் வாங்கிய போது GST 1.5% & SGST 1.5% என்று பில்லில் உள்ளது. ரூ306.82 மோதிரத்துக்கு வசூல் செய்யப்பட்டுள்ளது. ஏசியில் செயல்படும் நகைக்கடைகளுக்குதான் GST 1.5% & SGST 1.5% வசூலிக்கப்படும். ஏசி இல்லாமல் செயல்பட்ட GRT நகைக் கடையில் GST 1.5% & SGST 1.5% எப்படி வசூல் செய்யப்பட்டது.

  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்க்கு புகார் சென்று, சர்ச்சையான பிறகு மதியம் GRT நகைக் கடை மூடப்பட்டதாம்..

 பெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், குளு குளு அறையைவிட்டு வெளியே வருவதில்லை.  வருவாய்த்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்யுடன் வெளியே வந்தாலும், செல்போனில் சீட்டு விளையாடிக்கொண்டு இருக்கிறார்..

               பெரு நகர சென்னை மாநகராட்சியின் நிர்வாகம் முடங்கி போய்விட்டதா?

Comments

comments

About mani bharathi

Check Also

தமிழக அரசின்… வருவாய்த்துறை & சுகாதாரத்துறை கொரோனா நிதி ஒதுக்கீடுகளில் தொடரும் மர்மம்… காவல்துறைக்கு ரூ6கோடி எதற்கு?…

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறையிலும் கொரோனா தொடர்பான நிதி ஒதுக்கீடு அரசாணைகளில் மர்மம் தொடருகிறது. பல …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *