Breaking News
Home / பிற செய்திகள் / தமிழகத்தில் துக்ளக் தர்பார்… அதிமுக அரசின்… Rapid Test kit ஊழல்… Shan Biotech&Diagnostics அப்ரூவல் இல்லையே?…

தமிழகத்தில் துக்ளக் தர்பார்… அதிமுக அரசின்… Rapid Test kit ஊழல்… Shan Biotech&Diagnostics அப்ரூவல் இல்லையே?…

அதிமுக அரசின் Rapid Test kit ஊழல் அம்பலமாகி உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சத்தீஸ்கர் மாநிலத்தில் ரேபிட் டெஸ்ட் கிட் ரூ337+GST விலையில் அதாவது ரூ377.44க்கு  தென் கொரியாவிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஆதாரங்களை வெளியிட்டார். 18.4.2020 மாலை 6.15மணிக்கு பத்திரிகையாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ரேபிட் டெஸ்ட் கிட் ரூ600+ GST12 சதவிகிதம் அதாவது ரூ672க்கு Shan Biotech&Diagnostics நிறுவனம் மூலம் 50,000 கிட்  கொள்முதல் செய்துள்ளதாக, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் இயக்குநர் உமாநாத் ஐ.ஏ.எஸ் மூலம் கொள்முதலுக்கான உத்தரவின் நகலை வெளியிட்டார்..

 இதில் என்ன ஊழல் கூத்து என்றால் மத்திய அரசின் ICMR நிறுவனம் Rapid/CLIA/ELISA kits approved for testing of COVID 19 with condition என்ற அப்ரூவல் பட்டியலை 4.4.2020 &16.4.2020 வெளியிட்டுள்ளது.

 அந்த அப்ரூவல் பட்டியலில்  அதிமுக அரசு  ரேபிட் டெஸ் கிட் கொள்முதல்  Shan Biotech&Diagnostics நிறுவனம் இல்லை. ஊழல் நடந்ததுக்கு இதைவிட ஆதாரம் என்ன வேண்டும்..

 அமைச்சர் விஜயபாஸ்கர் & உமாநாத் ஐ.ஏ.எஸ் இருவரும் பதில் சொல்லுவார்களா?

  1.  CPC diag pvt ltd Chennai- CLIA – Shenzhen YHLO Biotech co ltd China- CE approved
  2. Matrix Chennai – Antibody repid  test IgG/IgM – Hangzhou Clongene Boitech co. ltd China –CE approved.
  3. Trivitron Healthcare pvt ltd Chennai – Anti body tes IgG/IgM CE approved – Autobio Diag co ltd & Beijing Lepu medical technology co ltd china & Innovita(Tang shen)biological technology co ltd china.
  4. Athenese Dx pvt ltd Chennai- Rapid Antibody test IgG/IgM CE approved-Beijing Genese Biotech inc china
  5. Cosmic Scientific Chennai –Antibody Test IgG/IgM – CE approved – Getein Biotech inc china

இந்த ஐந்து நிறுவனங்கள் மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்டை சீனாவிலிருந்து கொள்முதல் செய்ய, மத்திய அரசின் அனுமதிபெற்றுள்ளது.

 தமிழக அரசின் சுகாதாரத்துறை ரேபிட் கிட் கொள்முதல் செய்த Shan Biotech&Diagnostics நிறுவனம் மத்திய அரசின் அப்ரூவல் பட்டியலில் இல்லை.

 சத்தீஸ்கர் மாநிலத்துடன்,  தமிழக அரசு கொள்முதல் செய்த விலையை ஒப்பிடும் போது ரேபிட் டெஸ்ட் கிட் விலை ரூ672-ரூ377.44=ரூ294.56 அதிகம். 50,000 கிட்டுக்கு கூடுதல் விலை ரூ1.47கோடி…

  அதிமுக அரசின் ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் ரூ1.47கோடி முறைகேடு நடந்துள்ளது. அதைவிட வேடிக்கை தமிழக அரசு கொள்முதல் செய்த Shan Biotech&Diagnostics நிறுவனத்தை மத்திய அரசு அப்ரூவல் செய்யவே இல்லை.

  ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் நடந்த ஊழல் தொடர்பாக மக்கள்செய்திமையம் ஆதாரங்களுடன் மத்திய அரசுக்கு புகார் அனுப்பி உள்ளது..

Comments

comments

About mani bharathi

Check Also

தூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் ராஜ் அத்துமீறல்.. சட்டத்துக்கு புறம்பான கட்டிடத்தை- திறந்து வைத்த அமைச்சர்…

தூத்துக்குடி  மாவட்டத்தில் ஆளும் அதிமுகவின் பின்னணியில்   சட்டத்துக்கு புறம்பான பல நிகழ்வுகள் தினமும் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தன்ராஜ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *