Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா – சமூக பரவல்.. தலைமைச் செயலாளரை மதிக்காத ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்.. சித்த மருத்துவ ஆலோசனையில் வேடிக்கை..

கொரோனா – சமூக பரவல்.. தலைமைச் செயலாளரை மதிக்காத ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்.. சித்த மருத்துவ ஆலோசனையில் வேடிக்கை..

கொரோனா வைரஸ் நோய் சமூக பரவலாக தொடங்கியதால், கட்டுப்படுத்த, தலைமைச் செயலாளர் சண்முகம், 17.4.2020 அன்று மதியம் சித்தா டாக்டர்கள் அழைத்து ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் திருமதி பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ், உமாநாத் ஐ.ஏ.எஸ், டாக்டர் செந்தில்ராஜ் ஐ.ஏ.எஸ் கலந்து கொண்டார்கள்.

  தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ், கேரளாவில், சித்தா மருத்துவம்தான் கொரோனாவை கட்டுக்குள் வைத்துள்ளது, அதே போல் சித்தா மருத்துவத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

 சித்தா டாக்டர்கள் குழு கபுசுரக்குடிநீரை இன்னும் தமிழக அரசின் சுகாதாரத்துறை அப்ருவல் செய்யவில்லை என்றவுடன், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளரை பார்த்தார், பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டு இருந்தார். உமாநாத் ஐ.ஏ.எஸ்யும், செந்தில்ராஜ் ஐ.ஏ.எஸ் இருவரும் செல்போனில் கவனம் செலுத்திக்கொண்டு இருந்தார்கள்.. அதிர்ச்சியான தலைமைச் செயலாளர், சித்தா டாக்டர்களிடம் சுகாதாரத்துறை செயலாளரை பார்த்தபடி, இவர்கள் இப்படிதான்.. நீங்கள் பேசுங்கள் என்று சித்தா டாக்டர்களின் ஆலோசனையை கேட்டார்.

   சித்தா டாக்டர்கள் கொரோனா வைரஸ் நோயை முழுமையாக கட்டுப்படுத்த முடியும், ஆய்வு செய்ததை எடுத்து கூறினார். சித்தா மருந்து, மாத்திரைகளை  கொடுத்தால் உடனடியாக கொரோனா நோய் கட்டுப்படுத்தலாம், சமூக பரவலாக மாறுவதை தடுக்கலாம் என்று விரிவாக எடுத்து கூறினார்கள்.

 சித்தா டாக்டர்கள் குழு, தலைமைச் செயலாளரிடம் விரிவாக எடுத்து சொல்லியும், பல ஆவணங்களை கொடுத்தார்கள்.  சித்தா டாக்டர்கள் குழுவிடம் தலைமைச் செயலாளர், துணை வேந்தர்  டாக்டர் சுதாசேஷய்யன் உங்களுடன் ஒத்துழைப்பார்.  இனி துணை வேந்தருடன் ஆலோசனை செய்யுங்கள். புதன் கிழமை 22.4.2020 முதல்வருடன் ஆய்வுக் கூட்டம் உள்ளது. அப்போது விரிவான அறிக்கை கொடுக்கவும். நான் உடனே அப்ருவல் பெற்று தருகிறேன் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் கூறினார்.

 சித்தா டாக்டர் ஆலோசனை கூட்டத்தில், பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ், உமாநாத் ஐ.ஏ.எஸ், டாக்டர் செந்தில்ராஜ் ஐ.ஏ.எஸ் தலைமைச் செயலாளர் என்ன பேசுகிறார், சித்தா டாக்டர் என்ன சொல்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்தாமல், செல்போனில் ஏதோ விளையாடிக்கொண்டு இருந்தார்கள்.

 சித்தா டாக்டர்கள் ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு, தலைமைச் செயலாளரிடம் எதைப்பற்றி பேசாமல் மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வெளியேறினார்கள்..

திருமதி  பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ் டாக்டருக்கு படித்தவர், செந்தில்ராஜ் ஐ.ஏ.எஸ் டாக்டருக்கு படித்தவர் இருவரும் தலைமைச் செயலாளர் சண்முகம் நடத்திய சித்தா டாக்டர்கள் ஆலோசனை கூட்டத்தில் கவனம் செலுத்தவில்லை ஏன்? என்று சித்தா டாக்டர் குழுவினர் புலம்பியபடி தலைமைச் செயலகத்திலிருந்து வெளியே வந்தார்கள்..

 தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ் மதிக்காத மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வைத்துக்கொண்டு, கொரோனா சமூக பரவலை எப்படி தமிழ்நாட்டில் கட்டுப்படுத்த போகிறோமோ  என்ற பயம் கலந்த கேள்வி எழுந்துள்ளது..

Comments

comments

About mani bharathi

Check Also

தூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் ராஜ் அத்துமீறல்.. சட்டத்துக்கு புறம்பான கட்டிடத்தை- திறந்து வைத்த அமைச்சர்…

தூத்துக்குடி  மாவட்டத்தில் ஆளும் அதிமுகவின் பின்னணியில்   சட்டத்துக்கு புறம்பான பல நிகழ்வுகள் தினமும் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தன்ராஜ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *