
கொரோனா நோய் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு, 144 தடையுத்தரவு அமுல் செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு பணிக்கு தேவையான டோர் ஸ்டிக்கர், விழிப்புணர்வு விளம்பரங்கள் பெயரில் போலி பில் போடும் பணி உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் குடிசை மாற்றும் வாரியத்திலும் தொடங்கிவிட்டது.
TAMILNADU MULTIPURPOSE INDCO SERVE திருச்சிராப்பள்ளி இந்த சொசைட்டியின் செயலாளர் மற்றும் உதவி இயக்குநர் வெங்கடேஷ் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், நகராட்சிகள், மாநகராட்சிகள், பேரூராட்சிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 11.4.2020ல் கடிதம் அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில்


- கொரோனா டோர் ஸ்டிக்கர் – 100-ரூ900+18சதவிகிதம் ஜி.எஸ்.டி
- கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ் 1000 –ரூ2500 + 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி
- கொரோனா விழிப்புணர்வு கேள்வி- பதில் -1000- ரூ2950+5 சதவிகிதம் ஜி.எஸ்.டி
- முகக்கவசம் 3 லேயர் ஜி.எஸ்.டியுடன் விலை ரூ10.08
- பி.பி.இ கிட் ஜி.எஸ்.டியுடன் விலை ரூ1627.50
இப்படி 25 இனங்களின் பட்டியல் உள்ளது. இந்த பட்டியலில் உள்ள விலை 1.4.2020 முதல் 31.3.2021 வரைதானாம்..
மேலும் உள்ளாட்சி அமைப்புகளின் உயர் அதிகாரிகளிடம் செல்போனில் பொருட்கள் சப்ளை செய்தால் 25 சதவிகிதம் கமிசன் கொடுத்துவிடுவதாகவும், போலி பில் என்றால் 50:50 என்று பேரம் பேசியுள்ளதாக தெரிகிறது.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அதிகாரபூர்வமாகவே போலி பில் கலாச்சாரத்தை தொடங்கிவிட்டது. வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மைத்துறை 4.4.2020ல் போடப்பட்ட அரசாணையில்(எண்.179) குடிசை மாற்று வாரிய வீடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த நிதி பெற்றுவிட்டது.

- பேனர் 600 – விலை ரூ1500 என ரூ9இலட்சம்
- வால் ஸ்டிக்கர் 1800 – ரூ10 என ரூ18,000/-
- விழிப்புணர்வு நோட்டீஸ் -2 இலட்சம் – விலை ரூ5 என ரூ10இலட்சம்
- எதிர்பாராத விளம்பரம் செலவு – ரூ9.89இலட்சம்
என ரூ30 இலட்சம் போலி பில் மேளாவுக்கு அனுமதி பெற்றுவிட்டது. தமிழ்நாட்டில் எந்த குடிசை மாற்று வாரிய வீடுகள் இருக்கும் பகுதிகளில் விழிப்புணர்வு பிட் நோட்டீஸ் ஒட்டியதாக கோப்புகளில் மட்டும் இருக்கும்..ரூ30 இலட்சம் ஸ்வாஹா…
அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் கொரோனா விழிப்புணர்வு பெயரில் போலி பில் போடும் பணிகள் சத்தமில்லாமல் நடந்து வருகிறது.
அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் கொரோனா விழிப்புணர்வு பெயரில் போலி பில் மேளா ரூ100கோடியாம்…
தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ் அய்யா கொரோனா விழிப்புணர்வு பெயரில் உள்ளாட்சி அமைப்புகளில் போலி பில் போடாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது மக்கள்செய்திமையத்தின் வேண்டுகோள்..
வாக்களித்த அப்பாவி மக்கள்தான் வயிற்றில் ஈரத்துணியை போட்டுக்கொண்டு ஊரடங்கு உத்தரவின் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்..