Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா… தமிழகத்தில் துக்ளக் தர்பார்… முகக் கவசம் முறைகேடு…

கொரோனா… தமிழகத்தில் துக்ளக் தர்பார்… முகக் கவசம் முறைகேடு…

கொரோனாவை  கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, 144 தடையுத்தரவு அமுல் செய்யப்பட்ட நிலையில், பொது மக்கள் கண்டிப்பாக அணிய வேண்டிய முகக் கவசத்தில் மெகா முறைகேடு, நிர்வாக குளறுபடிகள் நடந்து வருகிறது.

 சில நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறை செயலாளர் திருமதி பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ், பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் 3 அடுக்கு முகக்கவசம் 65இலட்சம், என்.95-3இலட்சம், பி.பி.இ -2 இலட்சம் நம்மிடம் ஸ்டாக் இருப்பதாக கூறினார்.

 ஆனால் முகக் கவசம் பெயரில் நடக்கும் கூத்தை பாருங்கள்..

  1. தமிழ்நாடு நுகர்பொருள்வாணிபக் கழகத்தில் டிஸ்போசல் முகக் கவசம் ரூ10 விலையில் 10.65 இலட்சம் கொள்முதல் செய்ததாக ரூ1.06கோடிக்கு  போலி பில் போடப்பட்டுள்ளது.
  2. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் ரூ30 விலையுள்ள முகக் கவசம் 20,130 கொள்முதல் செய்ததாக ரூ6.03இலட்சத்துக்கு  போலி பில் போடப்பட்டுள்ளது.
  3. பெரு நகர சென்னை மாநகராட்சியில் துப்பரவு பணியாளர்களுக்கு டிஸ்போசல் முகக் கவசம் கொடுக்கவில்லை. ஒரு நாள் மட்டுமே கொடுத்துவிட்டு, நீங்களே வாங்கி கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறிவிட்டதாக துப்பரவு பணியாளர் பாலகிருஷ்ணன் புதிய தலைமுறை டிவியில் பேட்டி அளித்தார்.இதற்கு பிரகாஷ் ஐ.ஏ.எஸ் பதில் சொல்லுவாரா?
  4.  பல நகராட்சிகளில் முகக் கவசம் கொடுக்கவில்லை என்று துப்பரவு தொழிலாளர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
  5. மக்கள் நீதிமையம் 13.4.2020 அன்று சென்னை மாநகராட்சியில் 15,000 முகக் கவசம் கொடுத்துள்ளது. அந்த முகக் கவசம் எங்கே போயிற்று.. துப்பரவு பணியாளர்களுக்கு ஏன் கொடுக்கவில்லை.
  6. Chennai corporation Staff co-operative store medicals/ சென்னை மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு பண்டக சாலை மெடிக்கல் போரூர் இதில் ரூ10 விலையுள்ள டிஸ்போசல் முகக் கவசம் ரூ25 விற்கப்படுகிறது..இதிலும் கொள்ளை அடிக்க வேண்டுமா?
  7. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு என்.95 முகக் கவசம் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பல டாக்டர்கள் நம்மிடம் கூறினார். ஆனால் சுகாதாரத்துறை செயலாளர் திருமதி பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ் என்.95 முகக் கவசம் 3 இலட்சம் ஸ்டாக் இருப்பதாக சொன்னது பொய் என்பது உறுதியாக தெரிகிறது.

முகக் கவசம் அணியாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால், ரூ100 அபராதம் என்கிறார் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்..

வருமானத்துக்கு வழி இல்லாமல் தடுமாறும் ஊழியர்கள் கத்திரிக்காய் வாங்க, பால் வாங்க கடைக்கு வரும் போது முகக் கவசம் எப்படி போடுவார்கள்..முகக் கவசம் அரசே இலவசமாக கொடுக்கலாமே?

 மனசாட்சி இல்லாமல் முகக் கவசத்திலும் முறைகேடுகள் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது யார்?

Comments

comments

About mani bharathi

Check Also

தூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் ராஜ் அத்துமீறல்.. சட்டத்துக்கு புறம்பான கட்டிடத்தை- திறந்து வைத்த அமைச்சர்…

தூத்துக்குடி  மாவட்டத்தில் ஆளும் அதிமுகவின் பின்னணியில்   சட்டத்துக்கு புறம்பான பல நிகழ்வுகள் தினமும் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தன்ராஜ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *