Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா… தமிழகத்தில் துக்ளக் தர்பார்… துவரம்பருப்பு ஊழல்… அரை கிலோவுக்கு ரூ13.25 –ரூ17.75 விலை அதிகம்..

கொரோனா… தமிழகத்தில் துக்ளக் தர்பார்… துவரம்பருப்பு ஊழல்… அரை கிலோவுக்கு ரூ13.25 –ரூ17.75 விலை அதிகம்..

 கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு, 144 தடையுத்தரவு அமுல் செய்யப்பட்டுள்ள நிலையில் அரசு துறைகளில் இலஞ்ச பண பரிமாற்றங்கள் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. துவரம்பருப்பு கொள்முதலில் மெகா ஊழல் நடந்துள்ளது.

  1. தமிழகம்  முழுவதும் பேருந்துகள் இயங்கவில்லை.வருவாய் இல்லை. பணிக்கு வராதே என அரசுதான் சொன்னது என்பதால் அனைவருக்கும் சம்பளம் தர வேண்டும். அதற்கான நிதி நெருக்கடி. ஆனாலும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், சேலம், மதுரை போக்குவரத்துக் கழகங்களில் உதவி மேலாளர்களுக்கு துணை மேலாளர் என பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.போக்குவரத்துக் கழகங்களில் சாதாரண தொழிலாளி க்கு பதவி உயர்வோ, போன மாதம், இந்தமாதம் பணி நிரந்தரத்திற்கு due ஆன நபர்களுக்கு பணி நிரந்தர உத்திரவு வழங்கப்படவில்லை. ஆனால் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளனர். போக்குவரத்துக் கழகத்தின் எம்.டிகளுக்கு இலஞ்ச பண பரிமாற்றங்கள் நடந்துள்ளது.
  2. நியாயவிலைக் கடைகளில் மளிகைப் பொருட்களின் தொகுப்பு பைகளில்  உள்ள துவரம்பருப்பு அரை கிலோ ரூ57.50 (வெளிச் சந்தை விலைரூ65) என்று கூட்டுறவுத்துறை அறிக்கையில்(ந.க.எண்.61165/2019/நு.கூ.3 நாள் 10.4.2020) கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நியாயவிலைக் கடைகளில் மலிவு விலையில் துவரம்பருப்பு கொடுக்க, 9.11.2018ல் 20,000 டன் கொள்முதல் செய்யப்பட்ட போது விலை ஒரு டன் விலை  ரூ76,250/- அதாவது ஒரு கிலோ ரூ76.250/-

  25.7.2019ல் கனடியன் துவரம்பருப்பு 20,000டன் கொள்முதல் செய்யப்பட்ட போது ஒரு டன் விலை ரூ88,500/- அதாவது ஒரு கிலோ விலை ரூ88.50/-அரை கிலோ ரூ44.25/-

 தற்போது துவரம்பருப்பு கொள்முதல் செய்ய வாய்ப்பு இல்லை. 27.7.2019 விலையை கணக்கீட்டால் அரை கிலோ துவரம்பருப்பு விலை ரூ44.25மட்டுமே.. பிறகு எப்படி கொரோனா மளிகைப் பொருட்களின் தொகுப்பு பையில் உள்ள துவரம்பருப்பு விலை ரூ57.50 என்றால் எப்படி..அரை கிலோவுக்கு ரூ13.25 விலை அதிகமாக உள்ளதே?

                ஊரடங்கு உத்தரவு நேரத்தில் இப்படி மக்களை ஏமாற்றலாமா?

   இதைவிட வேடிக்கை என்னவென்றால் தாம்பரம் பெரு நகராட்சியிலிருந்து  அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் பட்டியலில் அரை கிலோ துவரம்பருப்பு விலை ரூ62/-

  கூட்டுறவுத்துறை மூலம் நியாயவிலைக் கடைகளில் துவரம்பருப்பு அரை கிலோ ரூ57.50, தாம்பரம் பெரு நகராட்சியில் அரை கிலோ ரூ62/- உண்மையில் நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்யப்பட்ட  விலை அரை கிலோ ரூ44.25மட்டுமே…

 அரை கிலோ துவரம் பருப்பு முறைகேடு ரூ13.25 முதல் ரூ17.75வரை…

 இப்படி கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்பட்டுள்ள நேரத்தில் துவரம்பருப்பில் இவ்வளவு முறைகேடா? வாக்களித்த மக்களை இந்த நேரத்திலுமா ஏமாற்ற வேண்டும்..

Comments

comments

About mani bharathi

Check Also

தூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் ராஜ் அத்துமீறல்.. சட்டத்துக்கு புறம்பான கட்டிடத்தை- திறந்து வைத்த அமைச்சர்…

தூத்துக்குடி  மாவட்டத்தில் ஆளும் அதிமுகவின் பின்னணியில்   சட்டத்துக்கு புறம்பான பல நிகழ்வுகள் தினமும் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தன்ராஜ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *