Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா… தமிழகத்தில் துக்ளக் தர்பார்… மாஸ்க் தேவையில்லை – பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ்….

கொரோனா… தமிழகத்தில் துக்ளக் தர்பார்… மாஸ்க் தேவையில்லை – பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ்….

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு 30.4.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 11.4.2020 பிரதமரின் பி.ஆர்.ஒ பாணியில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ், ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பை 8மணிக்கு பிரதமர் அறிவிப்பார் என்றார். சில நிமிடங்களில் பிரதமர் அறிவிப்பு உறுதி செய்யப்படவில்லை. தமிழக அரசின் அமைச்சரவை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க, வீடியோகான்பரன்சி ஆலோசனையின் போது, முதல்வர் பிரதமரிடம் கூறியுள்ளார். பிரதமர் தான் நீட்டிப்பை அறிவிப்பார் என்று கூறினார்.

 ஆனால் 14.4.20202 பிரதமர் 10மணிக்கு மக்களிடம் உரையாற்றுவார் என்று அறிவிப்பு வெளியான நிலையில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை 30.4.2020 நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டு, அரசாணையும்(எண்.190/13.4.2020) வெளியானது.

  1. 13.4.2020 மாலை 6.15க்கு பத்திரிகையாளர் சந்திப்பில், சுகாதாரத்துறை செயலாளர் திருமதி பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ் முகக்கவசம் அணியாமல் பேட்டி அளித்தார். முகக்கவசம் அணியவில்லை என்று நிருபர் கேட்க, சமூக இடைவெளி இருந்தால் போதும், முகக் கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என்று பதில் அளித்தார்.

ஆனால் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், பொது மக்கள் வெளியே செல்லும் போது  கட்டாயம் முகக் கவசம்  அணிய வேண்டும் என்று தொற்றுநோய் தடுப்பு மற்றும் சுகாதார சட்டங்களின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று டூவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

 தொற்றுநோய் தடுப்பு மற்றும் சுகாதார சட்டத்தில் முகக்கவசம் அணியாமல் இருக்க சுகாதாரத்துறை செயலாளர் திருமதி பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ்க்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா?

  • முகக் கவசம் அணிய வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் பதில் அளிக்கையில் முகக்கவசம்  3லேயர் -65 இலட்சம், என்.95-3இலட்சம், பி.பி.இ -2 இலட்சம் என ஸ்டாக் இருப்பதாக கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.
  • பி.சி.ஆர் டெஸ்ட் கிட் போது, ரேபிட் டெஸ்ட் கிட் தேவையில்லை என்று பதில் அளிக்கும் சுகாதாரத்துறை செயலாளர் திருமதி பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ், பிறகு எதற்காக நான்கு இலட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் ஆர்டர் செய்ய வேண்டும்?
  • கொரோனா இந்தியாவுக்கு வராத நிலையில் WHO அறிவிப்பை தொடர்ந்து ஜனவரி மாதம் ரூ146கோடிக்கு கொரோனா DRUGS கொள்முதல் செய்த விவரங்கள் வெளியிடப்படுமா?
  • அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முதலில் அறிவிக்கப்பட்ட ரூ1000/-ம் இன்னும் கிடைக்கவில்லை. அடுத்த ரூ1000/-க்குஅறிவிப்பு வெளியாகி உள்ளது வேதனையாக இருக்கிறது.

மிழகம் முழுவதும்  பேருந்துகள் இயங்கவில்லை. ஆனால் அரசு போக்குவரத்துக்கழகத்தில்  உதவி மேலாளர்களுக்கு துணை மேலாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள கூத்தை நாளை பார்க்கலாம்…

  தமிழக மக்களுக்கு மக்கள்செய்திமையத்தின் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

Comments

comments

About mani bharathi

Check Also

தூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் ராஜ் அத்துமீறல்.. சட்டத்துக்கு புறம்பான கட்டிடத்தை- திறந்து வைத்த அமைச்சர்…

தூத்துக்குடி  மாவட்டத்தில் ஆளும் அதிமுகவின் பின்னணியில்   சட்டத்துக்கு புறம்பான பல நிகழ்வுகள் தினமும் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தன்ராஜ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *