Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா-ரேபிட் கிட் கொள்முதல்- தமிழக மக்களை ஏமாற்றும் தமிழக அரசு- சண்முகம் ஐ.ஏ.எஸ் பதில் சொல்லுவாரா?

கொரோனா-ரேபிட் கிட் கொள்முதல்- தமிழக மக்களை ஏமாற்றும் தமிழக அரசு- சண்முகம் ஐ.ஏ.எஸ் பதில் சொல்லுவாரா?

கொரோனா தொற்று நோய் ஆய்வு செய்யும் ரேபிட் கிட்  மற்றும் பி.சி.ஆர் கிட் தொடர்பாக மாண்புமிகு முதல்வர் சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் ஏப்ரல் 9ம் தேதி ரேபிட் கிட் வந்துவிடும் 10ம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு டெஸ்ட் தொடங்கிவிடும் என்று கூறினார்.ஆனால் இன்று வரை கிட்ஸ் வரவில்லை.

 11.4.2020 தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ், சீனாவிலிருந்து வந்த தமிழகம் வந்த ரேபிட் கிட்ஸ் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டது. கேரளாவுக்கு முன் தமிழகம் கிட் ஸ்க்கு ஆர்டர் கொடுத்துவிட்டது என்று பரபரப்பாக பேட்டி அளித்தார்.

 தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்க்கு சில கேள்விகள்…பதில் அளிப்பாரா?

  1. 11.4.2020 பாரத பிரதமர் மோடி, வீடியோகான்பிரன்சியில் தமிழக முதல்வருடன் ஆலோசனை செய்த போது, தமிழக முதல்வர் PCR and rapid test kits should be supplied by government of india large quantities immediately என்று கூறியுள்ளார். பிரதமரிடம் தமிழக அரசு சீனாவில் கிட்ஸ் கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுத்துவிட்டதாக கூறவே இல்லையே?
  2.  INDIAN COUNCIL OF MEDICAL RESEARCH(ICMR) 25.3.2020 & 27.3.2020ல் ANTIBODY KIT fordiagnosis of COVID -19 Dibrugarh, மும்பாய், சென்னை, ஹைதராபாத், போபால், டில்லி ஆகிய இடங்களுக்கு கொள்முதல் செய்ய  டெண்டர் கோரியது. ஐந்து நாட்களில் சப்ளை செய்ய வேண்டும் என்று டெண்டரில் கூறியது. ஆனால் டெண்டரில் கலந்து கொள்ள நிறுவனங்கள் முன் வரவில்லை.
  3. INDIAN COUNCIL OF MEDICAL RESEARCH(ICMR) மீண்டும் 11.4.2020ல் PCR combo kit 25 lakhs, Antobody IgG/igM COVID 19 Rapid Test kit  45 lakhs, RNA estraction kit 30 lakhs &VTM 52.25 lakhs கொள்முதல் செய்ய  டெண்டர் கோரியுள்ளது. டெண்டர் இறுதி தேதி 14.4.2020.

மத்திய அரசு இதுவரை ரேபிட் கிட்ஸ்  உள்ளிட்ட நான்கு வகையான கிட்ஸ்கள் கொள்முதல் செய்யவே இல்லை. பிறகு எப்படி தலைமைச் செயலாளர் பேட்டியில் கூறியது போல் கிட்ஸ் அமெரிக்காவுக்கு போகும் என்று தெரியவில்லை.

  • தமிழக அரசின் சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம், ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் உள்ளிட்ட கொரோனாவுக்கான மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ய உத்தரவிட்டதை தேதி வாரியாக அறிக்கை வெளியிட தயாரா?
  • பிரபலமான சீமென்ஸ் நிறுவனத்திடம் ஒரு இலட்சம் கிட்க்கு டி.என்.எம்.எஸ்.சி ஆர்டர் கொடுத்து, பணமும் ஐ.ஒ.பி வங்கி கணக்கிலிருந்து ஆன் லைனில்11.4.2020 அன்று அனுப்பிவிட்டது. ஆனால் கிட் இன்னும் வரவில்லை என்பது உண்மையா?

அதிமுக அமைச்சரவையில் முன்னணியில் இருப்பவரும், அதிமுக கட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கும் அமைச்சரின் குடும்பத்தை சேர்ந்தவர் சீனாவில் GUANGZHOU WONDFO BIOTECH CO., LTD நிறுவனத்தில் ஐந்து இலட்சம் கிட்ஸ் ஆர்டர் கொடுத்துள்ளார்கள். இந்த கிட்ஸ் 16.4.2020ம் தேதி கத்தார் ஏர் விமானம் மூலம் தமிழ்நாட்டுக்கு வருகிறது.

  இந்த கிட்ஸ்க்கு தமிழக அரசுக்கு தொடர்பு உண்டா என்று தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்தான் பதில் சொல்ல வேண்டும்.

கொரோனாவால் குழப்பத்தில் இருக்கும் தமிழக மக்களிடம்,  தமிழக அரசு உண்மையான தகவலை கூறி, தமிழக மக்களை கொரோனாவிலிருந்து காப்பாற்ற விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்கள் செய்திமையத்தின் விருப்பம்..

Comments

comments

About mani bharathi

Check Also

தூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் ராஜ் அத்துமீறல்.. சட்டத்துக்கு புறம்பான கட்டிடத்தை- திறந்து வைத்த அமைச்சர்…

தூத்துக்குடி  மாவட்டத்தில் ஆளும் அதிமுகவின் பின்னணியில்   சட்டத்துக்கு புறம்பான பல நிகழ்வுகள் தினமும் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தன்ராஜ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *