Breaking News
Home / பிற செய்திகள் / அம்பத்தூர்… வெளி மாநில தொழிலாளர்கள் ஒரு வேளை உணவுக்காக- குழந்தைகளும் சாலைகளின் ஒரத்தில்…

அம்பத்தூர்… வெளி மாநில தொழிலாளர்கள் ஒரு வேளை உணவுக்காக- குழந்தைகளும் சாலைகளின் ஒரத்தில்…

கொரோனா ஊரடங்கு உத்தரவால் அம்பத்தூரில் உள்ள  வெளி மாநில தொழிலாளர்கள் ஒரு வேளை உணவுக்காக மணி கணக்கில் உச்சி வெயிலில் பெரு நகர சென்னை மாநகராட்சி நிர்வாகம்  உட்காரவைத்துள்ளார்கள் என்ற செய்தி வெளியிட்டோம்.

 ஆனாலும் வெளி மாநில தொழிலாளர்களின் அவல நிலையை தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது.  உச்சி வெளியில் நடு ரோட்டில் உட்கார வைக்காமல்  அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையத்தில் 1மணி நேரத்துக்கு மேலாக உட்காரவைத்து, ஒரு வேளைக்கான உணவு பொட்டலத்தை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் கொடுத்தார்கள்.

 வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகளை மூடிய கடைகளுக்கு வெளியே உட்காரவைத்து 45 நிமிடங்கள் கழித்து, உணவு பொட்டலங்கள் கொடுக்கப்பட்டது. குழந்தைகளின் நிலையை புகைப்படத்தில் பாருங்கள்.

 சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு மனிதாபிமானம் இல்லையா? சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடங்கி போய்விட்டதா?

Comments

comments

About mani bharathi

Check Also

தமிழக அரசின்… வருவாய்த்துறை & சுகாதாரத்துறை கொரோனா நிதி ஒதுக்கீடுகளில் தொடரும் மர்மம்… காவல்துறைக்கு ரூ6கோடி எதற்கு?…

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறையிலும் கொரோனா தொடர்பான நிதி ஒதுக்கீடு அரசாணைகளில் மர்மம் தொடருகிறது. பல …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *