Breaking News
Home / பிற செய்திகள் / அம்பத்தூர்… உச்சி வெயிலில் வெளி மாநில தொழிலாளர்கள்- மனிதாபிமானமே இல்லையா?…

அம்பத்தூர்… உச்சி வெயிலில் வெளி மாநில தொழிலாளர்கள்- மனிதாபிமானமே இல்லையா?…

கொரோனா ஊரடங்கு உத்தரவால், தமிழகத்தில் இருக்கும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், வெளி மாநில தொழிலாளர்களை பாதுகாப்பாக தங்க வைத்து, உணவு வழங்குவது கூறியுள்ளார். ஆனால் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் சொல்வது உண்மை இல்லை என்பதற்கான ஆதாரமாக உள்ள  இந்த போட்டோவை பாருங்கள்…

 ஆனால் சென்னை அம்பத்தூரில் வெளி மாநில தொழிலாளர்களுக்கு சென்னை மாநகராட்சியில் சார்பில் உணவு வழங்க உச்சி வெயிலில் சாலையில் வெளி மாநில தொழிலாளர்கள்  அமர வைக்கப்பட்டுள்ளார்கள்.

 சுமார் இரண்டு மணி நேரம் உச்சி வெயிலில் வெளி மாநில தொழிலாளர்கள் உட்கார்ந்தால், ஒரு வேளை உணவு கிடைக்குமாம்..

 உச்சி வெயிலில் ஒரு வேளை உணவுக்காக உட்கார்ந்திருக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் ஒருவரிடம் கூட முக கவசம் இல்லை. தங்களிடம் உள்ள துணிகளை முககவசமாக, கட்டியுள்ளார்கள்.

 தமிழ்நாட்டில் சென்னை அம்பத்தூரில்  வெளி மாநில தொழிலாளர்களை இவ்வளவு மோசமாக, மனநேயம், மனிதாபிமானம்  இல்லாமல் நடத்தும் போது, வெளி மாநிலத்தில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதி கிடைக்கவில்லை, உணவு கிடைக்கவில்லை என்று  எப்படி நியாயம் பேச முடியும்..எப்படி குரல் கொடுக்க முடியும்..

 சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் அய்யா முதலில் அம்பத்தூரில் வெளி மாநில தொழிலாளர்களை உச்சி வெயில் நடுரோட்டில் உட்கார வைத்து உணவு கொடுப்பதை தடுத்து நிறுத்துங்கள். வெளி மாநில தொழிலாளர்கள் தங்கியிருக்கும் இடத்தில் உணவு கிடைக்க வழி வகை செய்யுங்கள்..

Comments

comments

About mani bharathi

Check Also

தமிழக அரசின்… வருவாய்த்துறை & சுகாதாரத்துறை கொரோனா நிதி ஒதுக்கீடுகளில் தொடரும் மர்மம்… காவல்துறைக்கு ரூ6கோடி எதற்கு?…

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறையிலும் கொரோனா தொடர்பான நிதி ஒதுக்கீடு அரசாணைகளில் மர்மம் தொடருகிறது. பல …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *