Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா .. தமிழகத்தில் சமூக விலகல் இதுதானா…

கொரோனா .. தமிழகத்தில் சமூக விலகல் இதுதானா…

கொரோனா வைரஸ் நோய் சமூக வைரலாக பரவாமல் இருக்க, மக்கள் அத்தியவாசிய பொருட்கள் வாங்கு செல்லும் போது கடைகளில் ஒருவருக்கு ஒருவர்  குறைந்த பட்சம் 3அடி தூரத்தில் நிற்க வேண்டும் அதாவது சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று ஊரடங்கு உத்தரவு, 144 தடையுத்தரவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 சென்னை உயர்நீதிமன்றமும் சமூக விலகலை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

 ரூ1000/- மற்றும் விலை இல்லா பொருட்கள் ரேசன் கடைகளில் வாங்க மக்கள் சமூக விலகலை கடைபிடிப்பது இல்லை. இதை அதிகாரிகளும் கண்டு கொள்வதும் இல்லை.

 பொது மக்கள் சமூக விலகலை கடைபிடிக்கவில்லை என்றால் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூம் சமூக விலகலை கடைபிடிக்கவில்லை.

 அமைச்சர் கடம்பூர் ராஜூ பத்திரிகையாளர் சந்திப்பின் படத்தை பாருங்கள்.. சமூக விலகலின் இலட்சணம் தெரியும்..

 இப்படி அமைச்சர்கள், அதிகாரிகள் சமூக விலகலை கடைபிடிக்காத போது, பொது மக்கள் எப்படி சமூக விலகலை கடைபிடிப்பார்கள்..

Comments

comments

About mani bharathi

Check Also

தமிழக அரசின்… வருவாய்த்துறை & சுகாதாரத்துறை கொரோனா நிதி ஒதுக்கீடுகளில் தொடரும் மர்மம்… காவல்துறைக்கு ரூ6கோடி எதற்கு?…

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறையிலும் கொரோனா தொடர்பான நிதி ஒதுக்கீடு அரசாணைகளில் மர்மம் தொடருகிறது. பல …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *