Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா.. ஹைட்ராக்சிக் குளோரோ குவினேன்- அசித்ரோமைசின் வைட்டமின் –சி- அரசு மருத்துவமனைகளில் இருக்கிறதா?…

கொரோனா.. ஹைட்ராக்சிக் குளோரோ குவினேன்- அசித்ரோமைசின் வைட்டமின் –சி- அரசு மருத்துவமனைகளில் இருக்கிறதா?…

மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா நோய் தடுப்புக்கான வைரஸ் எதிர்ப்பு மற்றும் மலேரியா எதிர்ப்பு மருந்துகள் ஹைட்ராக்சிக் குளோரோ குவினேன், அசித்ரோமைசின் வைட்டமின் –சி(மாத்திரை& திரவ வடிவில்) மாத்திரைகளை உற்பத்தி செய்ய சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

 ஆனால்  தமிழக அரசின் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தில் அத்தியாவசிய பட்டியலில் அசித்ரோமைசின் வைட்டமின் –சி 238வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. ஹைட்ராக்சிக் குளோரோ குவினேன் சிறப்பு மருந்து பட்டியலில் 27வது இடத்தில் உள்ளது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், கொரோனா நோயை கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படும் மாத்திரைகளான நிலை தமிழ்நாட்டில் இதுதான்..

 ஹைட்ராக்சிக் குளோரோ குவினேன், அசித்ரோமைசின் வைட்டமின் –சி இரண்டு மாத்திரைகளும் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்திலிருந்து சமீப காலங்களில்(2019-2020) கொள்முதல் செய்யப்படவில்லை என்று தெரிகிறது.  தற்போது அரசு மருத்துவமனைகளில் இல்லை என்பதுதான் உண்மை.

 கொடோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஹைட்ராக்சிக் குளோரோ குவினேன், அசித்ரோமைசின் வைட்டமின் –சி இரண்டு மாத்திரைகளையும் விரைந்து கொள்முதல் செய்ய முயற்சிகள் மேற்க்கொள்ளப்படவில்லை.

 அரசு மருத்துவமனைகளில் சளி, இருமலுக்கான இருமல் சிரப் இல்லை. 2019ம் ஆண்டிலிருந்து இருமல் சிரப் கொள்முதல் செய்யப்படவில்லை.

 கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது  தொடர்பாக கொள்முதலுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ள மாத்திரை, மருந்து, முககவசம், வென்டிலேட்டர், கொரோனா ஆய்வு கிட்  விவரங்கள் தமிழ்நாடு மருத்துவசேவைக் கழகத்தின் இணையதளத்தில் இல்லை.  

 ஹைட்ராக்சிக் குளோரோ குவினேன், அசித்ரோமைசின் வைட்டமின் –சி இரண்டு மாத்திரைகளை தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் கொள்முதல் செய்த விவரங்கள், அரசு மருத்துவமனைகளில்  ஸ்டாக் உள்ள விவரங்கள் வெளியிடப்படுமா?

  அமைச்சர்விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுக்குள் ஈகோ பிரச்சனை, கமிசன் பிரச்சனையை ஒதுக்கி வைத்துவிட்டு தமிழக மக்களை கோரோனா வைரஸ் நோயிலிருந்து காப்பாற்ற ஹைட்ராக்சிக் குளோரோ குவினேன், அசித்ரோமைசின் வைட்டமின் –சி,  மாத்திரைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுங்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளை மக்கள்செய்திமையம் கேட்டுக்கொள்கிறது.

 கொரோனா வைரஸ் சமூக வைரலாக பரவும் போது, இந்த இரண்டு மாத்திரைகளால் கட்டுப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..

Comments

comments

About mani bharathi

Check Also

தமிழக அரசின்… வருவாய்த்துறை & சுகாதாரத்துறை கொரோனா நிதி ஒதுக்கீடுகளில் தொடரும் மர்மம்… காவல்துறைக்கு ரூ6கோடி எதற்கு?…

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறையிலும் கொரோனா தொடர்பான நிதி ஒதுக்கீடு அரசாணைகளில் மர்மம் தொடருகிறது. பல …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *