Breaking News
Home / பிற செய்திகள் / தமிழகத்திலிருந்து… கோரோனா வைரஸ் தப்பி ஓட்டம்…

தமிழகத்திலிருந்து… கோரோனா வைரஸ் தப்பி ஓட்டம்…

கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த, இந்தியா முழுவதும் ஊரடங்கு, 144 தடையுத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முக கவசம் அணியுங்கள், சோப்பை போட்டு தினமும் பல முறை கைகழுவுங்கள், வீட்டில்  இருங்கள், வெளியே போகாதீர்கள் என்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் பிரதமர் மோடி வரை அறிவித்துள்ளார்கள்..

 கோரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த பல ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டு வரும் நிலையில், கோவில்களில் நடக்கும் யாகத்தால் தமிழகத்திலிருந்து கோரோனா வைரஸ் தப்பி ஒடிவிட்டது. இதனால்  தமிழக மக்கள், தமிழக அரசு நிர்வாகமும் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாக மக்கள் நினைக்க தொடங்கிவிட்டால், நிலைமை மோசமாகிவிடும்.

 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வேண்டுகோளின் படி கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த  திருச்செந்தூர் முருகன் கோயிலில் 30.3.2020 தன்வந்தரி யாகம் நடத்தப்பட்டது.

 1.4.2020 முதல் 4.4.2020 வரை தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து கோயில்களிலும் கோரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த யாகம் நடத்த முதல்வர் வாய்மொழி உத்தரவிட்டார்.

 திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் தன்வந்தரி யாகம் 1.4.2020 காலை தொடங்கியது. அடுத்து புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகாதம்பாள் திருக்கோயில், பொன்னமராவதி ஆவுடைநாயகி சமேத ஸ்ரீ ராஜேந்திர சோழீஸ்வரமுடையார் திருக்கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், தூத்துக்குடி சிவன்கோயில்  என தமிழகத்தில் உள்ள அனைத்து  கோவில்களில்  தன்வந்தரியாகம், ரூத்ர ஹோமம், மிருத்தியுஞ்சய யாகம் பல யாகங்கள் நடக்கிறது..

 இந்த யாகங்கள் அறிவியலை கேலிக்குத்தாகிவிட்டது. அறிவியல்படி நடந்துகொள்ளவேண் டும் என்று ஒரு பக்கத்தில் அரசே அறிவித்துக்கொண்டு இருக்கையில், இன்னொரு பக்கத்தில்  மூடத்தனத்தின்பக்கம் ஓர் அரசுத் துறையே, மக்களை இழுத்துச் செல்லுவது அரசுக்கு எதிரான – ஆபத்தான நடவடிக்கை அல்லவா! யாகம்தான் நடக்கிறதே, நாம் எப்படியும் நடந்துகொள்ளலாம் என்ற தவறான நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஊட்டலாமா? இப்படி கேள்விகள் எழுந்துள்ளது.

   கோவில்களில் யாகம் நடத்துவதால் தமிழகத்திலிருந்து கோரோனா வைரஸ் தப்பி ஒடிவிடும் என்று மூட நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, கோரோனா வைரஸ் நோயை சமூக பரவலாக மாறிவிடாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Comments

comments

About mani bharathi

Check Also

தமிழக அரசின்… வருவாய்த்துறை & சுகாதாரத்துறை கொரோனா நிதி ஒதுக்கீடுகளில் தொடரும் மர்மம்… காவல்துறைக்கு ரூ6கோடி எதற்கு?…

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறையிலும் கொரோனா தொடர்பான நிதி ஒதுக்கீடு அரசாணைகளில் மர்மம் தொடருகிறது. பல …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *