Breaking News
Home / பிற செய்திகள் / ஒரங்கட்டப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்… விஜயபாஸ்கர் VS உமாநாத் ஐ.ஏ.எஸ்…

ஒரங்கட்டப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்… விஜயபாஸ்கர் VS உமாநாத் ஐ.ஏ.எஸ்…

கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டியூட்டரில் பதிவு, பத்திரிகையாளர் சந்திப்பு, அரசு மருத்துவமனைகளில் ஆய்வு என வலம் வந்தார். ஆனால் டியூட்டரில் செய்திகள் பதிவு செய்த போதும், பத்திரிகையாளர் சந்திப்பின் தான்.. தான்.. என்று தான் மட்டுமே செயல்படுவது போல் பேட்டியளித்தார். இதனால் ஒரங்கட்டுப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கமிசன் பிரச்சனையால் கொரோனா உபகரணங்கள் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதால், அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரங்கட்டப்பட்டார் என்பதுதான் உண்மை.

  முக கவசம், வென்டிலேட்டர், கொரோனா ஆய்வு செய்யும் டெஸ்ட் கிட் கொள்முதல் செய்வதில் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் உமாநாத் ஐ.ஏ.எஸ் உடன் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் சரவணன் மூலம் கொரோனா கொள்முதல் தொடர்பாக கமிசன் 30-40 சதவிகிதம் வரை கேட்டதால், கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

 மேலும் டாக்டர் செல்வராஜ், ராமச்சந்திரசேகர், டாக்டர்சித்தரஞ்சன் ஆகியோர் மூலம் உமாநாத் ஐ.ஏ.எஸ்க்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது.

  இதை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரங்கட்டுப்பட்டுவிட்டார். ஆனால் ஊரடங்கு உத்தரவு, 144 தடையுத்தரவு செயல்பாட்டுக்கு வந்து 8நாட்களாகியும், கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முக கவசம், வென்டிலேட்டர், கொரோனா ஆய்வு செய்யும் டெஸ்ட் கிட்  கொள்முதலுக்கு ஆர்டர் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

  தினமும் முதல்வரும், தலைமைச் செயலாளரும் ஆர்டர் கொடுத்திருப்பதாக பேட்டி அளித்துக்கொண்டு இருக்கிறார்கள்..

 31.3.2020 ஆளுநர் அவர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ், சுகாதாரத்துறை செயலாளர் பீலாராஜேஷ்தாஸ் ஐ.ஏ.எஸ் மூவரும் சந்தித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆளுநரிடம் விளக்கினார்கள். ஆளுநர் சந்திப்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் இடம் பெறவில்லை.

  மேதகு ஆளுநர் அவர்களுக்கு சின்ன வேண்டுகோள்… கொரானா தொற்று நோய் கட்டுப்படுத்துவது தொடர்பாக முக கவசம், வென்டிலேட்டர், கொரோனா ஆய்வு செய்யும் டெஸ்ட் கிட்  உள்ளிட்டவைகளை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது தொடர்பாக விரைவாக கொள்முதல்  செய்ய, நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

  கொரோனா தொற்று நோய் சமூக பரவலாக மாறக்கூடிய நிலையில், தமிழக மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள் என்று மேதகு ஆளுநர் அவர்களை  மக்கள்செய்திமையம் கேட்டுக்கொள்கிறது.

Comments

comments

About mani bharathi

Check Also

தமிழக அரசின்… வருவாய்த்துறை & சுகாதாரத்துறை கொரோனா நிதி ஒதுக்கீடுகளில் தொடரும் மர்மம்… காவல்துறைக்கு ரூ6கோடி எதற்கு?…

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறையிலும் கொரோனா தொடர்பான நிதி ஒதுக்கீடு அரசாணைகளில் மர்மம் தொடருகிறது. பல …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *