Breaking News
Home / பிற செய்திகள் / அனாதையான பூந்தமல்லி நகராட்சி.. கொரோனா குழுவில் சமூக ஆர்வலர்கள் எங்கே?- முடங்கி போன கண்காணிப்பு குழு…

அனாதையான பூந்தமல்லி நகராட்சி.. கொரோனா குழுவில் சமூக ஆர்வலர்கள் எங்கே?- முடங்கி போன கண்காணிப்பு குழு…

பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் முடங்கி போய்விட்டது. கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை வார்டு அளவில் குழு அமைத்து கண்காணிக்க 21 வார்டுகளிலும் குழு 25.3.2020ல் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குழுக்கள் செயல்படவே இல்லை.  நகராட்சி அலுவலகத்தில் உட்கார்ந்துக்கொண்டு வீடியோகான்பரன்சி முறையில் கண்காணிக்கிறார்களா?

 21வார்டுகளிலும் அமைக்கப்பட்ட குழுவில் சமூக ஆர்வலர்கள், குடியிருப்போர் நல சங்கம், முன்னாள் கவுன்சிலர்கள் இப்படி ஒருவரும் இடம் பெறவில்லை. திருவேற்காடு நகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல அமைப்புகளை சேர்ந்தவர்கள்  இடம் பெற்றுள்ளார்கள்.

 21 வார்டுகளிலும் அமைக்கப்பட்ட குழு உறுப்பினர்கள், கண்காணிப்பாளர்கள், செயல்படவே இல்லை.  நகராட்சி நிர்வாகம் ஆணையருக்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் குழு அமைக்கப்பட்ட மூன்று பக்க நகலை அனுப்பிவிட்டார்கள் அவ்வளவுதான்..

 இதில் என்ன வேடிக்கை என்றால்.. பூந்தமல்லி நகராட்சியில் குப்பைகளை அகற்றுவதாக மாதா, மாதம் ரூ24 இலட்சம் பில் வாங்கும் Ourland engineering works pvt ltd பணியாற்றும் இருவர் குழுவில் இடம் பெற்றுள்ளார்கள். ஆனால் சமூக ஆர்வலர்கள் இடம் பெறவில்லை.

 25.3.2020 முதல் 1.4.2020 இன்று காலை 9மணி வரை  வார்டுகளுக்கான குழுவில் இடம் பெற்றவர்கள், கண்காணிப்பாளர்கள் ஒருவர் கூட வார்டுகள் பக்கம் தலையைகூட காட்டவில்லை. வார்டுகளில் என்ன நடக்கிறது என்று தெரியாமல், பொய்யான தகவலை தினமும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்புவதுதான் வேதனையாக உள்ளது.

   பூந்தமல்லி நகராட்சியில் கொரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை குழுக்கள் செயல்படவே இல்லை. Ourland engineering works pvt ltd ஒரு நாள் மட்டுமே  ஏனோ..தானோ என்று கிருமி நாசினி தெளித்தார்கள்.. அவ்வளவுதான்…

  பூந்தமல்லி நகராட்சி கொரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை குழுக்கள் செயல்படவில்லை, எந்த பக்கம் திரும்பினாலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், நகராட்சி நிர்வாக ஆணையருக்கும் ஆதாரங்களுடன் புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது..

Comments

comments

About mani bharathi

Check Also

தமிழக அரசின்… வருவாய்த்துறை & சுகாதாரத்துறை கொரோனா நிதி ஒதுக்கீடுகளில் தொடரும் மர்மம்… காவல்துறைக்கு ரூ6கோடி எதற்கு?…

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறையிலும் கொரோனா தொடர்பான நிதி ஒதுக்கீடு அரசாணைகளில் மர்மம் தொடருகிறது. பல …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *